Sms ch 47 சேற்றில் முளைத்த செந்தாமரையோ
அத்தியாயம் 47
காலை சிற்றுண்டி சாப்பிட நந்தன் அழைக்க சத்யா மறுக்கவில்லை. அவன் கோபத்தை அதிகப்படுத்த அவள் விரும்பவில்லை. சாப்பிட்டு முடித்ததும் அங்கே இருந்த கம்ப்யூட்டரில் நந்தன் சில ஆபீஸ் வேலைகளை பார்த்துக்கொண்டிருந்தான். அன்று நந்தனுக்கு call செய்ய மொபைல் எடுத்தது தான் கடைசியாக அவள் மொபைலை உபயோக படுத்தியது. அதன் பிறகு மொபைலை அவள் பார்க்கவில்லை. நான் தான் உன் மொபைலை வைத்திருக்கிறேன், தருண் வள்ளியிடம் பேசுவதென்றால் என் மொபைலில் இருந்து பேசிக்கொள்ளலாம், அது தான் இப்போதைக்கு safe என்று சொல்லி இருந்தான் நந்தன். ஆனால் நேற்று ஷ்யாம் பற்றி எல்லாவற்றையும் சொல்லி அழும் வரை அவளுக்கு மற்ற சிந்தனைகள் எதுவும் வரவில்லை. நேற்று அழுது முடித்த பிறகு ஏதோ பாரம் இறங்கியது போல் இருந்தது. தருணுடன் பேச வேண்டும், வள்ளி அக்கா, பாட்டியிடம் பேச வேண்டும் போல் இருந்தது. காலையிலேயே அவனிடம் முறைத்துக்கொண்டதில் அவன் முகம் கடுகடு என்று இருக்கிறது. இப்போது எப்படி அவனிடம் மொபைல் கேட்பது என்ற குழப்பத்தில் பால்கனி சென்று அங்கும் இங்கும் நடந்து கொண்டிருந்தாள் சத்யா.
யாரோ calling bell அடிக்க நந்தன் மொபைலை எடுத்து பார்த்துவிட்டு door peephole வழியாக பார்த்தான். சத்யா சேலையை நன்றாக போர்த்திக்கொண்டு கேள்வியாக பார்த்துக்கொண்டிருந்தாள். நந்தன் கதவை திறக்க இரண்டு பெண்கள் இரண்டு பெரிய கட்டை பைகளுடன் நின்றிருந்தனர்.
“சார் நீங்க குடுத்த order படி எல்லாம் இருக்கான்னு செக் பண்ணிக்கோங்க” என்று பையை நீட்டினாள் ஒருத்தி.
“நீங்க measurement எடுக்கணும் இல்லை?” என்றான் நந்தன்.
“ஆமாம் சார்”
“அப்படின்னா உள்ள வாங்க” என்று அந்த இரு பெண்களையும் உள்ளே அழைத்து கதவை மூடிவிட்டு சோஃபாவில் உட்கார சொன்னான் இருவரையும்.
“சத்யா, நீ இந்த ready made எல்லாம் ஒரு முறை போட்டு பார்த்துவிடு, suppose ஏதாவது alterate செய்ய வேண்டும் என்றால் அவர்களிடம் திருப்பி கொடுத்து செய்ய சொல்லிவிடலாம்”
“சரி” என்று தலை அசைத்து பைகளை திறந்து பார்த்துக்கொண்டே பாத்ரூம் நோக்கி நடந்தாள் சத்யா. குழப்பமாய் திரும்பி “இதுல சுடி எல்லாம் இருக்கே?” என்றாள்.
“ஆமாம் நான் தான் order பண்ணினேன், போட்டு பாரு, பிடிக்கவில்லை என்றால் திருப்பி கொடுத்து விடு” என்றான் எந்த உணர்ச்சியும் இல்லாமல்.
சத்யாவிற்கு கொஞ்சம் கோபம் வந்தது. நான் என்ன dress போட வேண்டும் என்று எனக்கு தெரியாதா? இவனோடு இருப்பதால் எல்லாமே இவன் இஷ்டம் தானா? என்று மனதிற்குள் நினைத்துக்கொண்டே பாத்ரூம் சென்றாள். சுடியை நான் போட்டு பார்த்தால் தானே என்று நினைத்துக்கொண்டே ready made blouses எடுத்து போட்டு பார்த்தாள். எல்லாமே ஏதோ ஒருவகையில் fit ஆகவில்லை. ஒன்று தோளில் இருந்து சரிந்தது, மற்றொன்று இடுப்பு லூசாக இருந்தது, இப்படி எந்த ready made blouse ம் அவளுக்கு fit ஆகாமல் இருந்தது. ஆனால் இன்று குளித்துவிட்டு வேறு dress போட்டால் தான் நன்றாக இருக்கும் என்று தோன்றியது. வேறு வழி இல்லாமல் நந்தன் order செய்திருந்த சுடிதார்களை எடுத்தாள். Colour, design எல்லாம் நல்லாத்தான் இருக்கு என்று நினைத்துக்கொண்டே போட்டு பார்த்தாள். அவன் வாங்கி இருந்த 5 சுடிதார்களில் மூன்று சுடிதார்கள் அவளுக்கு பொருத்தமாக இருந்தது. “வேற வழி இல்லை, அவன் விருப்பப்படி சுடிதார் தான் போட வேண்டும் போல” என்று நினைத்தவள் அவன் order செய்திருந்த nighty, kurtis, jeans, leggins கூட போட்டு பார்த்தாள். எல்லாமே fit ஆக நன்றாக தான் இருந்தது. சத்யா order செய்திருந்த உள்ளாடைகள், மூன்று சுடிதார்கள் ஒரு பையிலும் மற்றவற்றை வேறு பையிலும் போட்டுக்கொண்டு வெளியே வந்தாள்.
வெளியே வந்தவள் ஏதோ ஜூஸ் கொடுத்து நந்தன் அவர்களை உபசரித்து சிரித்து பேசிகொண்டிருப்பதை பார்த்தாள். “இப்போ முகத்துல அந்த கடுகடுப்பு எங்க போச்சு? அந்த பெண்கள் அழகாக இருக்கிறார்கள், உடனே ஜூஸ் எல்லாம் கொடுத்து உபசரணை நன்றாக தான் நடக்கிறது” என்று மனதிற்குள் நினைத்துக்கொண்டாள்.
அப்போது தான் அவள் வந்துவிட்டதை உணர்ந்த நந்தன் முகத்தை மீண்டும் சீரியசாக வைத்துக்கொண்டு கேட்டான். “எல்லாம் ஓகேவா?” என்றான்.
“Ready made blouse எதுவும் fit ஆகல, வாங்கி இருக்கும் sarees க்கு நீங்களே blouse தைத்து கொடுத்து விடுங்கள்” என்று அந்த பெண்களை பார்த்து சொன்னாள். பிறகு “இந்த பையில் உள்ள dress கள் வேண்டாம், 3 சுடி மட்டும் வைத்துக்கொள்கிறேன்” என்றாள்.
நந்தன் jeans, kurtis, nighty இருந்த பையை வாங்கி பார்த்துவிட்டு “இதெல்லாம் போட்டு கூட பாக்கலையா?” என்றான்.
“போட்டு பாத்தேன்”
“Fit ஆகுதா இல்லையா?”
“ஆச்சு ஆனா எனக்கு வேண்டாம்”
நந்தன் அவளை ஒரு பார்வை பார்த்துவிட்டு “பரவால்ல இருக்கட்டும்” என்று அந்த பையை கொண்டு போய் cupboard ஐ திறந்து வைத்தான்.
“நீங்க measurements எடுத்து கொள்ளுங்கள்” என்று சொல்லி பால்கனி சென்றான்.
அந்த பெண்கள் சத்யாவிற்கு measurements எடுத்து விட்டு விடை பெற்றனர். சத்யா குளித்துவிட்டு ஒரு சுடியை அணிந்து கொண்டாள். உள்ளுக்குள் அழகாக தான் செலக்ட் செய்கிறான் என்று பெருமை பட்டுக்கொண்டாள். குளித்து வெளியே வந்து அவன் பார்த்து ஏதாவது கமெண்ட் செய்வான் என்று எதிர்பார்த்தாள். ஆனால் அவன் அவளை பார்த்தது போலவே காட்டிக்கொள்ளவில்லை. கம்ப்யூட்டரில் கண்ணும் கருத்துமாக வேலை செய்து கொண்டிருந்தான். அந்த பெண்களிடம் மட்டும் எப்படி சிரித்து சிரித்து பேசினான் என்று நினைத்துக்கொண்டாள்.
மதியம் 2 மணி ஆகியது. சத்யாவிற்கு பசித்தது. சாப்பாடு order பண்ண மாட்டான் போல. கிட்சேனில் ஏதாவது இருக்குமா என்று சுற்றி வந்தாள். ஜூஸ், ஸ்னாக்ஸ் எல்லாம் இருந்தது. ஆனால் எடுத்து சாப்பிட கெளரவம் இடம் கொடுக்கவில்லை.
நந்தன் ஒரு வழியாக கம்ப்யூட்டரை விட்டு எழுந்து சென்று வாசலில் வைக்க பட்டிருந்த சாப்பாட்டை எடுத்து வந்து வைத்து சாப்பிட ஆரம்பித்தான். “என்ன அவன் மட்டும் சாப்பிடுகிறான், நம்மை சாப்பிட அழைக்க மாட்டானோ?” என்று உள்ளுக்குள் பசியுடன் அவன் சாப்பிடுவதை ஓரக்கண்ணால் பார்த்தாள்.
“சாப்பிட வா ன்னு ஒவ்வொரு முறையும் உன்னை அழைக்க வேண்டுமா? வா வந்து சாப்பிடு” என்றான். “ச்ச இதற்கு அவன் அழைக்காமலே இருந்து இருக்கலாம்” என்று தயங்கி நின்றாள். “வரப்போறியா இல்லை நானே சாப்பிட்டு விடவா? சூப்பரா இருக்கு எல்லாமே, சீக்கிரம் வா” என்றான். சத்யா அதற்கு மேல் கௌரவம் பார்க்காமல் சாப்பிட்டாள். அவள் சாப்பிட்டு முடித்ததும் நந்தன் வள்ளிக்கு வீடியோ call செய்து சத்யாவிற்கு கொடுத்தான். “நாம் கேட்காமல் அவனே call செய்துவிட்டானே” என்று சந்தோஷப்பட்ட படியே வள்ளி, தருண், பாட்டி என்று அனைவரிடமும் பேசினாள். பயப்பட ஒன்றுமில்லை என்று அவர்களை தேற்றினாள். தருண் அவளை நேரில் பார்க்க வேண்டும், வா அம்மா என்று ஏக்கமாக கூறினான். “அம்மா சீக்கிரமா வரேன் தருண், feel பண்ணாதே” என்று சமாதானம் செய்தாள். நந்தனும் சிறிது நேரம் தருணிடம் பேசினான். “அங்கிள் உன்னை சீக்கிரமா கூப்டுட்டு வந்துடுறேன்” என்று உறுதி கூறினான். எல்லோரிடமும் பேசிய பிறகு தான் சத்யாவிற்கு தெம்பாக இருந்தது. “thanks” என்றாள் நந்தனிடம். அவன் பதில் எதுவும் சொல்லாமல் அவளை ஏற இறங்க ஒரு பார்வை பார்த்தான். சத்யா dress ஒழுங்காக உள்ளதா, ஏன் இப்படி பார்க்கிறான் என்று அவளும் செக் செய்தாள். “எல்லாம் நல்லாத்தானே இருக்கு, அப்புறம் ஏன் இப்படி பார்க்கிறான்” என்று நினைத்துக்கொண்டாள்.
நந்தன் சோஃபாவில் உட்கார்ந்து “சத்யா இங்க வா” என்று அவளை அருகில் அமரும்படி அழைத்தான். “இவன் பேசாவிட்டாலும் கஷ்டமாக உள்ளது, பேசினாலும் பயமாக உள்ளது” என்று நினைத்தவள் மீண்டும் அவன் கோபத்துக்கு ஆளாக விரும்பாமல் சோஃபாவில் கொஞ்சம் தள்ளி அமர்ந்தாள். “சரி சொல்லு” என்றான். அவள் புரியாமல் “என்ன சொல்லனும்?” என்றாள். “ஏதாவது சொல்லு, ஏதாவது கேக்கறதுன்னா கேளு” என்றான். “அவருடைய பெண்கள் சகவாசம் பற்றி கேட்கலாமா? கேட்டு என்ன ஆகப்போகிறது? ஒருவேளை நமக்காக பெண்கள் சகவாசத்தை விட்டுவிட்டேன் என்று சொன்னால் நாம் அவரிடம் மொத்தமாக நம்மை இழந்து விடுவோம், ஷ்யாம் வெளியே இருக்கும் வரை என்னால் அவருக்கு ஆபத்து அதிகம் தான், அதனால் பெண்கள் விஷயத்தில் அவர் எப்படி என்று கேட்காமல் இருப்பதே நல்லது” என்று நினைத்து கொண்டிருக்க “சரி நீ சொல்லு, நீ ஒரே மகள் தானா உன் பெற்றோருக்கு?” என்றான்.
“ஆமாம்” என்றாள்.
“பஞ்சாப்லேயே தான் நீ பிறந்து வளர்ந்தது எல்லாமா?”
“ம்ம்ம்...”
“அம்மா, அப்பா எப்போ?” என்று தயங்கினான்.
“அப்பா நான் ஸ்கூல் முடிச்ச time ல ஒரு accident ல இறந்துட்டாரு, அம்மா தப்பிச்சதே பெரிய விஷயம் தான், அப்போ காலேஜ் எல்லாம் சேர முடியாம, அம்மா பிசினஸ் முடங்கி, கொஞ்சம் சொத்துக்களை விற்று அம்மாவுக்கு டிரீட்மென்ட் பார்த்து என்று கொஞ்சம் நெறையவே கஷ்டப்பட்டோம், அப்பவும் பாட்டி, வள்ளி அக்கா எல்லாம் தான் துணையா இருந்தாங்க, அப்புறம் அம்மா கொஞ்சம் தேறி வந்த பிறகு தான் நான் காலேஜ் சேர்ந்தேன்”
“எப்பவுமே பாட்டி, வள்ளி அக்கா உதவியை பற்றி சொல்கிறாய், சொந்தகாரங்க யாராவது இருக்கணுமே? அவர்கள் யாரும் உதவவில்லையா?” என்றான்.
“அப்பா side யாரும் இல்லை, அம்மா side பெரிய family ன்னு எப்பவாவது பேசும் போது சொல்லுவாங்க, அம்மா அவங்க வீட்டுல கடைசி செல்ல மகளாம், அவங்க அண்ணன்கள், அக்கா எல்லாரும் ரொம்ப பாசமா இருப்பாங்களாம், அம்மா அப்பாவை love பண்ணினதால அவங்க வீட்டுல நிச்சயம் பண்ணின மாப்பிள்ளையை விட்டுட்டு எதுவும் சொல்லாமல் அப்பாவுடன் பஞ்சாபிற்கு ஓடி வந்துவிட்டார்களாம், அதனால் அவர்கள் பிறந்த வீட்டாருடன் எந்த தொடர்பும் இல்லை, அவர்களை பற்றி பேசினால் கஷ்டமா இருக்கும்னு அம்மா அதிகமா பேசினதே இல்லை, ஆனால் சென்னையில் என் தாய் வீட்டு சொந்தங்கள் இருக்கிறார்கள் என்று தெரியும், ஆனால் யார், என்ன என்று தெரியாது”
“ஓஹ் I see. அம்மா எப்போது எப்படி இறந்தார்கள்?”
சத்யாவின் கண்கள் கலங்கின. “ஹேய் sorry, அழாத, கஷ்டமா இருந்தா அதை பற்றி பேச வேண்டாம்” என்றான்.
“அம்மாவை கடைசியாக ஒருமுறை பார்க்க கூடவில்லை, அவர்கள் இறந்துவிட்டாரகள் என்பதே எங்களுக்கு நெறைய நாட்கள் கழித்து தான் தெரியும்” என்று விசும்பியவள் ஒரு பக்கமாக போட்டிருந்த துப்பட்டாவை எடுத்து வைத்து கண்களை துடைத்து கொண்டாள். இருந்தும் கட்டுப்படுத்த முடியாமல் அழுகை வந்தது. நந்தன் அதற்கு மேல் தள்ளி இருக்க முடியாதவனாய் அவள் அருகில் நகர்ந்து அமர்ந்து அவளை தன் தோளில் சாய்த்து கொண்டான். “ஷ்ஷ்ஷ்.... சத்யா உன் உடல் மன நிலையை மறந்து இதை பற்றி கேட்டுவிட்டேன், please அழாத, நாம இதை பற்றி வேறு ஒருநாள் பேசிக்கொள்ளலாம்” என்றான்.
“இல்லை நான் சொல்லிடுறேன்” என்றாள் அவன் தோள்களில் சாய்ந்தபடியே. அவள் தலையை தடவி கொடுத்தபடியே “சரி சொல்லு” என்றான். “எங்களை எல்லாம் மும்பைக்கு முதலில் போகும் படி சொல்லிவிட்டு பஞ்சாபில் வீட்டை விற்றுவிட்டு தானும் வருவதாக சொல்லி அம்மா பஞ்சாபில் தங்கினார்கள், ஆனால் திடீர்னு அவங்ககிட்ட இருந்து call, மெசேஜ் எதுவும் இல்ல, நேரில் சென்று பார்த்துவிட்டு வந்துவிடலாம் என்று சொல்லி flight ல் டிக்கெட் புக் செய்துவிட்டு வந்தேன், அந்த நேரம் தான் என்னையும் கடத்தி கொண்டு போய் அந்த ரெட் லைட் சம்பவம் நடந்தது, அப்புறம் அம்மா என்ன ஆனார்கள் என்று நாங்கள் தேட ஆரம்பித்த போது தான் முருகன் அண்ணா அந்த நோட்டீஸ் பேப்பரில் அம்மாவை பற்றிய செய்தியை அஹமதாபாத்தில் பார்த்து ஹாஸ்பிடல் சென்று விசாரித்தார்கள். அம்மா பஞ்சாபில் இருந்து மும்பைக்கு train ல் வரும் போது நெஞ்சுவலி வந்துள்ளது. அதே train ல் வந்த துரைசாமியும் இன்னொரு புண்ணியவதியும் அம்மாவை ஹாஸ்பிடலில் சேர்த்து இருக்கிறார்கள், ஆனால் துரைசாமி சேர்த்துவிட்டு அங்கிருந்து சென்று விட்டாராம், அம்மா பிழைக்கவில்லை, அம்மாவிடம் எந்த பெட்டியும் bag, மொபைல் எதுவும் இல்லாததால் யாரை contact செய்வது என்று ஹாஸ்பிடலில் தெரியவில்லை போல, ஆனால் எப்படியோ அந்த டாக்டருக்கு அம்மாவையும் அவர்கள் பிறந்த வீட்டையும் தெரிந்து உள்ளது, அவர்கள் பிறந்த வீட்டிற்கு call செய்து சொல்லி அம்மாவுடைய உடன்பிறந்த அண்ணன் வந்து அம்மாவின் உடலை வாங்கிக்கொண்டு இந்த நோட்டீஸ் போட்டு அவர்கள் நம்பரை ஹாஸ்பிடலிலும் கொடுத்து விட்டு சென்றிருக்கிறார்கள், கடைசி வரை அம்மாவின் முகத்தை நான் பார்க்கவில்லை” என்று சத்யா தேம்பி தேம்பி அழ “உன் அம்மா அப்பா பேர் என்ன?” என்றான். “அம்மா பேர் கவிதா, அப்பா பேர் ரவிச்சந்திரன்”. நந்தன் தன் நெஞ்சில் சாய்ந்திருந்தவளை கீழே குனிந்து பார்த்தான். அவள் முகம் முழுமையாக தெரியாததால் அவள் முகத்தை நிமிர்த்தி நன்றாக பார்த்தான். “என் அத்தை மகளா இவள்?” என்று மனதிற்குள் ஆச்சர்யமும் மகிழ்ச்சியும் நிரம்ப நினைத்தான்.
சிறிது நேரம் கழித்து “ஆமாம் அவங்க நம்பர் கொடுத்து இருந்தார்கள் அல்லவா? நீ ஏன் அவர்களுக்கு call செய்யவில்லை?” என்று குழப்பமாய் கேட்டான்.
“அம்மா சொல்வார்கள், நிச்சயம் முடிந்து நான் ஓடிவந்து விட்டேன், என் வீட்டார் எவ்வளவு அவமானப்பட்டார்களோ என்று, அப்பா அவர்களுடன் பேசலாம் என்று சொன்னால் கூட அவர்கள் முகத்தில் எப்படி விழிப்பேன் என்று அம்மா feel பண்ணுவார்கள், எனக்கு மும்பையில் பேர் கெட்டுவிட்டது, அந்த நிலையில் அவர்கள் என்னை பார்த்திருந்தால் தாய் ஓடிப்போனாள், மகள் அதற்கும் மேல் பேர் கெட்டு நிற்கிறாள் என்று அம்மாவின் வளர்ப்பை பற்றி ஏதாவது சொல்லி விடுவார்களோ என்று பயமாக இருந்தது, என்னால் அம்மாவிற்கு கெட்ட பெயர் வேண்டாம் என்று அவர்கள் நம்பரை முருகன் அண்ணன் கொடுத்த போது கிழித்து போட்டு விட்டேன்” என்றாள்.
“I see” என்ற நந்தன் சிறு அமைதிக்கு பின் அவளை இன்னும் இறுக்கி அணைத்தான். சத்யாவின் மூளை அவன் அணைப்பிலிருந்து விலகு என்று சொன்னாலும் அவள் இதயம் விலகாதே என்று சொல்லியது. “கடைசி நிமிஷத்துல அம்மா எப்படி எல்லாம் கஷ்டப்பட்டாங்களோ, நான் அவங்க பக்கத்துல இல்லாம போய்ட்டேன்” என்று மீண்டும் அழுகை அதிகமானது. நந்தனுக்கும் கண்கள் கலங்கின. “ஆனால் பரவாயில்லை, அவர்கள் அனாதையாக போகாமல் அவர்கள் அண்ணன் வந்து உடலை வாங்கி சென்று விட்டார்கள், அந்த மட்டும் எனக்கு ஆறுதல் தான்” என்று சொல்லி கண்ணீரை துடைத்து கொண்டாள்.
நந்தன் மீண்டும் அவள் முகத்தை உயர்த்தி அவளை பார்த்தான். சத்யா “ஏன் இப்படி பார்க்கிறான்?” என்று புரியாமல் விழித்தாள். அவன் பார்வையை எதிர்கொள்ள முடியாமல் கீழே குனிந்தவளை குனிய விடாமல் முகத்தை தாங்கி பிடித்து பார்த்துக்கொண்டே இருந்தான். “ஏன் இப்படி பாக்குறீங்க?” என்று அதற்கு மேலும் பொறுக்க முடியாமல் கேட்டாள். நந்தன் சிறு அமைதிக்கு பின் “தெரியல உன்னை பாத்துட்டே இருக்கணும் போல இருக்கு” என்றான். அவள் முகம் சிவக்க மீண்டும் கீழே குனிய முயன்றாள். ஆனால் அவள் முகத்தை தாங்கி இருந்த அவன் கைகள் அதற்கு அனுமதி தரவில்லை. அவன் அவளை இன்னும் நெருங்கினான்.
சத்யா அவன் நெஞ்சில் கைவைத்து தடுக்க முயன்றாள். “நந்தன் please, வேண்டாம்” என்றாள். “இந்த ஒருமுறை மட்டும் தடுக்காதே சத்யா” என்று அவன் அவள் முகத்தை தனக்கு அருகே கொண்டு வர முயன்றான். ஆனால் அவள் தடுத்தாள். “Please பிறகு நான் வருத்தப்படுவேன்” என்று தயங்கினாள். ஆனால் அவன் விடவில்லை, அவளின் இதழ்களை ஆட்கொண்டான். சிறிது நேரம் கழித்து அவளை விடுவித்தவன் ஒரு சிறு அமைதிக்கு பின் “கோபமா?” என்றான். அவள் பதில் எதுவும் சொல்லாமல் கண்களை மூடி குனிந்திருந்தாள். நந்தன் ஏதோ யோசித்துவிட்டு சொன்னான். “sorry டா, நான் இங்க இருந்தா இன்னும் கூட எல்லை மீறுவேன், அது இப்போது வேண்டாம்” என்று சொல்லிவிட்டு நேரத்தை பார்த்தான். நேரம் 5 ஆகியது. மதுவிற்கு call செய்தான். “ஹேய் மது, நேரா என் flat க்கு வந்துடு.... ஆமாம் order தான், சீக்கிரம் வா.... சரி அட்ரஸ் நோட் பண்ணிக்கோ” என்றான்.
மது வந்ததும் “என்ன சத்யா? பையன் ரொம்ப சேட்டை பண்றானா? அதான் அவனை துரத்தி விடுகிறாயா?” என்று கிண்டலாய் கேட்க சத்யா பதில் எதுவும் சொல்லாமல் குனிந்து நின்றாள். “சரி சரி நீ கிளம்பு, நல்ல முடிவு தான், நானே நினச்சேன், அந்த அப்பாவி பெண்ணை கொண்டு போய் flat ல் வைத்து இருக்கிறானே, அவளை என்ன பாடு படுத்த போகிறானோ?” என்று.
நந்தன் மதுவை முறைத்துவிட்டு “இப்போ தெரியுது, இந்த வாய்க்கு பயந்து தான் ராகவன் விலகி இருக்கிறான் என்று” என்றான்.
“அவனுக்கு உன்கூட bromance பண்ண தான் time இருக்கு, ஆனா போற போக்க பாத்தா உனக்கு அவன்கூட spend பண்ண time இருக்கும்னு தோணல, நல்லவேளை அவனிடம் பேச எனக்கு கொஞ்சமாவது நேரம் கிடைக்கும்” என்று சத்யாவையும் நந்தனையும் மாறி மாறி பார்த்து சொன்னாள்.
நந்தன் அவள் பேசியதை காதில் வாங்காமல் ஏதோ யோசித்துவிட்டு சொன்னான். “நாளைக்கு சத்யாவிற்கு ஹாஸ்பிடலில் review உள்ளது, நான் வந்து அழைத்து செல்கிறேன். மது இது gated apartment தான், யாரும் நம் அனுமதி இல்லாமல் செக்யூரிட்டி தாண்டி வர முடியாது, அதே போல் கதவு எல்லாமே ரொம்ப secured தான், அதனால் பயம் தேவை இல்லை, இருந்தாலும் அலட்சியமாக இருக்க வேண்டாம், ராகவனை impress செய்ய கற்று வைத்துள்ளாயே கராத்தே, kung fu என்று, அதை எல்லாம் மறந்து விடவில்லையே?” என்றான் புன்னகையுடன்.
“எல்லாமே ஞாபகம் இருக்கு brother, நீங்க கிளம்புங்க, இப்போது இந்த மெல்லிய கொடி இடையாளை உன்னிடம் இருந்து தான் நான் முதலில் பாதுகாக்க வேண்டும்” என்று சத்யாவின் இடுப்பில் கைகொடுத்து அணைத்தபடி மது கூற நந்தன் தன் கேசத்தை கோதி விட்ட படி கீழே குனிந்து புன்னகைத்து “சரி நான் வரேன்” என்றான். “அட சார் வெக்கம் எல்லாம் படுவீங்களா? கிளம்புங்க கிளம்புங்க” என்று மது அவனை துரத்தினாள். சத்யாவிற்கு நந்தனின் செய்கைகள், எல்லாவற்றிக்கும் மேலாக இப்போது அவனின் வெட்கத்துடன் கூடிய புன்னகை எல்லாமே வயிற்றை பிசைந்தன. “என்மீது ஏன் இவ்வளவு அன்பும் ஆசையுமாக இருக்கிறீர்கள்? ஷ்யாம் உங்களை ஒன்றும் செய்ய கூடாதே” என்று மனதிற்குள் தவித்தாள். நந்தன் சத்யாவை பார்த்துவிட்டு வருகிறேன் என்று தலையை அசைத்துவிட்டு புறப்பட்டான்.
Comments
Post a Comment