Sms ch 42 சேற்றில் முளைத்த செந்தாமரையோ

அத்தியாயம் 42

இதயம் ஒரு சில நிமிடங்கள் துடிக்காமல் நின்றுவிட்டு மீண்டும் எக்ஸ்பிரஸ் வேகத்தில் துடிப்பதை போல் சத்யா உணர்ந்தாள். உடலில் ரத்தம் உறைந்து கை கால்கள் மறத்த போனதாக தோன்றியது. காலை எடுத்து வைத்து ஓட முடியாதோ? கைகளை நம் பாதுகாப்பிற்கு பயன்படுத்த முடியாதோ என்ற கேள்விகள் மூளையின் ஒரு பகுதியில் ஓடிக்கொண்டிருக்க மரக்கட்டையாக நின்றாள் சத்யா. “ச்ச இது என்ன கெட்ட கனவுஎன்று நினைத்தாள், “ஆமாம் இது கனவாக தான் இருக்க வேண்டும், இவன் கனவில் தான் வரமுடியும், நேரில் வர வாய்ப்பே இல்லை, நேரில் வந்தால் நினைத்து பார்க்க முடியாத விபரீதங்கள் எல்லாம் நடக்கும், so இது கண்டிப்பாக கனவே தான்என்று இமைக்க மறந்தவளாய் உறைந்து போய் நின்று கொண்டிருந்தாள்.

 

அடடா......இப்படி உன்னை எப்போது நேரில் பார்க்க போகிறோம் என்று நான் ஏங்காத நாளில்லை சத்யாஎன்று ஷ்யாம் சத்யாவை மேலும் கீழும் பார்த்துக்கொண்டே சுற்றி வந்தான்.

 

அவன் மூச்சு காற்று அவள் தோள்களில் பட இது கனவல்ல, நிஜம் தான், நிஜமே தான், அந்த பாதகன் வந்துவிட்டான், என் அருகில் நிற்கிறான், நான் மேல் சேலை இல்லாமல்.... “ என்று சுய உணர்வு வந்தவளாய் தன்னை கீழே குனிந்து பார்த்தவள் பயந்து தன் கைகளை கொண்டு தன் மார்பகத்தை மறைத்தாள்.

 

தன் நிலையும், சூழ்நிலையும் புரிய ஆரம்பித்தது சத்யாவிற்கு. கண்கள் கலங்கின. “என் கதி அவ்வளவு தானா? செத்தால் கூட பரவாயில்லையே, இவன் என்னை என்ன செய்யபோகிறானோ தெரியவில்லையே, பக்கத்தில் கத்தி ஏதாவது இருந்தால் நாமே நம்மை குத்தி கொண்டு இறந்துவிடலாம்என்று நினைத்து தன் கண்களால் அந்த அறையை நோட்டம் விட்டாள். “ச்ச இது என்ன பைத்தியக்கார தனம்? எனக்கு ஏதாவது ஆனால் தருணை யார் பார்த்துக்கொள்வார்கள்? தருணை பார்த்துக்கொள்ள தான் வள்ளி அக்காவும், நந்தனும் இருக்கிறார்களே, நந்தன்.....நந்தன்.......ஆமாம் நந்தன் தான், எது எப்படியோ, அவன் தருண் மீது அன்பாக தான் இருப்பான், தருணை கைவிட மாட்டான்என்று வினாடிக்கு 90km வேகத்தில் ஓடிக்கொண்டிருந்த அவள் எண்ணங்கள் நந்தன் நினைவு வந்ததும் அவனையே சுற்றி வந்தன. சத்யாவின் கண்களில் இருந்து கண்ணீர் பெருக்கெடுத்தது.

 

நந்தன் போய் இருப்பாரா? கண்டிப்பாக போய் இருப்பார், என்னை தனியாக விட்டுவிட்டு போய் விட்டார், இந்த பிசாசிடம் என்னை இரையாக்கி விட்டு கிளம்பிவிட்டார்என்று மேலும் இரண்டு சொட்டுக்கள் கண்ணீரை விட்டவளிடம் இது என்ன அநியாயம் சத்யா? நீ தானே நந்தனை விரட்டினாய்?” என்று நேரம் கெட்ட வேளையில் சத்யாவின் மனசாட்சி முந்திக்கொண்டு வந்து அவளை குறை சொல்லியது.

 

என்ன சத்யா? என்னை பார்த்ததும் அப்படியே வடித்து வைத்த சிலை போல் ஆடாமல் அசையாமல் பேசாமல் பதுமையாக நிற்கிறாயே, ஆமாம் யார் அவன்? என்னையும் அவனையும் ஒப்பிட்டு பேசிக்கொண்டிருந்தாய்? என் talent எல்லாம் அவனிடம் இருக்கும் என்று தோன்றவில்லையே, அது சரி, ஒரு விஷயத்தில் உன்னை பாராட்ட வேண்டும், மும்பையில் வீடியோ காலில் சொன்னேன், நீ எனக்கு மட்டுமே சொந்தம், வேறு ஆணை நீ நினைத்து கூட பார்க்க கூடாது, மீறினால் அவன் வாழ்க்கையையும் நரகமாக்குவேன் என்று, அதை நினைவில் வைத்து காதல் சொல்ல வந்த அவனை விரட்டி விட்டுவிட்டாய் போல, எங்கே விரட்டாமல் படுக்கை அறையில் அவனை அனுமதித்து விடுவாயோ என்று ஒரு நிமிடம் பயந்துவிட்டேன், மத்தியானத்தில் இருந்து காத்திருக்கிறேன் சத்யா, எங்கே சென்று ஊர் சுற்றி விட்டு வந்தாய், அன்று மதியமே வந்துவிட்டாயே, anyhow கைகளை இப்படி குறுக்கே மறைத்துக்கொண்டு எவ்வளவு நேரம் நிற்க போகிறாய்? Relax, நான் பார்க்காததா?” என்று சிரித்தான்.

 

சத்யா உடலில் ஏதோ கழிவை தூக்கி கொட்டியதை போல உணர்ந்தாள். இவனிடம் இருந்து மானத்துடன் உயிர் பிழைத்தால் நன்றாக தேய்த்து குளிக்க வேண்டும் என்று நினைத்து கொண்டாள்.

 

நீ மட்டும் தான் சத்யா எனக்கு இவ்வளவு வேலை வைத்தவள், எங்கே எல்லாம் உன்னை தேடுவது? மும்பையில் இருந்து ஓடி வந்தாயே, கூடவே அந்த முருகனையும் அழைத்து வந்திருக்க வேண்டும் நீ, இப்போது பார் மாட்டிக்கொண்டாய், என்ன பார்க்கிறாய்? நீங்கள் எல்லாம் வந்துவிட்டீர்கள், ஆனால் அவன் பழைய இடத்திலேயே வேலை செய்து கொண்டிருந்தான், என் நண்பன் இரண்டு மாதங்களுக்கு முன் அவனை பார்த்து எனக்கு தெரிவித்தான், அவனை பின் தொடர சொன்னேன், கண்டுபிடித்து விட்டேன், என் ராசி, நீயும் தனியாக மாட்டிக்கொண்டாய், உன் மகன் இருந்தால் அவனை என்ன செய்வது என்று வேறு யோசித்து கொண்டிருந்தேன், நல்லவேளை மற்ற அரை வேக்காடுகளுடன் அவனை அனுப்பி விட்டாய், நல்ல வேலை, பணி இலகுவானது

 

சத்யா எப்படி தப்பிப்பது என்று யோசித்தாள். இந்த சின்ன அறையில் ஓடி பிடித்து கூட நேரத்தை ஓட்ட முடியாது. ஒன்று இவனை அடித்து உதைத்து விட்டு இவனை தாண்டி அடுப்படி சென்று வெளியே செல்ல வேண்டும், ஆனால் இவனை நான் அடித்து உதைப்பதற்குள் அவன் என்னை பஞ்சாக்கி பரலோகம் அனுப்பி விடுவான், எப்படியாவது இந்த அறையில் இருந்து அடுப்படி சென்றால் தப்பிக்க முடியும், ஆமாம் இந்த அறையில் இருந்து அடுப்படி தான் செல்ல முடியும், art gallery யா செல்ல முடியும்? என்று அவள் மனசாட்சி கிண்டல் செய்தது.

 

ச்ச இது வேறஎன்று தன் மனசாட்சியை சலித்துக்கொண்டவள் அடுப்படி கதவை மூடினேனா? மூடினேன், ஆனால் தாழ்ப்பாள் போட்டேனா? தெரியவில்லையே, என்னவோ நந்தனிடம் இருந்து தப்பிப்பது போல் நடந்து கொண்டேனே, இந்த பரதேசிக்கு அவன் இருந்து இருக்கலாமே, மிஞ்சி போனால் எனக்கே தெரியாமல் என் பின்னால் நின்று ஹலோ என்று சொல்லி என் இதயத்தில் பட்டாம்பூச்சி பறக்க வைத்து இருப்பான், வேறு என்ன செய்திருக்க போகிறான்?” என்று நந்தனை உயர்வாக நினைத்தாள். “என்ன திடீர் ஞானோதயம்?” என்று கேலி செய்தது அவள் மனசாட்சி. “என்னிடம் ஒருநாளும் அவன் தவறாக நடந்து கொண்டதில்லையே, எது எப்படி இருந்தாலும் மற்றவர்கள் வாய் வார்த்தையை வைத்து நான் நந்தனை சந்தேகப்பட்டிருக்க கூடாதோ?” “கஷ்டம் வந்ததும் அவன் நல்லவனாக தெரிகிறானோ?” என்று மீண்டும் அவள் மனசாட்சி கிண்டல் செய்ய அட ச்சீ, சற்று நேரம் என்னை நிம்மதியாக இருக்க விடுஎன்று சத்தமாகவே தன் மனசாட்சியை அடக்க முயன்றாள். கற்பனை செய்ய முடியாத அளவு துன்பம் வரும் போது மனிதனின் மனம் அதை எதிர்கொள்ள முடியாமல் எதுவுமே நடக்காதது போல் இருக்க முயற்சி செய்யுமாம், அப்படி தான் சத்யாவின் மனசாட்சியும் முயற்சி செய்தது போல. ஆனால் நடப்பது நடந்தே தீரும். அவள் தன் மனசாட்சியை திட்டி நிம்மதியாக இருக்க விடு என்று சொன்னதை தன்னை தான் சொல்வதாக நினைத்த ஷ்யாம் சிரித்துக்கொண்டே மேற்கொண்டு பேசினான்.

 

நிம்மதியாக தான் இருக்க போகிறோம் சத்யா, சரி வா வா நேரத்தை வீணாக்க வேண்டாம், சில மணி நேரங்கள் இந்த படுக்கையில் உல்லாசமாக இருக்கலாம், பிறகு நீ உயிரோடு இருந்தால் உன்னை பஞ்சாப் அழைத்து செல்கிறேன், அங்கே நீ எனக்கு sex slave ஆக இருப்பாய், கவலைப் படாதே, நீ என்னுடன் பிடித்து தான் படுக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை, அப்பப்போ drug கொடுக்கிறேன், பிடிக்கவில்லை என்றாலும் drug உதவியால் எல்லாவற்றையும் சந்தோஷமாக ஏற்றுக்கொள்வாய், சரி இப்போ நாம சந்தோஷமா இருக்க இந்த drug, கொஞ்சம் powerful drug தான், பழக்கம் இல்லாதவர்கள் பயன்படுத்தும் போது உயிர் போக கூட வாய்ப்பு உள்ளதுஎன்று ஷ்யாம் தன் பாக்கெட்டில் இருந்து ஒரு ஊசியையும் மருந்தையும் எடுத்து வெளியே வைத்தான்.

 

சத்யாவிற்கு உடல், கை, கால்கள் என எல்லாம் நடுங்க ஆரம்பித்தன. “சத்யா ஏதாவது செய்என்று அவள் மனசாட்சி அவளை அவசரப்படுத்தியது. கட்டிலில் அவள் கழட்டி போட்ட சேலைக்கு அடியில் தான் மொபைல் உள்ளது. அதை எப்படியாவது எடுத்து நந்தனுக்கு call செய்ய வேண்டும், இவன் பார்த்தால் மொபைலை பிடுங்கி தூக்கி எறிந்திடுவான், இவனுக்கு தெரியாமல் எப்படியாவது எடுத்து call செய்ய வேண்டும். இந்நேரம் ரொம்ப தூரம் சென்றிருப்பான், திரும்பி அவன் வருவதற்குள் இவன் என்னை என்ன வேண்டுமானாலும் செய்திருக்க முடியும், ஆனால் அரைகுறை ஆடையில் என் அலங்கோல காட்சியை அவனை தவிர வேறு யாரும் பார்க்க வேண்டாம்என்று முடிவு செய்தவளாய் அந்த சேலையை எடுத்து தன் மானத்தை காப்பது போல் மூடினாள். சேலைக்கு நடுவில் தன் ஒரு கையில் மொபைலை பிடித்து தன் சேலையினால் மறைத்துக்கொண்டு கண்கள் ஷ்யாமை பார்ப்பது போல் நடித்துக்கொண்டிருக்க கடைசியாக call செய்த நந்தனுக்கு call செய்தாள்.

 

ஷ்யாம் எதுக்கு வீணா உன் அழகை சேலையை வைத்து எல்லாம் மறைக்கிறாய் சத்யா? நான் தான் சொல்கிறேனே, நீயும் கௌஷிக்கும் ஒன்றாக இருந்த பல வீடியோக்களை பார்த்து இருக்கிறேன்என்று சொல்லிக்கொண்டே vial திறந்து கொண்டிருந்தான்.

 

சத்யா வீட்டிலிருந்து புறப்பட்ட நந்தன் அவள் வீட்டின் பின்னால் இருந்த தெருவில் காரை நிறுத்தினான். “இங்கே தான் முதன்முதலாக சத்யாவை நன்றாக பார்த்தேன், இப்படி என்னை வெறுக்கிறாளே, அவளுக்கும் என்மீது காதல் உள்ளது என்பதை எப்போது உணர்வாள், எப்போது வேண்டுமானால் உணரட்டும், அவள் உணரும் வரை காத்திருக்கலாம், ஆனால் இன்று ஏனோ அவளை தனியாக விட என் மனம் இடம் கொடுக்க மாட்டேன் என்கிறது, நான்கு நாட்களாக தனியாக இருப்பவளுக்கு இன்று மட்டும் என்ன ஆகி விடப்போகிறது?” என்று யோசித்துக்கொண்டு அமர்ந்திருந்த நந்தனுக்கு ஏனோ அந்த அடுப்படி மீண்டும் மீண்டும் நினைவில் ஓடியது. “Something wasn’t right” என்று கண்களை மூடி யோசித்து பார்த்தான். அடுப்படியை ஒருமுறை அலசி பார்த்த போது கண்ணில் ஏதோ தென்பட்டது. என்ன அது? என்று மீண்டும் மீண்டும் கண்களை மூடி யோசித்து பார்த்தான். அவ்வளவு எளிதாக பிடிபடவில்லை. அவன் காரை park செய்திருந்த இடத்தின் எதிரே இன்னொரு காரும் park செய்யப்பட்டு இருந்தது. இன்னதென்று புரியாமல் நந்தன் சில விஷயங்களை நினைத்து தவித்தான்.

 

மதியம் சத்யாவை தேர்வு மையத்தில் இருந்து அழைத்து வந்தவன் பிறகு மொபைலை தொடவே இல்லை. மொபைலை எடுத்து பார்த்தான். துரைசாமி, ராகவனிடம் இருந்து நெறைய அழைப்புகள். உடனே call செய்யவும் என்று இருவரும் மெசேஜ் அனுப்பி இருந்தனர். நந்தன் அவர்களுக்கு call செய்து பார்த்தான். இப்போது அவர்கள் எடுக்கவில்லை.

 

மறுபுறம் ஷ்யாம் பேசிக்கொண்டிருக்க சத்யா நந்தனுக்கு call செய்து கொண்டே இருந்தாள். நந்தன் அவள் call கவனிக்காமல் ராகவனுக்கு call செய்து கொண்டிருந்தான்.

 

ஷ்யாம் மருந்தை ஊசியில் ஏற்றினான்.

 

நந்தன் மீண்டும் மொபைலை passanger seat ல் வைத்துவிட்டு கண்களை மூடி யோசித்தான். “yes அடுப்படியில் தோட்டத்து கதவு சரியாக மூடாமல் இருந்தது. குறுக்கே இருந்த தாழ்ப்பாள் ஒருபுறம் உடைந்து தொங்கி கொண்டிருந்தது.” நந்தன் சத்யாவிற்கு call செய்ய மொபைலை எடுத்தான். அப்போது ராகவன் call வந்தது. Attend செய்தான். “ஹேய் நந்தா, ஒரு வாரமா ஷ்யாம் சென்னையில் இருப்பதாக அவன் மொபைல் போன் காட்டுகின்றது, அவன் இந்தியா அளவில் drug dealing ல் முக்கியமானவன் என்பதால் நாங்கள் அவனை track செய்து கொண்டிருக்கிறோம், எனக்கு இன்று தான் தகவல் கிடைத்தது, அவன் ஒரு வாரமாக சென்னையில் இருப்பதாக, அதனால் தான் மத்தியானத்தில் இருந்து உனக்கு call செய்து கொண்டிருக்கிறேன்”.

 

நந்தன் உடனே சத்யாவை பார்க்க வேண்டும் என்று காரை திருப்பினான். ப்ளூடூத் இணைப்பை கொடுத்து விட்டு ராகவனை லைனில் இருக்க சொன்னான்.

 

ஷ்யாம் கையில் ஊசியுடன் சத்யாவை நெருங்கினான். “எத்தனை முறை இந்த சேலை எல்லாம் வேண்டாம் என்கிறேன், கேட்க மாட்டேன் என்கிறாயேஎன்று அவளிடம் இருந்து சேலையை உருவ முயற்சித்தான். சத்யா சேலையை இறுக பற்றும் முயற்சியில் மொபைலை கீழே போட்டாள். “பாருடா, யாருக்காவது call செய்ய முயற்சி செய்தாயா?” என்று மொபைலை எடுத்து பார்த்தவன் பளார்ர்ர் என்று சத்யாவின் கன்னத்தில் அறைந்தான். சத்யா வலியுடன் கீழே விழுந்தாள். சேலையை அவளிடம் இருந்து பறித்து தூக்கி வேறு பக்கம் எரிந்தான்.

 

சத்யாவிற்கு பயமும் தன்னிறக்கமும் ஒன்று சேர கண்கள் குளமாகின. ஷ்யாம் அவள் முன்னால் முட்டி போட்டு அவளை நெருங்கினான். “இதோ சத்யா உன் அத்தியாயம் முடிய போகிறது, இந்த நாயிடம் சின்னா பின்னமாகி தான் உயிர் போக வேண்டும் என்று உன் விதியில் எழுத பட்டுள்ளதுஎன்று சத்யாவின் மனம் அவளை தயார் செய்தது. கௌஷிக் நினைவும் சேர்ந்து வந்தது. ஷ்யாம் அவளின் முகத்தை முகர்ந்தான். சத்யா கைகளால் அவனை தடுத்து தூரத்தில் நிறுத்த முயன்றாள்.

 

ஊசி இல்லாமல் உன்னுடைய தடைகளை உடைத்து கொஞ்ச நேரம் உன்னுடன் விளையாடிவிட்டு உன்னை அடைய முயற்சி செய்யலாமா என்று தோன்றுகிறது சத்யாஎன்று அவள் அவனை தடுக்க தடுக்க அவன் அவளின் ஒவ்வொரு பாகத்தை தொட முயன்றான். சத்யா அவனை அடிப்பது, கீறுவது என்று தன்னால் இயன்ற மட்டும் கண்களில் கண்ணீருடன் போராடிக் கொண்டிருந்தாள்.

 

அப்போது தான் கதவு தட்டும் சத்தம் கேட்டது. “சத்யா.... சத்யா....” என்று நந்தனின் குரல்.

 

புதிதாக பிறந்தவள் போல் சத்யாவின் கண்களில் மீண்டும் ஒரு நம்பிக்கை உயிர் பெற்றது. சத்யா ஏதோ சொல்ல முயற்சிக்க ஷ்யாம் அவளின் வாயில் கையை வைத்து மூடினான். அவளை தூக்கி நிறுத்தி அவளின் பின்னால் நின்று அவள் வாயை ஒரு கையால் அடைத்து இன்னொரு கையால் ஊசியை போட முயன்றான்.

 

நந்தன் இப்போது conference call ல் சத்யாவை அழைக்க முயற்சித்தான். மொபைல் ring ஆகும் சத்தம் கூட நந்தனுக்கு கேட்டது. நந்தன் மீண்டும் கதவை தட்டினான். சத்யா எப்படியாவது கதவை திறக்கலாம் என்று ஷ்யாமின் கைப்பிடியில் இருந்து திமிறி தன்னை விடுவிக்க முயன்றாள், ஆனால் முடியவில்லை.

 

சத்யா please, என்மேல என்ன கோபமா இருந்தாலும் அப்புறமாக உன் கோபங்களை காட்டு, இப்போது கதவை திறஎன்றான். ராகவன் டேய் தோட்டத்து கதவு திறந்து இருக்குன்னு சொன்னியே, அந்த வழியா நீ உள்ள போடா, நான் வந்துட்டே இருக்கேன்என்றான் மறுபுறம்.

 

ஹேய் அந்த side போக பின்னாடி தெருவில் இருந்து போக வேண்டும், அதுவும் எளிதான விஷயம் இல்லை, நான் அங்கே போய் பல வீடுகளின் உள்ளே புகுந்து அவள் வீட்டின் காம்பௌண்டை கண்டுபிடித்து வருவதற்குள் நான் இந்த கதவையே உடைத்து உள்ளே போய் விடுவேன்என்று அவன் பேசிய விஷயம் சத்யாவிற்கும் ஷ்யாமிற்கும் காதில் விழுந்தது.

 

சத்யா ஷ்யாமுடன் போராடி படுக்கை அறையின் ஜன்னலை திறந்தாள். நந்தன் உடனே அடுப்படி வாசலில் இருந்து திறக்கப்பட்ட ஜன்னலுக்கு சென்று பார்த்தான். நந்தன் ஒரு நிமிடம் உறைந்துவிட்டான். சத்யா ஷ்யாமின் கைகளை தன் வாயில் இருந்து எடுக்க முயற்சித்தாள். நந்தன் மீண்டும் வாசல் கதவிற்கு சென்று கதவை உடைக்க முயற்சி செய்தான். பழைய வீடு, பழைய கதவு என்பதால் எளிதாக உடைந்தது.

 

ஷ்யாமிற்கு வேறு வழி தெரியவில்லை.

 

சாவுடி நாயே, மீறி உயிரோடு இருந்தால் மீண்டும் வருவேன்என்று ஊசியை முழு மருந்தும் இறங்கும் வரை அவள் உடம்பில் செலுத்திவிட்டு அவளை வேகமாக தள்ளிவிட அவள் தலை சுவற்றில் மோதியது. படுக்கை அறையை விட்டு வெளியே வந்தவன் நந்தனின் மீது மோதினான். நந்தன் அவனை பிடித்து அறைய அவனும் பதிலுக்கு நந்தனை அறைந்தான். இருவருக்கும் இடையில் சண்டை வலுப்பெற சத்யா படுக்கை அறையில் நிற்க முடியாமல் தடுமாறிக்கொண்டு இருந்தாள். தலை சுவற்றில் மோதிய இடத்தில் இருந்து ரத்தம் வழிய தொடங்கியது. கைகளை தலைக்கு கொடுத்து சுழல்வது போல் தோன்றிய தலையை நிறுத்த முயற்சித்தாள். “நந்தன் நந்தன்....” என்று அவள் அழைக்க ஷ்யாமின் நெஞ்சின் மீது அமர்ந்து அவனை அடித்துகொண்டிருந்த நந்தனின் கவனம் சிதறியது. அந்த நேரத்தில் நந்தனை தள்ளிவிட்டு ஷ்யாம் தோட்டத்தின் வழியாக காம்பௌண்ட் சுவர் ஏறி குதித்து ஓடினான்.

 

நந்தன் சமாளித்து எழுந்து ஷ்யாம் ஓடிய திசையை பார்த்து கொண்டே சத்யாவிடம் வந்தான். கீழே விழ இருந்த அவளை தாங்கி பிடித்து சத்யா சத்யா என்ன ஆச்சு?” என்றான்.

 

ஊசி..... ஊஊசி.....” என்றபடியே அவன் சட்டையை பிடித்து அவன் மடியில் மயங்கி சரிந்தாள். நந்தன் ஒரு ஓரமாக கிடந்த ஊசியை பார்த்தான். “டேய் ராகவா, ஏதோ ஊசி போட்டுட்டு போயிருக்கான் டாஎன்றான் நந்தன் பதட்டமாக. “டேய் நான் வருவதற்குள் சத்யாவிற்கு ஏதேனும் ஆகிவிட போகிறது, நீ அந்த ஊசியையும், அந்த மருந்து இருந்த vial உம் கிடைத்தால் இரண்டையும் ஒரு துணியில் சுற்றி எடுத்துக்கொண்டு அவளை emergency க்கு அழைத்து செல், அங்கே forensics கிற்கும் அந்த ஊசி, vial தேவை என்று கூறி டாக்டரிடம் கொடுத்து சத்யாவிற்கு சிகிச்சையை ஆரம்பிக்க சொல், சாதாரண மயக்க மருந்தாக கூட இருக்கலாம், இல்லை fatal ஆக கூட இருக்கலாம், நான் சத்யா வீட்டில் evidence கலெக்ட் செய்து கொள்கிறேன், நீ முதலில் அவளை அழைத்து கொண்டு ஹாஸ்பிடல் போஎன்றான் ராகவன்.

 

Fatal ஆக கூட இருக்கலாம் என்ற வார்த்தைகளை கேட்ட நந்தனுக்கு ஒரு நிமிடம் ஒன்றும் புரியவில்லை. அடுத்த வினாடியே அப்படி எதுவும் ஆகாது, ஆகவும் விடமாட்டேன் என்று உறுதி கொண்டு vial தேடி கண்டுபிடித்தவன் அந்த ஊசியையும், vial ஐயும் தன் சட்டை பையில் வைத்திருந்த tissue paper ஒன்றில் எடுத்து சுற்றி வைத்தான். சத்யாவின் கன்னத்தில் தட்டி சத்யா சத்யா என்றான். அவள் அசைவற்று கிடந்தாள். அவளை பாதி தூக்கியவன் அவளை நன்றாக பார்த்துவிட்டு மீண்டும் கீழே படுக்க வைத்து அறையில் ஒரு மூலையில் கிடந்த சேலையை எடுத்து வந்து அவளின் மேல் போர்த்தி அவளை இரு கைகளாலும் தூக்கிக் கொண்டு தன் காருக்கு சென்றான்.

 

அவளை காரின் பின்சீட்டில் படுக்க வைத்துவிட்டு தன் கண்களை துடைத்துக்கொண்டு காரை ஸ்டார்ட் செய்தான். நகரத்தின் பெரிய ஹாஸ்பிடல் அது. அவளை அட்மிட் செய்துவிட்டு டாக்டரிடம் அந்த ஊசி vial கொடுத்துவிட்டு அன்று அவன் வணங்கிய சிவனை மனத்தில் கொண்டு வந்து நிறுத்தினான்.

Comments

Popular posts from this blog

Azhagu serial - Magesh - Poorna fan fiction - Episode 27 - 05/10/2018

Azhagu serial - Magesh - Poorna fan fiction - Episode 40 - 28/02/2019

Azhagu serial - Magesh - Poorna fan fiction - Episode 24 - 22/09/2018