Sms ch 9 சேற்றில் முளைத்த செந்தாமரையோ

அத்தியாயம் 9

ஞாயிறு மாலை அமைந்தகரையில் சத்யா, வள்ளி, வள்ளியின் பாட்டி உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தார்கள். சந்தையில் வாங்கிய வேர்கடலையை வேக வைத்து சின்னு தருணுக்கு சாப்பிட கொடுத்து வெளியே அவர்களை விளையாடவிட்டு இவர்களும் சாப்பிட்டு கொண்டே பேசிக்கொண்டிருந்தார்கள்.

 

சத்யா நாம சென்னைக்கு வந்து 8 மாசம் இருக்குமா?” கேட்டாள் வள்ளி.

 

ம்ம்ம் இருக்கும் காஎன்றாள் சத்யா.

 

இத்தனை மாசத்துல வீடு, நாம் வேலை செய்யும் இடம், அரசு அலுவலகங்கள், தருண் படிக்கும் பள்ளி இவற்றை தவிர நீ வேறு எங்குமே போனதில்லை, சின்னு தருண் ஆசைப்பட்டு பீச், பூங்கா என்று அழைத்தாலும் எங்களை மட்டும் அனுப்புகிறாயே தவிர நீ வர மாட்டேன் என்கிறாய், இன்னும் என்ன பயம் சத்யா?”

 

உங்களுக்கு தெரியாதா அக்கா, நெறைய கூட்டம் இருக்கும் இடங்களுக்கு சென்றால் அவனோ அவனுடைய ஆட்களோ பார்த்துவிட்டால் என்ன ஆவது?”

 

இன்னுமா அவர்கள் உன்னை தேடப்போகிறார்கள்?”

 

தேடுவார்கள் அக்கா, துரைசாமி கண்ணில் பட்டதே வயிற்றில் புளியை கரைக்கிறது, எப்போ அவன் தகவல் கொடுப்பானோ தெரியவில்லை, அதற்கு முன் அவனிடம் இருக்கும் என் சார்ந்த விஷயங்களை வாங்கிக்கொண்டு நாம் இங்கிருந்து கிளம்பி விட வேண்டும், குறைந்த பட்சம் நானும் தருணுமாவது

 

உங்கள் இருவரையும் நாங்கள் அப்படி தனியே விட்டு விடுவோமா? உனக்கு பாதுகாப்பாக நாங்கள் எப்போதும் இருப்போம் சத்யா

 

எத்தனை நாள் இருக்க முடியும் வள்ளி?” என்று பாட்டி கேட்டார்கள்.

 

ஏன் பாட்டி அப்படி கேக்குற? எப்பவுமே இருக்க வேண்டியது தான்

 

இருக்கலாம் மா, உனக்கு குடும்பம் குழந்தை குட்டின்னு இல்லாம இருந்தா இருக்கலாம், இப்பவே நீ எதுக்காக உன் புருஷன விட்டு இங்க இருக்க? சத்யாவுக்காக தான? காலம் பூராம் இப்படியே இவளுக்காக வாழாமா இருக்க போறியா?”

 

பாட்டி என்னாச்சு உனக்கு? ஏன் இப்படி பேசுற, சத்யா முகமே மாறி போச்சு பாரு

 

அவளுக்காக தான் நானும் இவ்வளவு நாள் பேச வேண்டான்னு பாத்தேன், ஆனா அவளுக்காக பாத்தா என் பேத்தி பேரன் வாழ்க்கை போய்டும் போலவே. ஏற்கனவே உன் அக்கா இந்த சின்னு பயல பெத்து போட்டுட்டு போய் சேந்துட்டா, சரி முருகன் வெளில ஒருத்திய கல்யாணம் பண்ணினா சின்னுவை சித்தி கொடுமை பண்ணுவான்னு உன்ன கட்டி வச்சேன், நீ இவளுக்காக உன் புருஷன் முருகனை விட்டுட்டு என்னையும், சின்னுவையும் கூட்டிகிட்டு இங்க வந்து உக்காந்துட்ட, அந்த பையன் முருகன் பாவம், மும்பைல கிடைக்குறத சாப்டுகிட்டு தனியா கஷ்டப்பட்டுட்டு இருக்கான்

 

பாட்டி, சத்யாவுக்கு பிரச்சனை வந்தப்போ நீயும் தான சொன்ன, சென்னை போய்டலாம்ன்னு, இன்னைக்கு ஏன் ஒரு மாதிரி பேசுற? சத்யா அம்மா போய்ட்டாங்கன்னு தெரிஞ்சப்போ கூட இனிமேல் சத்யாவுக்கு எல்லாமே நாம தான், அவளை கண்ணும் கருத்துமா பாத்துக்கணும், அது தான் சத்யா அம்மா, அப்பாவுக்கு நாம செலுத்துற நன்றி கடன்னு கூட சொன்னியே பாட்டி?”

 

சொன்னேன் தான் மா, ஆனா அதுக்காக நீ உன் வாழ்க்கையை பாக்கணுமில்ல? எத்தனை நாள் நீ உன் புருஷனை விட்டு பிரிஞ்சு இருப்ப?”

 

பாட்டி அவருக்கும் எல்லா விஷயமும் தெரியும் தான? அதெல்லாம் அவர் புரிஞ்சுப்பாரு

 

அவன் புரிஞ்சுப்பான் டி, அவன் நல்லவன், அதுக்காக அவன் தனியா இருந்து கஷ்டப்படணுமா

 

அதுக்காக சத்யாவை தனியா விட்டுட்டு மும்பை போகணும் சொல்றியா?”

 

சத்யாவுக்கு நான் துணைக்கு இருக்கேன், நீயும் சின்னுவும் கிளம்புங்கன்னு சொல்றேன்

 

பாட்டி அந்த துரைசாமி வந்தா உன்னால சமாளிக்க முடியுமா? சும்மா ஏதாவது பெனாத்தாத

 

அவன் ஏன் இங்க வரணும், வராதன்னு இந்த பொண்ணு ஒரு வார்த்தை அடிச்சு பேசினா அவன் வருவானா?”

 

சத்யா கண்கலங்க தலையை கீழே குனிந்த படி அமர்ந்திருந்தாள்.

 

இவ சொன்னாலும் சொல்லலைன்னாலும் அவன் வருவான், இன்னைக்கு உனக்கு என்னமோ ஆச்சு, நீ சாப்டுட்டு தூங்கு

 

எனக்கு ஒன்னும் ஆகலடி அம்மா, இத்தனை நாளா நம்ம முதலாளி அம்மா பொண்ணாச்சே, அவங்க வீட்டு உப்பதான பல வருஷமா சாப்பிட்டோம்ன்னு அமைதியா இருந்தேன், ஆனா அதுக்காக வாழ்நாள் முழுக்க இந்த பொண்ண நாம பாதுகாக்க முடியுமா? அதான் இன்னைக்கு உடைச்சு பேசுறேன், இந்த பொண்ணுக்கு ஒருத்தன கல்யாணம் பண்ணிக்கிட்டு ஒழுங்கா வாழனும்ங்குற எண்ணம் இல்ல, ஊரெல்லாம் சிரிச்சப்போ கூட நான் நம்பல, ஆனா பெத்தவ பேச்சையே கேக்காம ஊர்மேல போனவ நம்ம பேச்சை கேக்க போறாளா என்ன? இவளை பாதுகாக்குறோம்ன்னு உன் பேர் கெட்டு நிக்காத, ஒழுங்கா உன் புருஷன் கூட வாழுற வழிய பாருஎன்று கூறிவிட்டு நகர்ந்தாள் பாட்டி.

 

சத்யா கண்ணீருடன்பாட்டி சொல்றது சரி தான் கா, நீங்க முருகன் அண்ணா கூட போய் இருங்கஎன்று சொல்லிவிட்டு வேகமாக எழுந்து தன் வீட்டை நோக்கி நடந்தாள்.

 

அவள் அழுது கொண்டே செல்வதை வெளியே விளையாடிக்கொண்டிருந்த தருண் பார்த்துவிட்டு அவள் பின்னால் காலை தெத்தி தெத்தி நடந்து ஓடினான்.

 

அம்ம்மா நில்லும்மா

 

சத்யா வீட்டிற்குள் சென்று கட்டிலில் சாய்ந்தபடி கீழே அமர்ந்து முட்டி மேல் தலையை புதைத்து அழுதாள்.

 

அம்மா என்னாச்சு மா? ஏன் மா அழற? அம்மா சொல்லும்மா

 

சத்யாவால் அழுகையை நிறுத்த முடியவில்லை. அவளை பார்த்து தருணும் அழ ஆரம்பித்தான்.

 

சத்யாநீ அழாதடாஎன்று தருணை அணைத்து கொண்டாள். ஆனால் அவளால் தன் அழுகையையும் கட்டு படுத்த முடியவில்லை, தருணின் அழுகையையும் நிறுத்த முடியவில்லை.

 

மறுபக்கம் வள்ளி கோபத்துடன் வீட்டின் பின்புறம் அமர்ந்திருந்த பாட்டியை நோக்கி சென்றாள். “பாட்டி இன்னைக்கு உனக்கு என்னாச்சு? அந்த நரம்பில்லாத நாக்கை வச்சு சத்யாவை கண்டதையும் பேசி இப்படி கஷ்டப்படுத்திட்டியே, சொல்லு பாட்டி, ஏன் இப்படி பேசின?”.

 

ஏன்னா அவளுக்காக நீ உன் வாழ்க்கையை தார வாக்கறது எனக்கு புடிக்கல

 

என்ன பாட்டி பேசுற? அப்படி என்ன தியாகம் பண்ணிட்டேன் நான்? அவரு என்ன மும்பைலையே இருக்க போறாரா? எப்படியும் இங்க வந்து ஏதாவது கடை வச்சு பொழச்சிக்கலாம்னு தான சொல்லிட்டு இருக்காரு, நம்ம கூட சத்யாவையும் தருணையும் வச்சுக்க போறோம், அதோட இல்லாம அவ ஒன்னும் மத்தவங்க காசுல உக்காந்து சாப்பிடுற ஆள் இல்ல, அவ ஒரு வேலை செஞ்சு பொழச்சிப்பா, நாம பக்கத்துல ஒரு துணையா இருக்க போறோம், அவ்ளோ தான? இதெல்லாமே நாம பேசினது தான? நீ தான பாட்டி இப்படி எல்லாம் பண்ணலான்னு சொல்லி அவளையும் கூட்டிட்டு வந்த இந்த ஊருக்கு, அப்புறம் என்னாச்சு உனக்கு?”

 

பாட்டி பதில் ஏதும் சொல்லாமல் எங்கோ பார்த்து கொண்டிருந்தார்கள்.

 

சரி அதெல்லாம் விடு, ஏன் பாட்டி அவளை அவ்ளோ அசிங்கமா பேசிட்ட, நீ இப்படி எல்லாம் பேச மாட்டியே, ஊர்மேல போறவ, அது இதுன்னு.... “ வள்ளிக்கு பேச முடியாமல் தொண்டை அடைத்தது.

 

சொல்லு பாட்டி, ஏன் இப்படி பேசின? ஊரே பேசினப்போ கூட நீ அவளுக்கு துணையா இருந்தியே பாட்டிபாட்டியை உலுக்கினாள் வள்ளி.

 

பாட்டி அமைதியாகவே இருந்தார்கள்.

 

போ பாட்டி, உன் பேச்சை கேட்டு அவ ஏதாவது பண்ணிக்கிட்டா என்ன பண்றது?”

 

அவ அப்படி எல்லாம் பண்ணிக்க மாட்டாஎன்றாள் பாட்டி எந்த உணர்ச்சியும் காட்டாமல்.

 

வள்ளிக்கு ஒன்றுமே புரியவில்லை. பாட்டி ஏன் இப்படி எல்லாம் பேசினார்கள். சத்யாவை எப்படி சமாதானம் செய்வது ஒன்றும் புரியவில்லை. வள்ளி கண்கலங்க நின்றாள்.

 

கொஞ்ச நேரம் கழித்து பாட்டி அழுது கொண்டிருந்த வள்ளியின் அருகில் அமர்ந்துநீ போய் அந்த புள்ளைய பாத்துட்டு வாஎன்றார்கள்.

 

வள்ளி எழுந்து உட்கார்ந்துஎதுக்கு அவ உயிரோட இருக்காளா இல்லையான்னு பாக்கவா?” என்றாள் கோபமாக.

 

வள்ளி, சரி உன்கிட்ட சொல்றேன், சத்யா ஒருத்தன கல்யாணம் பண்ணிக்கிட்டு நல்ல படியா வாழணும்னு நினைக்குறியா இல்லையா?”

 

வள்ளி ஒன்றும் புரியாமல் விழித்தாள்.

 

இன்னைக்கு நான் அதிகமா தான் பேசிட்டேன் இல்லன்னு சொல்லல, ஆனா நான் பேசுன மாதிரி பேசினா தான் சத்யாவுக்கு வாழ்க்கை முழுக்க நம்ம துணை மட்டும் பத்தாதுன்னு புரியும், அந்த பொண்ணுக்கு இன்னும் ஒரு துணையோட அவசியம் புரியல, அதோட இல்லாம நாம துணைக்கு இருக்கோம்னு ஒரு அசட்டு தைரியம் வேற, அதனால தான் இன்னைக்கு இப்படி பேசினேன்

 

பாட்டி இப்போ நீ பேசிட்டன்னு நாளைக்கே சத்யா கல்யாணம் பண்ணிக்க போறாளா?”

 

உனக்கு புரிஞ்சது அவ்ளோ தான், இங்க பாரு, நான் இன்னைக்கு ஒரு பெரிய குண்டை தூக்கி போட்டிருக்கிறேன், அது வெடித்து சத்யாவின் உணர்ச்சிகளை வெளிக்கொண்டு வரும், வரட்டும், வந்தால் தான், அவள் உடைந்து அழுதால் தான் அவளின் நிலை அவளுக்கே புரியும், இல்லை என்றால் ஏதோ நடந்தது  நடந்துவிட்டது, இப்படியே அந்த புறம்போக்கு நாயின் கண்ணில் படாமல் தருணுடன் வாழ்ந்து விட்டு போகலாம், துணைக்கு தான் வள்ளி அக்கா, முருகன் அண்ணா, பாட்டி இருக்கிறார்களே என்று நினைத்து வாழ்க்கையை ஓட்டி விடுவாள்.”

 

அப்படின்னா நிஜமாவே அவ நல்லதுக்கு தான் பேசுனியா பாட்டி?”

 

என் மடியில வளந்த பொண்ணுடி அவ, அவ மேல சேற்றை வாரி வீசிவிட்டு நான் நிம்மதியாக இருந்து விடுவேனா? சில சமயம் சில அதிர்ச்சி வைத்தியம் தேவை, இன்னைக்கு நான் போட்ட போடுல அவ மனசு கண்டிப்பா மாறும்

 

ஆனா பாட்டி நீ பேசுன பேச்சுல அவ ஏதாவது செஞ்சுக்கிட்டான்னா?”

 

அதெல்லாம் செஞ்சுக்க மாட்டா, இதை விட பெரிய கஷ்டம் வந்தப்பவே அவ எதுவும் செஞ்சுக்கல, அவ அப்பா அவளை தைரியமா வளத்தாரு, ஆனா என்ன நடுவுல அது அசட்டு தைரியமாகி சில தவறுகள் நடந்துடுச்சு, ஆனா துணிஞ்சு வாழுறா தான? அதோட இல்லாம இப்போ தருண் தான் அவளுக்கு எல்லாம், அவனை விட்டுட்டு என்ன பண்ணிக்க போறா? ரெண்டாவது நாம அவளை ஒருத்தன் கிட்ட கை பிடிச்சு குடுக்குற வரைக்கும் அவ கூட துணையா தான் இருக்க போறோம்

 

போ பாட்டி எனக்கு ஒண்ணுமே புரியல, ஆனா ஏதோ நல்லது நடக்கும்னு நினச்சு தான் பேசியிருக்க, நான் அவளை சமாதானம் பண்ணி கூட்டிட்டு வரேன், நீ அவகிட்ட கொஞ்சம் ஆறுதலா பேசு

 

பொழப்ப கெடுத்துடுவ நீ, நான் பேசினது பேசினதாவே இருக்கட்டும், அவ என்மேல கோவமாவே இருக்கட்டும், நீ நாம பேசின எதையும் அவகிட்ட சொல்லாத, நீ எப்படியும் முருகன் கிட்ட போக போறங்குற மாதிரி தான் நடந்துக்கனும், அப்போதான் தனக்கு ஒரு துணை வேணும்னு அவ யோசிக்க ஆரம்பிப்பா

 

என்னமோ சொல்ற, நல்லது நடந்தா சரி

 

அதெல்லாம் நல்லதா நடக்கும், என்ன நேரமோ? அவ அம்மா அப்பா கஷ்டப்பட்டு சம்பாரிச்சது எதுவும் அவளால அனுபவிக்க முடியாம இப்படி கஷ்டப்படுறா. அவளுக்காக தான பூ கட்டி குடுக்கறது, சின்ன சின்ன வியாபாரம் பண்றதுன்னு செஞ்சு காசு சேக்குறேன், முருகனும் வரட்டும், நம்ம கிராமத்து பக்கம் போய் அவளுக்கு நல்ல பையனா பாத்து கல்யாணம் பண்ணி வைப்போம்

 

இவ்வளவு அன்பு வச்சுக்கிட்டு அப்படி பேசிட்டியே பாட்டி

 

காரணம் இருக்கு வள்ளி, உனக்கு புரியுமா தெரியல, நீ நல்லவ நல்லவன்னு நாம சொல்லிகிட்டே இருக்கோம், ஆனா அவ என்ன சொல்றா? இல்ல நான் தப்பானவ, நான் கஷ்டப்படுறது தான் தண்டனை, எல்லாரும் என்னை தப்பா பேசுறது சரி தான்னு சொல்லிக்கிட்டு இருக்கா, அதையே நான் இன்னைக்கு திருப்பி பேசிட்டேன், இனிமேல் யோசிப்பா பாரு, “அப்படி என்ன நான் தப்பு பண்ணிட்டேன், என்மேல என்ன தப்பு இருக்கு, பாட்டி ஏன் இப்படி அநியாயமா பேசிட்டாங்கன்னுயோசிக்க ஆரம்பிப்பா. உடனே இல்லன்னாலும் கொஞ்சம் கொஞ்சமா யோசிக்க ஆரம்பிப்பா. இப்போது ஆரம்பிச்சா தான் அவ வயசு இருக்கும் போதே அவளுக்கு ஒரு கல்யாணத்தை பண்ண முடியும், புரிஞ்சுதா?”

 

புரியுது பாட்டிஎன்று கண்களை துடைத்து கொண்டு எழுந்தாள் வள்ளி.

 

ஆனா பாட்டி அவ உன்மேல கோச்சிக்கிட்டு பேச மாட்டாளே

 

பேசலைன்னா பரவால்ல, அவளுக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமையனும், என்னைக்கு அந்த கொடுமைக்காரன் இவள தேடி வருவனோன்னு வயித்துல நெருப்பை கட்டிக்கிட்டு உக்காந்திருக்க முடியாது, அவன் இவள கண்டுபிடிச்சு வரறதுக்குள்ள இவள ஒருத்தன் கைல பிடிச்சு குடுத்துடனும்

 

வள்ளி சத்யாவை தேடி அவள் வீட்டிற்கு சென்றாள். கதவு திறந்து தான் இருந்தது. படுக்கையில் தருண் தூங்கி கொண்டிருக்க சத்யா கண்களில் நீருடன் விழித்து இருந்தாள்.

 

வள்ளி அவள் அருகே சென்று அமர்ந்தாள். “சத்யா பாட்டி பேசினத மனசுல வச்சுக்காத, நான் நல்லா திட்டி விட்டுட்டேன், இனிமேல் இப்படி பேசாது”.

 

அவங்க பேசினதுல ஒன்னும் தப்பு இல்லக்கா, எங்களுக்காக நீங்க ஏன் முருகன் அண்ணனை பிரிஞ்சு இருக்கணும்? நீங்க மும்பை கிளம்புங்க அக்கா

 

அதெல்லாம் நான் பாத்துக்கிறேன், நாங்க கடை வைக்க பணம் சேர்க்க தான் உன் முருகன் அண்ணன் அங்க இருக்காரு, உனக்காக யாரும் இங்க எதுவும் தியாகம் பண்ணல, மதியம் வச்ச மீன் குழம்ப சூடு பண்ணி கொண்டு வந்திருக்கேன், சாப்பிடு

 

இல்லைக்கா எனக்கு வேண்டாம், நீங்க சாப்பிடுங்க, எனக்கு தூக்கம் வருது, நான் தூங்க போறேன்என்று கட்டிலின் அருகில் தரையில் படுத்துக்கொண்டாள்.

 

நீ தான் பெரிய ரோஷக்காரி ஆச்சே, பாட்டி பேசினதுக்கு என்னை ஒதுக்கி வைக்கிற இல்ல?”

 

ஐயோ அக்கா, ஒதுக்கி எல்லாம் வைக்கல, நான் நாளைக்கு சாப்பிட்டுக்கிறேன், அங்க வச்சுடுங்க

 

சரி நாளைக்கு காலைல ஒன்னா தான் வேலைக்கு போறோம், கோவத்துல கோச்சிக்கிட்டு என்னை விட்டுட்டு தனியா போகாத, வந்து கதவை தாப்பாள் போட்டுக்கோ

 

வள்ளி கிளம்பியதும் கதவை தாப்பாள் போட்டுட்டு வந்து படுத்தாள் சத்யா.

 

இனிமேல் வேலைக்கு தனியா போய் வர பழகிக்கணும், நாம ஒதுங்கி இருந்தா தான் வள்ளி அக்கா திரும்ப முருகன் அண்ணாகிட்ட போவாங்க, கல்யாணம் ஆகி அவங்க ரெண்டு பெறும் நெறைய நாள் சேந்து இருக்க முடியல, என் பிரச்சனைக்காக அவங்க ரெண்டு பேர் பிரிஞ்சுட்டாங்க, இன்னைக்கு பாட்டி பேசினது சரி தான்என்று நினைத்து கொண்டு தூங்க போனாள்.

Comments

Popular posts from this blog

Azhagu serial - Magesh - Poorna fan fiction - Episode 27 - 05/10/2018

Azhagu serial - Magesh - Poorna fan fiction - Episode 40 - 28/02/2019

Azhagu serial - Magesh - Poorna fan fiction - Episode 24 - 22/09/2018