Sms ch 4 சேற்றில் முளைத்த செந்தாமரையோ
அத்தியாயம் 4
நந்தனும் சத்தியமூர்த்தியும் ஜவுளி கடைக்கு வந்து சேர்ந்தனர். ஏற்கனவே அவர் குடும்பத்தை சேர்ந்தவர்கள் அங்கே வந்து சேர்ந்திருந்தனர். சத்தியமூர்த்தி குடும்ப தொழிலே துணியும், அதனை சார்ந்த உபரி பொருட்களின் உற்பத்தி, ஏற்றுமதி, இறக்குமதி என்பதாலும், உள்ளூரில் உள்ள பல ஜவுளிக்கடைகளுடன் தொழில் போக்குவரத்து இருப்பதாலும் வீட்டிற்க்கே அவர்கள் விருப்பப்படி துணிமணிகளை வரவழைத்து வாங்கிக்கொள்ளும் அளவுக்கு வாய்ப்பு வசதிகள் இருக்கத்தான் செய்தன. இருந்தாலும் சத்தியமூர்த்தி குடும்பத்தின் இன்றைய தலைமுறை கடைக்கு சென்று தான் வாங்க வேண்டும் என்று உறுதியாக நின்றார்கள். அந்த ஜவுளிக்கடையில் சத்தியமூர்த்தி குடும்பமே பெரிதாக தெரிந்தது. மாப்பிள்ளை, பெண்ணை ஓட்டுவது என்று ஒரு குரூப் சுற்ற, இந்த சேலை நல்லா இருக்கு, அந்த சேலைய பாருங்க என்று ஒரு குரூப் சேலையில் கவனம் செலுத்த நந்தனுக்கு மட்டும் எதிலும் ஈடுபாடில்லை. அவனுடைய நினைவுகள் எல்லாம் ஏனோ சத்யாவை பற்றி அவள் பக்கத்து வீட்டுக்காரம்மா சொன்னதையே சுற்றி வந்தது. “கருமம் கருமம் இவளோ நாளா ஒருத்தன் வந்து போக இருந்தான், இப்போ இன்னொருத்தனா? கொஞ்சமாவது ஒரு பையனை வச்சிருக்கோம், அடக்க ஒடுக்காம இருப்போன்னு இருக்காளா? கலிகாலம்".
“அத்தான், அத்தான்....” உலுக்கினாள் ப்ரீத்தி.
“ஆஹ்ன் சொல்லு ப்ரீத்தி” என்று நிகழ் காலத்திற்கு வந்தான் நந்தன்.
“என்ன யோசனை அத்தான்? எல்லாரும் மும்மரமா அவங்களுக்கு தேவையான டிரஸ் எல்லாம் எடுத்துட்டு இருக்காங்க, நீங்க மட்டும் ஏதோ யோசனைலயே இருக்கீங்க?”
“ஒன்னும் இல்லை ப்ரீத்தி, ஏதோ ஆபீஸ் ஞாபகம், சரி நீ உனக்கு டிரஸ் எடுத்துகிட்டியா?”
“இல்லை அத்தான், எனக்கு நீங்க choose பண்ணுங்க”
“ஏன் உன் செலெக்ஷன் நல்லா தான இருக்கும், நீயே செலக்ட் செய்யலாமே” என்றபடியே ப்ரீத்தியுடன் பேசிக்கொண்டு அவள் காண்பித்த lehenga section சென்றான்.
“அண்ணி பார்த்தீர்களா?” என்று சத்தியமூர்த்தியின் தங்கையும், ப்ரீத்தியின் தாயாருமான மாலினி நந்தனும் ப்ரீத்தியும் சென்ற திசையை கமலாவுக்கு காண்பித்து புன்னகைத்தாள்.
கமலா ஒரு சிறு புன்னகையுடன் முடித்து கொண்டார்கள்.
மாலினிக்கு இந்த சிறு புன்னகை போதவில்லை. “அண்ணி, சீக்கிரமா நந்தனுக்கும் ப்ரீத்திக்கும்....” என்று ஆரம்பிக்க, கமலா ஒரு பெருமூச்சுடன் “மாலினி இதை பத்தி நெறைய முறை பேசிவிட்டோம், அவன் தான் எதற்குமே பிடி கொடுக்கமாட்டேன் என்கிறானே.”
“அண்ணி நீங்க சொல்ற விதத்துல சொன்னா நந்தன் உங்க பேச்சை மீற மாட்டான், எத்தனை வருஷமா பாக்குறோம், நீங்க போட்ட கோட்டை அவன் தாண்டி இருக்கானா?”
சுற்றி ஒரு பார்வை பார்த்துவிட்டு “மாலினி, இதை பத்தி நாம இங்க பேச வேண்டாம், சம்மந்தி வீட்டுக்காரங்க எல்லாம் வந்து இருக்காங்க, எல்லாரும் இன்னைக்கு நைட் நம்ம வீட்டுல தான இருக்க போறீங்க, அங்க பேசிக்கலாம்”.
ஒரு வழியாக ஜவுளி வேலை எல்லாம் முடிந்து சம்மந்தி குடும்பத்திற்கு விடை அளித்துவிட்டு எல்லோரும் சத்தியமூர்த்தி வீட்டிற்கு சென்றனர்.
சத்தியமூர்த்தி வீட்டில் சத்தியமூர்த்தியின் தந்தை ராமலிங்கம், சத்தியமூர்த்தியின் மனைவி கமலா, மகன் நந்தன், சத்தியமூர்த்தியின் தம்பி கணேஷ், அவர் மனைவி சகுந்தலா, அவர்கள் மகன்கள் ரோஹித், கிரிஷ் என்று கூட்டு குடும்பமாக இருக்கிறார்கள். ரோஹித்துக்கு திருமணமாகி இரண்டு வயதில் ஒரு மகன் இருக்கிறான். ஏதோ கருத்து வேறுபாடு காரணமாக ரோஹித்தின் மனைவி குழந்தையுடன் தன் தாய் வீட்டில் இருக்கிறாள். ரோஹித்தின் தங்கை, கிரிஷின் அக்கா சுவேதாவுக்கும் திருமணமாகி கணவன் வீடு சென்றுவிட்டாள். இன்று சுவேதாவும் கணவனுடன் வந்திருந்தாள். சத்தியமூர்த்தியின் தங்கை மாலினி தன் கணவர் சரவணன், மகன் பிரவீன், மகள் ப்ரீத்தியுடன் சத்தியமூர்த்தி வீட்டிற்கு வந்திருந்தாள். என்ன பிரச்சனையாக இருந்தாலும் பிறகு பேசிக்கொள்ளலாம், உன் கொழுந்தனார் கல்யாணத்திற்கு நீ இருக்க வேண்டாமா என்று கமலாவே நேரில் சென்று ரோஹித்தின் மனைவி ஸ்ரீஜாவையும் பேரன் ரித்விக்கையும் அழைத்து வந்திருந்தார்கள். எல்லோரும் சாப்பிட்டுவிட்டு கொஞ்ச நேரம் பேசிகொண்டிருந்தார்கள். மாலினி அடிக்கடி அடுத்தது என்ன நந்தனுக்கும், ப்ரீத்திக்கும் தான் என்று இலைமறை காய்மறையாக பேச நந்தன் எனக்கு தூக்கம் வருகிறது என்று சொல்லி விட்டு தூங்க தன் அறைக்கு சென்றுவிட்டான். மொபைலை எடுத்தான். ஸ்ரேயாவிடம் பேசவேயில்லையே. பேசலாமா? வேண்டாமா? என்று குழப்பமாக இருந்தது. குழம்பி கொண்டிருக்கும் போதே ஸ்ரேயாவிடம் இருந்து call.
“என்ன நந்து? நோ ரெஸ்பான்ஸ் from யூ? Too much ஆ தொல்லை பண்றனா?”
“ச்ச ச்ச அப்படி எல்லாம் ஒண்ணுமில்ல, சொன்னேன் இல்ல, என் தம்பிக்கு கல்யாணம், அந்த வேலைல கொஞ்சம் பிஸி, sorry about spoiling our last night plan”
“hey sorry எல்லாம் எதுக்கு? நாம ஒன்னும் committed இல்லையே, நான் உன்கிட்ட இருந்து commitment எதிர்பாக்க ஆரம்பிச்சா நானே விலகிப்பேன்னு உன்கிட்ட promise பண்ணிருக்கனே, moreover எனக்கும் commitment phobia தான, so உனக்கு அப்படி எதிர்பார்ப்பு வந்தா நீயும் விலகிக்கணும்னு பேசி இருக்கோமே”
“I know, இருந்தாலும் உன் நேரத்தை எனக்காக ஒதுக்கும் போது ஒன்னு அந்த நேரத்தை நான் வீணாக்காம வந்திருக்கணும், இல்லனா ஒரு call பண்ணி வர முடியலன்னு சொல்லிருக்கணும், என்மேல தான் இந்த டைம் தப்பு, so I am sorry”
“It’s ok, அப்புறம்?”
“அப்புறம் என்ன, கொஞ்ச நாள் கல்யாண வேலைல பிஸி தான், அதனால....”
“புரியுது, புரியுது, இதை மட்டும் சொல்லிக்கட்டுமா?”
“என்ன?”
“I miss you, pchhh” முத்த சத்தத்துடன் அழைப்பை துண்டித்தாள்.
ஏனோ நந்தனுக்கு நெருடலாக இருந்தது. தன்னை தானே நொந்து கொண்டான்.
மொபைலை எடுத்து ஸ்ரேயாவிற்கு மெசேஜ் அனுப்பினான். “நானும் தான், :-* விரைவில் நேரில்”
மறுநாள் எல்லோரும் டிபன் சாப்பிட ஒன்று கூடினர். சாப்பிட்டுவிட்டு ஆபீஸ் புறப்பட நந்தன் தயாராக இருந்த வேளையில் மாலினி அத்தை ஆரம்பித்தாள். “அண்ணா நானும் இலைமறை காய்மறையா கேட்டு பாத்துட்டேன், உன்கிட்டயும் அண்ணிகிட்டயும் நேரா கூட சில நேரம் கேட்டு பாத்துட்டேன், ஆனா பிடி குடுத்தே பேச மாட்டேங்குறீங்க. இப்போ குடும்பத்துல எல்லாருமே இருக்கோம், இன்னைக்கு எனக்கு ரெண்டுல ஒன்னு தெரிஞ்சாகணும், ரோஹித், சுவேதா, கிரிஷ் னு நந்தனை விட சின்னவங்களுக்கு எல்லாம் கல்யாணம் ஆகுது, நந்தனுக்கு எப்போ கல்யாணம் பண்ண போறீங்க? ப்ரீத்திக்கு நந்தனை பிடிச்சிருக்கு, நந்தனுக்கும் ப்ரீத்திய பிடிச்சிருக்கு, சீக்கிரமே அவங்களுக்கு ஒரு கல்யாணத்த பண்ணிடலாமே?”
“அத்தை, ப்ரீத்திய எனக்கு பிடிக்கும், ஆனா கல்யாணம் பண்ணிக்குற நோக்கத்துல இல்ல”
“நந்தா நான் உன்கிட்ட பேசல, என் அண்ணன் அண்ணி கிட்ட தான் பேசிட்டு இருக்கேன்”
“ஆனா என் கல்யாணத்த பத்தி தான பேசுறீங்க?”
“நந்தா உடைஞ்சு போன தொழிலை எடுத்து நிலை நிறுத்தின, அதனால எல்லாரும் உன்ன மதிக்கிறாங்க, அதுக்காக நீ பெரிய மனுஷன் ஆகிடுவியா? வீட்டுக்கு பெரியவர் இன்னும் என் அப்பா தான், அடுத்து என் அண்ணன்கள், அண்ணிகள், அப்புறம் தான் நீ” என்று சொல்லிக்கொண்டே wheelchair ல் உட்கார்ந்திருந்த தன் வயதான தந்தை ராமலிங்கத்திடம் சென்றாள்.
“நீங்களே சொல்லுங்க அப்பா, நந்தனுக்கு ப்ரீத்திய கட்டி குடுக்கறதுல என்ன தப்பு இருக்கு? ரெண்டு பேரும் நல்லா பொருத்தமா தான இருக்காங்க?”
“பொருத்தமா தான் மா இருக்காங்க, ஆனா நந்தன் தான் கல்யாணம் வேண்டாங்குறான்” என்றார் அந்த முதியவர்.
“அதெல்லாம் சொல்ல வேண்டியவங்க சொன்னா, சொல்ல வேண்டிய விதத்துல சொன்னா அவன் கேட்டுப்பான்” என்றாள் மாலினி தன் அண்ணி கமலாவை பார்த்து.
கமலாவும் அவள் தன்னை தான் குறிப்பிடுகிறாள் என்பதை உணர்ந்து நந்தனிடம் சென்றாள்.
“நந்து, உனக்கும் வயது 30 ஆகிறது அல்லவா? ப்ரீத்தியை கல்யாணம் செய்து கொள்ளேன்” என்றாள் கமலா பரிவோடு. இப்போதாவது சரி என்று சொல்லமாட்டானா என்ற ஏக்கத்துடன்.
“அம்மா இந்த ஒரு விஷயத்தில் மட்டும் என்னை எதுவும் கேட்காதீர்கள். உங்கள் பேச்சை மீற வேண்டியதாக இருக்கிறதே என்று எனக்கு வருத்தமாக உள்ளது”
“ப்ரீத்தியை உனக்கு பிடிக்கவில்லையா?” வேகமாக கேட்டாள் மாலினி அத்தை.
“அத்தை ப்ரீத்தியை எனக்கு பிடிக்கும், ஆனால் திருமணம் செய்து கொள்ளும் நோக்கத்தில் அல்ல”
“அவள் உன்னையே தான் அத்தான் அத்தான் என்று நினைவு தெரிந்த நாளில் இருந்து சுற்றி வருகிறாள், அது உனக்கு தெரியாதா? உனக்கு திருமணம் செய்யும் நோக்கம் இல்லை என்றால் ஏன் அவளுடன் சிரித்து சிரித்து பேசி சுற்றி வந்தாய்? ஏன் அந்த சின்ன பெண்ணின் மனதில் நம்பிக்கையை ஏற்படுத்தி இப்படி நோகடிக்கிறாய்?”
நந்தன் அதிர்ச்சியுற்றான். “அத்தை என்னைக்குமே அவளுக்கு நம்பிக்கை ஊட்டும் விதமாக நான் அவளிடம் பழகியதில்லை, சொல்லப்போனால் எப்போது அவளுக்கு இப்படி ஒரு நினைப்பு இருக்கிறது என்று தெரிந்ததோ அப்போதே அவளிடம் தெளிவாக சொல்லிவிட்டேன் இது நடக்காது என்று, அதன் பிறகு அவளுடன் பேசுவதை கூட குறைத்து கொண்டேன்.”
“அதெல்லாம் எனக்கு தெரியாது, உன்னை இப்படி எல்லாம் தொங்க வேண்டும் என்று எங்களுக்கு என்ன ஆசையா? அவள் அழகுக்கும், அறிவுக்கும் 1000 மாப்பிள்ளை வரிசையில் வந்து நிப்பார்கள், அவள் ஆசைப்பட்டு விட்டாளே என்று தான் இப்படி என் பிறந்த வீட்டில் கெஞ்சாத குறையாக கெஞ்சி கொண்டிருக்கிறேன்” என்றாள் மாலினி படபடவென்று.
“மாலினி ஏன் இப்படி பொறிந்து தள்ளுகிறாய்? போன முறை இந்த பேச்சு வந்த போதே அவனுக்கு விருப்பமில்லை, ப்ரீத்திக்கு வேறு மாப்பிள்ளை பார்ப்போம் என்று சொன்னோமே, நீ, மாப்பிள்ளை, ப்ரீத்தி எல்லோரும் சரி என்றீர்களே?” என்றார் சத்தியமூர்த்தி.
அதுவரை அமைதியாக இருந்த மாப்பிள்ளை சரவணன் பேசினார். “அத்தான் நானும் உங்க தங்கச்சிகிட்ட எவ்வளவோ சொல்லிட்டேன், கேட்டா தான? இவளே ப்ரீத்தி மனதை மாற்ற தடையாக இருக்கிறாள்” என்றார் மாலினியை முறைத்து கொண்டே.
தான் நினைத்து வந்த விஷயத்திற்கு ஆதரவு இல்லை என்று மாலினி படபடக்க ஆரம்பித்தாள்.
“அப்படி என்ன அண்ணா நந்தனுக்கு அவ்வளவு மதிப்பு? சின்னவன் தானே, நீங்கள் அழுத்தி சொன்னால் கேட்பான், ஆனால் நீங்கள் யாரும் அழுத்தி சொல்லமாட்டேன் என்கிறீர்கள். எங்கிருந்தோ வந்த அனாதைக்கு இருக்கும் மதிப்பும் பரிவும் இந்த வீட்டின் பேத்தி ப்ரீத்திக்கு இல்லையே? அவனுக்கு நாங்கள் பெண் கொடுக்க விரும்புவதே அவன் அதிர்ஷ்டம் இல்லையா?” என்றாள் மொகவாயை திருப்பிக்கொண்டு.
“மாலினி....” ஒரே நேரத்தில் அதட்டினார்கள் சத்தியமூர்த்தி, கமலா, கணேஷ், சரவணன் அனைவரும்.
அதுவரை அமைதியாக இருந்த கணேஷ் மாலினியிடம் வந்து கோபமாக பேச ஆரம்பித்தார். “மாலினி உனக்கு என்ன பைத்தியம் பிடித்து இருக்கிறதா? நந்தன் இந்த வீட்டின் முதல் வாரிசு, வார்த்தையை அளந்து பேசு” என்று.
“அட ஏன் அண்ணா நீ வேறு, அவன் இந்த வீட்டின் முதல் வாரிசு என்று உனக்கு நிச்சயமாக தெரியுமா? பெரிய அண்ணன் தனக்கு குழந்தை இல்லை என்று எங்கிருந்தோ இந்த அனாதையை பிடித்து கொண்டு வந்து நம் வீட்டின் முதல் வாரிசு என்று சொன்னார், நாமும் எதிர்த்து பேசாமல் ஏற்றுக்கொண்டோம், ஆனால் அனாதைக்கு இவ்வளவு ஏற்றமும் அதிகாரமும் ஆகாது”
“அம்ம்மா, போதும் நிறுத்து, என் பொருட்டு நீ பேசியது போதும், அத்தானுக்கு பிடிக்காத இந்த திருமணம் பற்றி இனி பேச வேண்டாம், ஏதோ நப்பாசையில் வந்துவிட்டேன், நீ நஞ்சை கக்காதே, நம் வீட்டிற்கு செல்லலாம் வா” என்று ப்ரீத்தி தன் தாயை பிடித்து இழுத்தாள்.
“உனக்காக பேச இங்க ஒரு நாதி இல்லை, ஆனால் அந்த அனாதையை சொன்னால் நீ ஏண்டி பதறுகிறாய்?” என்றாள் மாலினி.
மாலினியின் கணவர் சரவணன் குறுக்கிட்டார். “மாலினி வா கிளம்பலாம், அளவுக்கு அதிகமாகவே பேசி விட்டாய், போதும், வா”
“போறதுன்னா நீங்க போங்க, இது என் அப்பா வீடு, கண்ட அனாதை எல்லாம் இங்க இருக்கும் போது இந்த வீட்டில் பங்கு பெறும் உரிமை உள்ளவள் நான், நான் இங்கு இருக்க கூடாதா?”
“கூடாது, கிளம்பு” என்றார் ராமலிங்கம்.
“அப்ப்பா...என்னையா போக சொல்கிறீர்கள்?” அதிர்ச்சியில் உறைந்தாள் மாலினி.
“ஆமாம் கிளம்பு, எப்போதுமே வாயில் ஒரு கொடுக்கை வைத்து கொண்டு கொட்டுவாய், நானும் மகளாயிற்றே என்று பொறுத்து போவேன், இன்று வரம்பு மீறி பேசுகிறாய், கிளம்பு இங்கிருந்து”
“அப்படி என்றால் எனக்கு சேர வேண்டியதை பிரித்து கொடுங்கள்” என்றாள் மாலினி விறைப்பாக.
“அவர்கள் போதுமான அளவு கொடுத்துவிட்டார்கள் மாலினி, என் மானத்தை வாங்காமல் வீட்டுக்கு கிளம்பு” என்றார் சரவணன்.
“என்ன பெரிதாக கொடுத்து விட்டார்கள்? ஊர் உலகில் மகள், மாப்பிள்ளைக்கு செய்வதில்லையா? அது போலத்தான், அதற்காக சொத்தில் பங்கு இல்லை என்று ஆகி விடுமா?”
“பங்கு பற்றி எல்லாம் பேசும் அளவு வந்துவிட்டாயா?” என்றார் ராமலிங்கம்.
“ஆமாம் பேச வந்துவிட்டேன், என் மகள் வாழப்போகும் வீடு என்று நினைத்து அமைதியாக இருந்தேன், அது இல்லை என்றாகி விட்டது. இனி நான் ஏன் அமைதியாக இருக்க வேண்டும்? உடனே எனக்கும் கணேஷ் அண்ணனுக்கும் சொத்தை இரண்டாக பிரித்து கொடுத்து விடுங்கள்”
“மாலினி என்னை ஏன் சேர்த்து கொள்கிறாய்? எனக்கு அப்பா, அண்ணன், அண்ணி, என் மனைவி, என் பிள்ளைகள், நந்தன் எல்லோருடனும் ஒற்றுமையாக வாழ வேண்டும், அது போதும் எனக்கு, என் பங்கை பற்றி நீ பேசாதே” என்றார் கணேஷ்.
“வேண்டாம் என்றால் விடு, ஆனால் நினைவில் வைத்துக்கொள், எங்கிருந்தோ வந்த இந்த அனாதை பையன் நீ பெற்ற மூன்று பேருக்கும் ஒன்றும் இல்லாமல் ஏமாற்றபோகிறான்”
“அத்தை எங்களை பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டாம், எங்களுக்கு நந்தன் அண்ணா போதும்” என்றான் ரோஹித்.
“வச்சுக்கடா, உன் நந்தன் அண்ணாவை நீயே வைத்துக்கொள், எங்களுக்கு சேர வேண்டியதை பிரித்து கொடுங்கள்”
“முடியாது” என்றார் ராமலிங்கம் ஒரே வார்த்தையில்.
“ரொம்ப நல்லா இருக்கு அப்பா, உங்களோட பிடிவாத குணத்தால தான் குருமூர்த்தி அண்ணனையும், கவிதாவையும் இழந்தோம், ஞாபகம் இருக்கா உங்க ரெண்டாவது மகனையும், கடைசி மகளையும்? இப்போ உங்களோட இந்த மகளையும் வெட்டி விட பாக்குறீங்களா? என் தங்கை கவிதா இருந்திருந்தா என் சைடு பேச ஒரு ஆள் இருந்து இருக்கும், இப்போ நான் தனியா புலம்ப வேண்டியதா இருக்கு”
“நீ எவ்வளவு வேண்டுமோ புலம்பிக்கோ, மாப்பிள்ளைக்காக பார்க்கிறேன், இல்லையென்றால் வீட்டை விட்டு வெளியே போ என்று சொல்ல எனக்கு எவ்வளவு நேரம் ஆகப்போகிறது” என்று கடிந்தார் ராமலிங்கம்.
மொத்தத்தில் மாலினியின் புலம்பலை, கக்கும் விஷத்தை காதில் போட்டுக்கொள்ள அங்கே ஆள் இல்லை. மாலினியின் கணவர் சரவணனும், மகன் பிரவீன், மகள் ப்ரீத்தி எல்லோரும் புறப்பட தயாரானார்கள்.
“அப்பா, இன்னைக்கு ஆபீஸ்ல முக்கியமான மீட்டிங் இருக்கு, நான் கிளம்புறேன்” என்று நந்தன் பதிலுக்காக காத்திராமல் கிளம்பினான்.
“நந்தா ஒரு நிமிஷம், நானும் கிளம்புறேன்” என்று ரோஹித் அவனுடன் இணைந்து கொண்டான்.
“அப்பா என் பங்கை கோர்ட் போய் தான் வாங்க வேண்டுமா?” என்றாள் மாலினி கடைசி ஆயுதமாக.
“முயற்சி செய்து தான் பாரேன்” என்று சொல்லிவிட்டு ராமலிங்கம் wheel chair ல் நகர்ந்து அவர் அறைக்கு சென்றுவிட்டார்.
“அண்ணா.....” என்றாள் சத்தியமூர்த்தியை பார்த்து.
அவர் முறைத்துவிட்டு மாடிக்கு சென்றுவிட்டார்.
“அண்ணி....”
“ரொம்ப அதிகமாவே பேசிவிட்டாய் மாலினி” என்று கமலா அம்மா முறைத்து விட்டு நகர்ந்தார்கள். சகுந்தலாவும், கமலா அம்மாவுடன் இணைந்து கொண்டாள்.
சத்தியமூர்த்தியின் தந்தை ராமலிங்கம் அவர்களுக்கு ஐந்து பிள்ளைகள். சத்தியமூர்த்தி தான் மூத்தவர். சத்தியமூர்த்திக்கு இரண்டு தம்பிகள் குருமூர்த்தி, கணேஷ். இரண்டு தங்கைகள், மாலினி, கவிதா. கடைசி தங்கை பிறந்த கொஞ்ச நாட்களிலேயே அவர்களின் தாய் நோய்வாய்ப்பட்டு இறந்துவிட்டார். ராமலிங்கம் தொழிலையும் கவனித்துக்கொண்டு குடும்பத்தையும் துணையின்றி கவனித்து கொள்ள சிரமப்பட்டார். சத்தியமூர்த்தி அப்போது 20 வயதை தாண்டி ஓரிரண்டு வருடங்கள் இருக்கும். கடைசி மகள் காலம் தாழ்ந்து எதிர்பாராமல் உண்டாகி பிறந்தவள். அவள் பிறந்ததில் சில சிக்கல்கள் ஏற்பட்டு ராமலிங்கத்தின் மனைவி நோய்வாய்ப்பட்டாலும் அவளை கடவுள் கொடுத்த வரமாகவே நினைத்தாள். கவிதா என்று பெயரிட்டார்கள். தான் சென்றாலும் எல்லோரும் அவளை பாசத்தோடு கண்ணும் கருத்துமாக வளர்க்க வேண்டும் என்று தன் கணவர் ராமலிங்கத்திடமும், மற்ற பிள்ளைகளிடமும் சத்தியம் வாங்கிக்கொண்டு தான் அந்த புண்ணியவதி உயிர் நீத்தாள். ஆனால் ராமலிங்கத்தால் பிள்ளைகளையும் தொழிலையும் ஒரு சேர செவ்வனே கவனிக்க முடியவில்லை. எனவே சத்தியமூர்த்திக்கு 23 வயது இருக்கும் போதே திருமணம் செய்துவிட்டார். சத்தியமூர்த்தியின் மனைவி கமலா அண்ணியாக மட்டுமில்லாமல் தாயாகவும் அனைவரையும் பேணி பாதுகாத்தார்கள். முக்கியமாக குழந்தையாக இருந்த கவிதாவை தன் மகளாகவே வளர்த்தார்கள். இன்று குருமூர்த்தியும், கவிதாவும் இந்த குடும்பத்தில் இல்லை. குருமூர்த்தி காதல் திருமணம் செய்தது ராமலிங்கத்திற்கு பிடிக்காமல் ஒதுக்கி விட்டார். வேறு ஏதோ ஊருக்கு பிழைக்க போன குருமூர்த்தியும், அவர் மனைவியும் மர்மமான முறையில் இறந்துவிட்டனர். அவர்களின் மகன் தான் நந்தன். சத்தியமூர்த்தி நந்தனை மீட்டு கொண்டு வந்து தன் மகனாக வளர்த்தார். குடும்பத்தில் அனைவரும் நந்தனை ஏற்றுக்கொண்டாலும் மாலினிக்கு என்றுமே அவன் மேல் சின்ன துவேஷம். இருந்தாலும் வளர்ந்து நன்றாக படித்து லண்டன் எல்லாம் சென்று படித்து வந்தவன், தொழிலில் வெற்றி கண்டவன், கோடிகளை குவித்தவன், மகள் விரும்புகிறாள், மகளை திருமணம் செய்தால் தன் மகனுக்கும் ஏதாவது வழி செய்வான் என்று மாலினி தன் துவேஷத்தை முடிந்த வரை மறைத்து வைத்தாள். இன்று எல்லாம் வெடித்து விட்டது.
மாலை ஆபீஸ் முடிந்ததும் பௌலிங் போகலாம் வருகிறாயா என்று ரோஹித் நந்தனை அழைத்தான். நந்தன் மறுத்து விட்டான். காரை tidel park க்கு செலுத்தினான்.
“Sreya, are you free this evening?”
“Hmmm depends, the guy who will show up or the guy who will abscond?”
“the guy who will sweep you off your feet if you come out now”
“What!?? Are you outside?”
“sign off, come out and see”
ஸ்ரேயா 15 நிமிடங்களில் வந்து காரில் ஏறினாள்.
நந்தன் காரை இயக்கினான்.
10 நிமிடங்கள் இருவரும் எதுவும் பேசவில்லை. ஒருவரை ஒருவர் பார்த்து புன்னகை மட்டும் புரிந்தனர்.
“என்ன surprise? கல்யாண வேலைகளில் busy என்றீர்களே?”
“ஆமாம் ஆனால் இன்று இரவு நமக்காக மட்டும் தான்” என்று கண் சிமிட்டினான்.
“ஹ்ம்ம் உங்களை புரிஞ்சுக்கவே முடியல நந்து”
“Don’t try”
“இல்லை மாட்டேன், புரியாத புதிராக இருப்பதால் தானோ என்னவோ உங்கள் மீது ஒரு ஈர்ப்பு, நான் இது வரை புரிந்து கொண்ட ஆண்கள் மீது எனக்கு இருப்பதெல்லாம் வெறுப்பு மட்டுமே”
“என் தேவைக்காக மட்டும் உன்னை தேடுகிறேன் என்று ஒரு நாளும் என் மீது உனக்கு வெறுப்பு ஏற்பட்டது இல்லையா?”
“நான் கூட இந்த கேள்வியை என்னிடம் கேட்டிருக்கிறேன், ஆனால் உங்கள் மீது எனக்கு வெறுப்பு ஏற்பட்டதில்லை, ஆனால் உங்கள் காதலியாகவோ, மனைவியாகவோ இருந்திருந்தால் உங்களை வெறுத்திருப்பேன்” என்று சிரித்தாள்.
“I agree” என்றான் நந்தன்.
“உண்மையை சொல்ல வேண்டும் என்றால் உங்கள் தேவைக்காக என்னை தேடினாலும் உங்களை வெறுக்காமல் இருக்க காரணம், அதில் என் தேவையையும் பூர்த்தி செய்கிறீர்கள், அதிலும் ஒரு கண்ணியத்துடன் என்னை judge செய்யாமல் இருக்கிறீர்கள், என்னையும் பெண்ணாக மதிக்கிறீர்கள்”
இருவரும் நந்தனின் பிளாட்டை அடைந்தார்கள். உள்ளே சென்றதும் நந்தன் அவளை இடுப்போடு இழுத்து அணைத்தான்.
“Hey let me refresh myself first” என்று அவனை தள்ளிவிட்டு விலகி போனாள் ஸ்ரேயா.
“hmm let’s refresh together” என்று விலகிப்போனவளை தன் பிடிக்குள் கொண்டு வந்தான் நந்தன்.
Comments
Post a Comment