Sms ch 10 சேற்றில் முளைத்த செந்தாமரையோ
அத்தியாயம் 10
சத்யா “தருண் இனிமேல் நீ தனியாவே ஸ்கூலுக்கு போய்ட்டு வர பழகிக்கணும்”
“நான் இப்பவே தனியா தான மா போய்ட்டு வந்துட்டு இருக்கேன்” என்றான் யூனிபோர்ம் அணிந்தபடி.
“சில சமயம் வள்ளி அக்கா, சின்னுவோட போவ இல்ல, இனிமேல் அவங்க கூட போக சொல்லி அம்மா சொல்ல மாட்டேன், அவங்க கேட்டாலும் நீயும் தனியா போறதா சொல்லிடனும்”
“ஏன்மா? இனிமேல் சின்னுவோட நான் பேசக்கூடாதா?”
“பேசக்கூடாதுன்னு சொல்லல, முடிஞ்ச வரை சின்னு இல்லன்னா கூட நீயாவே நேரத்தை செலவிட பழகிக்கணும்”
தருண் ஒன்றும் புரியாமல் விழித்தான்.
“சரி நீ கிளம்பு” என்று தருணை அனுப்பிவிட்டு அவளும் வள்ளி வருவதற்குள் வேலைக்கு கிளம்பி விட்டாள்.
Dyeing section ல் சூப்பர்வைசர் மணிமாறன் சத்யாவை பார்த்ததும் ஒரு பேப்பருடன் வந்தார். “இன்னைக்கு இந்த solvents எல்லாம் எடுத்து வந்து குறிப்பிட்ட dyes குறிப்பிட்ட விகிதத்தில் கலந்து வை. உதவி தேவைப்பட்டால் என்னை கூப்பிடு” என்று சொல்லிவிட்டு சத்யா கவனிக்காத நேரம் அவளை ஏற இறங்க பார்த்துவிட்டு சென்றார்.
Solvents பெரிய கலங்களில் இருக்க அவற்றை தூக்குவதும் சிலவற்றை refrigerate அறையில் கொண்டு வைப்பதும், எடுப்பதும் சத்யாவிற்கு கஷ்டமாக தான் இருந்தது. இருந்தாலும் மணிமாறனை உதவிக்கு அழைக்க அவளுக்கு விருப்பம் இல்லை. அவருடைய பார்வை அவள் மேல் படர்வதை அவள் கவனிக்க தவறவில்லை. இன்னும் சிலர் அங்கே வேலை செய்தார்கள். ஆனால் அவர்களிடமும் உதவி கேட்க தயங்கினாள். எப்படி பார்த்தாலும் தான் சம்பாதிக்கும் பணத்திற்கு வேலை செய்து தானே ஆக வேண்டும், எல்லா நேரமும் மற்றவர்களிடம் உதவி எதிர்பார்க்க முடியாதே, அதுவும் மது மேடம் கிட்ட பேசி மாற்றிக்கொள்ளும் வரை தானே என்று சகித்து கொண்டாள்.
நந்தன் தாத்தாவுடனும் கண்ணப்பனுடனும் ராமேஸ்வரம் கோயில், கடல், தீர்த்த கிணறுகள், ராமர் பாதம், மிதக்கும் கல், விபீஷணன் கோயில், தனுஷ்கோடி, அப்துல் கலாம் இல்லம் என்று எல்லாவற்றையும் சுற்றி பார்த்தான். தாத்தாவிற்கு மிக்க மகிழ்ச்சி, திருப்தி என்று தான் சொல்ல வேண்டும். நந்தனுக்குமே இந்த பயணம் புதிதாகவும் மன நிம்மதியை அளிப்பதாகவும் இருந்தது.
புதன் கிழமை மாலை அவர்கள் சென்னை திரும்பினர். திருமண வேலைகள் ஜோராக நடந்து கொண்டிருந்தன. வியாழக்கிழமை நந்தன் அலுவலகம் சென்றான்.
மதுவை intercom ல் அழைத்தான்.
“Good morning sir”
“Good morning மது, any important update or
issue?”
“Everything went as usual sir, so no issues”
“ok good, அப்புறம் கோயம்பத்தூர்ல இருந்து புதுசா ஒரு seller கிட்ட இருந்து காட்டன் வாங்க deal போட்ருந்தோமே, இந்த Monday first டெலிவரி வந்திருக்கணுமே”
“Yes sir, வந்தாச்சு”
“QC பண்ணியாச்சா, எனக்கு அந்த report வேணும்”
“ரெடியா இருக்கு sir, here it is”
மேலும் சில விஷயங்களை கலந்தாலோசித்த பின் மதுவை அனுப்பிவிட்டு மற்ற வேலைகளில் கவனம் செலுத்தினான் நந்தன்.
தருண் பள்ளி முடிந்து வரும் வழியில் இருந்த fancy store க்குள் நுழைந்தான். தருணை பார்க்கவென்று காரில் வந்து கொண்டிருந்த நந்தன் தருணை கவனித்து விட்டான். Fancy store முன் காரை நிறுத்திவிட்டு தருணுக்காக காத்து கொண்டிருந்தான். தருண் வர தாமதம் ஆகியதால் நந்தன் காரை விட்டு இறங்கி கடையின் வாசலில் நின்று உள்ளே நின்ற தருணை புன்னகையுடன் பார்த்து கொண்டிருந்தான்.
தருண் “இது எவ்ளோ? இது? இது?” என்று ஒவ்வொரு பொருளாக கேட்டு கொண்டிருந்தான். கடைக்காரர் “தம்பி உனக்கு என்ன வேணும் சொல்லு, என்னவோ கடையயே வாங்கப்போற மாதிரி எல்லாத்துக்கும் விலை கேட்டுகிட்டு இருக்க?” என்று கடுப்படித்தார்.
தருண் முடிவாக ஒரு கம்மலை எடுத்து வந்து வைத்தான். “இது எவ்ளோ அங்கிள்?” என்றான்.
“இது 150 ரூபாய், உன்கிட்ட இருக்கா?”
தருண் தன் பையிலிருந்த பணத்தை எல்லாம் எடுத்து வெளியே வைத்து எண்ணினான். “அங்கிள் இதுல 100 ரூபாய் இருக்கு, இதை வச்சுக்கிட்டு குடுங்களேன், மீதி காசு நான் அம்மாகிட்ட வாங்கிட்டு வந்து நாளைக்கு குடுத்துடுறேன்”
“100 ரூபாய்க்கு வேற ஏதாவது கம்மல் வாங்கிக்கோ தம்பி, கடன் எல்லாம் நான் குடுக்கறது இல்ல”
தருண் தயங்கி நின்றான்.
“சீக்கிரம் சொல்லு பா, இத பாரு, இதெல்லாம் 100 ரூபாய்க்கு கம்மி தான்”
தருண் மீண்டும் ஸ்கூல் bag, சட்டை பையில் எல்லாம் காசு தேடினான், கிடைக்கவில்லை, மீண்டும் தயங்கி நின்றான்.
நந்தன் உள்ளே சென்று “ஹாய் தருண்” என்று சொல்லிவிட்டு பர்ஸில் இருந்து காசை எடுத்து கொடுத்து அந்த கம்மலை வாங்கி தருணிடம் நீட்டினான்.
“இல்லை அங்கிள், வேண்டாம்” என்றான்.
“ஏன்?” என்று கேட்டுவிட்டு கடைக்கு உள்ளே சில சின்ன பெண்கள் வருவதை பார்த்துவிட்டு அவர்களுக்கு வழி விட்டு விட்டு “சரி வா, கார்ல போய் பேசிக்கலாம்” என்று சொல்லி தருணை அழைத்து கொண்டு வெளியே வந்தான்.
காரில் அவன் ஏறி அமர்ந்ததும் “இந்தா தருண் வாங்கிக்கோ” என்று மீண்டும் அந்த கம்மலை கொடுத்தான். தருண் வேண்டாம் அங்கிள் என்றான்.
“ஏன் தருண் வேண்டாம் என்கிறாய்?”
“இல்ல என் அம்மாவுக்கு நான் சேர்த்து வச்ச காசுல வாங்கி தரணும்னு நினச்சேன்”
“ஓஹோ.... ம்ம்ம் அவ்வளவு தானே? நீ வைத்திருக்கும் காசை கொடு” என்றான்.
“ஆனால் அங்கிள், என்கிட்டே 100 ரூபாய் தான் இருக்கிறது” என்று தருண் அவன் வைத்திருந்த 100 ரூபாயை கொடுத்தான்.
“அதனால என்ன? அப்புறம் காசு கிடைக்கும் போது மீதி 50 ரூபாயை கொடு”
“சரி அங்கிள்”
“என்ன விசேஷம்? அம்மாவுக்கு கம்மல் எல்லாம் வாங்கி தர? அம்மா birthday வா?”
“இல்ல அங்கிள், ரெண்டு மூணு நாளா அம்மா அழுதுக்கிட்டே இருக்காங்க, அதான் அவங்கள சந்தோஷப்படுத்த”
நந்தன் சிறிது நேரம் அமைதியாக இருந்தான்.
“சரி வீட்டுக்கு கூட்டிட்டு போகவா?” என்றான்.
“ம்ம்ம் சரி அங்கிள்”
நந்தன் காரை ஸ்டார்ட் செய்து கொண்டே கேட்டான். “சரி நீ எப்படி இருக்க? ஒழுங்கா படிக்கிறியா?”
“ம்ம்ம் நல்லா படிக்கிறேன் அங்கிள், நீங்க ஏன் அங்கிள் 10 நாளா வரல?”
“அதுவா அங்கிள் கோயிலுக்கு எல்லாம் போக வேண்டி இருந்துச்சு, அதனால தான், சரி கம்மல் பாத்து ஏது இவ்ளோ காசுன்னு அம்மா கேட்டா என்ன சொல்லுவ?”
“பாட்டி குடுத்த காசுல சேர்த்து வச்சிருந்த காசு 100 ரூபாய், 50 ரூபாய் நீங்க குடுத்த காசுன்னு சொல்லுவேன்”
நந்தன் கொஞ்சம் யோசித்தான். “அம்மாவுக்கு என்னை பிடிக்காதுன்னு சொல்லுவியே, அப்போ நான் குடுத்த காசுல வாங்கினதா சொன்னா அம்மா கோச்சிக்க மாட்டாங்களா?”
“ஆமாம் அங்கிள், கோச்சிகிக்குவாங்க, இப்போ என்ன பண்ணலாம்”
“ஹ்ம்ம் எல்லாமே பாட்டி குடுத்த காசுல வாங்கினதுன்னு சொல்லிடேன்”
“ம்ம்ம் சரி அங்கிள்”
“சரி பாட்டி எங்க இருக்காங்க?”
“பாட்டி சாமிகிட்ட போய்ட்டாங்களாம்”
“ஓ எப்போ?”
“தெரியல அங்கிள், பாட்டியை ரொம்ப நாளா பாக்கவே இல்ல, அப்புறம் நாங்க இந்த ஊருக்கு வந்துட்டோமா, பாட்டி எங்க மா னு கேப்பேன், அப்புறம் தான் அம்மா சொன்னாங்க, நாங்க இந்த ஊருக்கு வரர்துக்கு முன்னாடியே பாட்டி சாமிகிட்ட போய்ட்டாங்களம்”
“இதுக்கு முன்னாடி எந்த ஊர்ல இருந்தீங்க?”
“மும்பைல அங்கிள்”
அதற்குள் தருணின் வீடு வர நந்தன் காரை நிறுத்தினான்.
தருண் இறங்கி கொண்டு “அங்கிள் நீங்களும் இறங்குங்க, வீட்டுக்கு வாங்க” என்றான்.
நந்தன் சிறிது தயங்கி வீட்டின் வாசலை நோக்கினான். வீடு வெளியே பூட்டி இருந்தது. நந்தனும் இறங்கினான்.
“வீடு பூட்டி இருக்கே?” என்றான்.
“அம்மா வேலைல இருந்து திரும்பி வர டைம் ஆகும், என்கிட்ட சாவி இருக்கு, நீங்க உள்ள வாங்க” என்று சொல்லிக்கொண்டே வீட்டை திறந்தான்.
நந்தனை உள்ளே அழைத்து சென்று கட்டிலில் அமர வைத்து விட்டு தருண் கை கால்களை கழுவி வேறு உடை போட்டுகொண்டு நந்தனுக்கும் அவனுக்கும் முறுக்கு எடுத்து கொண்டு வந்து உட்கார்ந்தான். “இந்தாங்க அங்கிள், சாப்பிடுங்க” என்றான்.
நந்தன் ஒரு புன்னகையுடன் வாங்கிக்கொண்டு “ச்ச அங்கிள் கூட உனக்காக கொஞ்சம் வாங்கி வந்தேன், மறந்து காரிலேயே வைத்து விட்டேன் பார், இரு எடுத்துட்டு வரேன்” என்று வெளியே சென்று காரில் இருந்து ஒரு துணிப்பையை கொண்டு வந்தான்.
துணிப்பையை தருணிடம் நீட்ட “என்ன அங்கிள் இது?” என்று தருண் கேட்டான்.
“வாங்கி பாரு”
தருண் வாங்கி ஒவ்வொரு பொருளாக எடுத்தான். அப்துல் கலாம் போட்டோ, வரைவதற்கும், கலர் அடிப்பதற்கும், அப்துல் கலாம் incomplete portrait, அப்துல் கலாம் quotes நிறைந்த ஒரு புக், seashell ல் decorate செய்யப்பட்ட சில விளையாட்டு பொருட்கள், colouring pens, crayons, கொஞ்சம் தின்பண்டங்கள் இருந்தன. எல்லாவற்றையும் தருண் ஆர்வமாக பார்த்துக்கொண்டிருந்தான். “இதெல்லாமே எனக்கா அங்கிள்?” என்று கேட்டான்.
“ஆமாம் உனக்கு தான், பிடிச்சிருக்கா? உனக்கு படம் வரையரதுல ஆர்வம் இருக்குன்னு தான் இந்த மாதிரி வாங்கிட்டு வந்தேன். அடுத்த முறை நான் வரும் போது அப்துல் கலாம் ஐயா portrait complete பண்ணி கலர் பண்ணி காமிப்பியா?”
“கண்டிப்பா அங்கிள், சின்னு கூடயும் நான் இதெல்லாம் share பண்ணிக்கவா?”
“கண்டிப்பா”
“ஆனா சின்னு கூட நான் பேசக்கூடாது விளையாட கூடாதுன்னு அம்மா சொல்ராங்க, எனக்கு இருக்கறதே அவன் ஒரு friend தான், அவனோடயும் பேசக்கூடாதுன்னா bore அடிக்கும் இல்ல அங்கிள்”
“ஆமாம் bore அடிக்கும், ஆனா அம்மா ஏதோ நல்ல காரணத்திற்காக தான் சொல்லி இருப்பார்கள்”
“ம்ம்ம் Sunday அன்னைக்கு அம்மா சின்னு வீட்டுல இருந்து அழுதுட்டே வந்தாங்க, அதுக்கப்புறம் தான் என்னை சின்னு கூட சேரக்கூடாதுன்னு சொல்லிட்டாங்க” என்று தருண் சோகமாக சொன்னான்.
நந்தன் தொடர்ந்து சின்னுவை பற்றி பேசினால் தருண் மேலும் ஏதாவது வருத்தப்படுவான் என்று நினைத்து பேச்சை மாற்ற எண்ணினான்.
“சரி நீங்க இங்க எவ்ளோ நாளா இருக்கீங்க?”
“நெறைய நாளா இருக்கோம் அங்கிள்”
ஒரு சிறு புன்னகையுடன் “இதுக்கு முன்னாடி எந்த ஸ்கூலில் படிச்ச?”
“shishuvan school” தருண் colouring pens ஐ பார்த்துக்கொண்டே பதில் சொன்னான்.
“அந்த ஸ்கூல் எங்க இருக்கு?”
“மும்பைல”
தருண் அப்படியே படுத்து கொண்டு அப்துல் கலாம் படத்தை வரைய ஆரம்பித்து விட்டான். நந்தனும் அவனை இடையூறு செய்யாமல் பார்த்து கொண்டிருந்தான். கொஞ்ச நேரம் கழித்து வாட்சை பார்த்தான். மணி 7 ஆகி இருந்தது.
“தருண் அம்மா எப்போ வருவாங்க?”
“இப்போல்லாம் ரொம்ப லேட்டா தான் வராங்க அங்கிள், நிறைய வேலை இருக்காம்”
“நீ எப்படி தனியாக இருப்பாய்?”
“எனக்கு ஒன்னும் பயம் இல்ல அங்கிள், இப்போல்லாம் அந்த மொரட்டு அங்கிள் கூட வரர்தில்ல, போன தடவை வந்தப்போ உங்களை பாத்து பயந்துட்டாரு போல” என்று படம் வரைந்து கொண்டே சிரித்தான் தருண்.
நந்தனும் புன்னகைத்து விட்டு மறுபடியும் வாட்சை பார்த்தான். தருணை தனியாக விட்டு செல்லவும் அவனுக்கு மனம் வரவில்லை. ஆனால் தன்னை பார்த்தால் சத்யா கோபப்படவும் வாய்ப்பு உள்ளது, வீணாக அவளை கோபப்படுத்த அவனுக்கு விருப்பம் இல்லை. என்னவோ அவளை பார்க்க காத்திருப்பது போல அவள் நினைக்கவும் வாய்ப்பு உள்ளது. இப்படி சில குழப்பத்துடன் யோசித்திருந்தவன் படுக்கை அறை வெளியே சத்யா நின்றிருப்பதை பார்த்து எழுந்து நின்றான். அவள் பார்வையிலே கோபம் கொழுந்து விட்டு எரிந்தது. அதை பொருட்படுத்தாமல் “ஹலோ” என்றான் ஒரு சிறு புன்னகையுடன். அவள் பதில் எதுவும் சொல்லவில்லை.
“சரி நான் கிளம்புறேன் தருண்”
“ஏன் அங்கிள், அம்மா வர வரைக்கும் இங்கயே இருங்களேன்” என்றான் படத்தை வரைந்து கொண்டே.
“அம்மா வந்தாச்சு” என்று படுக்கை அறையை விட்டு வெளியே சென்றான்.
“அம்மா வந்துட்டியா?” என்று தருண் துள்ளி குதித்து எழுந்தான். வந்து அவளை இடுப்போடு கட்டி கொண்டான். தருணுக்காக கோபத்தை மறைத்து கொண்டு சத்யா புன்னகைத்தாள்.
“நீங்க ஏன் இவ்ளோ லேட்டா வரீங்க?” என்று நந்தன் கேட்க சத்யா மீண்டும் முறைத்தாள்.
“வேலைப்பளு அதிகமோ என்ற எண்ணத்தில் கேட்டால் இவள் ஏதோ தவறாக புரிந்து கொண்டாள் போல” என்று நினைத்து “சரி நான் இப்போ நிஜமாவே கிளம்புறேன், வரேன் தருண்” என்று வெளியே வந்தான்.
தருணை உள்ளே விட்டுவிட்டு நந்தனின் பின்னால் சத்யா வந்தாள். “ஒரு நிமிஷம்” என்றாள்.
நந்தன் திரும்பி பார்த்து “என்னையா?” என்றான்.
“ஆமாம் உங்களைத்தான், ஏன் அடிக்கடி வருகிறீர்கள்?”
“அடிக்கடியா? நான் வந்து ஒரு 20 days இருக்கும் இல்ல?” என்றான் நந்தன் தீவிரமாக யோசிப்பவன் போல.
“20 நாள் எல்லாம் இல்ல, 9 நாள் தான் ஆகுது”
“ஓ நீங்க சொன்னா கரெக்டா தான் இருக்கும்”
“விளையாடுறீங்களா? இங்கே வராதீர்கள் என்றால் வராதீர்கள்”
நந்தன் தெருவை சுற்றும் முற்றும் பார்த்தான். சத்யாவை நோக்கி இரண்டு அடிகள் எடுத்து வைத்தான். சத்யா கொஞ்சம் பயந்து விட்டாள்.
“தருணை பார்க்க தான் நான் வருகிறேன், நீங்கள் தவறாக எதுவும் நினைக்க வேண்டாம்”
“தருணை கூட பார்க்க வராதீர்கள் என்று தான் சொல்கிறேன்”
நந்தன் ஒரு சிறு அமைதிக்கு பின் “தருணை பார்க்காமல் இருக்க முடியும் என்று எனக்கு தோன்றவில்லை, மன்னித்து விடுங்கள், அப்பப்போ நான் வந்து அவனை பார்த்துவிட்டு செல்கிறேன்”
“எவ்வளவு திமிர் இவனுக்கு?” என்று சத்யாவிற்கு தோன்றியது. “நான் போலீஸ் கிட்ட போக மாட்டேன்னு இவனுக்கு தெரிஞ்சு இருக்குமோ, அதான் இவ்வளவு திமிரா பேசுறானா?” சத்யா யோசித்தாள்.
நந்தன் தலையை சாய்த்து அவளை பார்த்து கேட்டான். “நான் கிளம்பலாமா?”
சத்யா அவனை மீண்டும் முறைத்தாள். “இவனை என்ன சொல்லி தடுப்பது?”
“ஹலோ???” என்றான் நந்தன் மீண்டும்.
சத்யா நிமிர்ந்து “நீ நினைப்பது நடக்காது, ஒருகாலும் நடக்காது” என்றாள்.
“நீ” ஒருமையில் பேசியது நந்தனை கொஞ்சம் அதிகமாகவே சீண்டியது. இருந்தாலும் கொஞ்சம் அமைதியாகவே கேட்டான். “நான் என்ன நினைக்கிறேன்? அது ஏன் நடக்காது?” என்று கேட்டான்.
“நீ எனக்காக தான் அடிக்கடி வர, தருணை பார்க்க வேண்டும் என்பதெல்லாம் சும்மா, அதனால் தான் சொல்கிறேன், நீ நினைப்பது நடக்காது, மற்றவர்கள் சொல்வது போல் இல்லை நான், அதனால் உன் தவறான எண்ணத்தை கை விட்டுவிடு, இனி இங்கு வந்து உன் நேரத்தை வீணாக்காதே”
நந்தன் தன் மூச்சை கட்டுப்படுத்தி பேச ஆரம்பித்தான். “சத்யா நீங்கள் என்னைப்பற்றி ரொம்பவே தவறாக நினைத்து இருக்கிறீர்கள், உங்களை பற்றியும் கொஞ்சம் அதிகமாகவே நினைக்கிறீர்கள், மீண்டும் சொல்கிறேன் நான் உங்களுக்காக வரவில்லை” லேசாக குனிந்து மெதுவாக சொன்னான் “அப்படியே நீங்கள் வேண்டும் என்றாலும் நான் இவ்வளவு மெனக்கெட வேண்டிய அவசியம் இல்லை, நான் விரும்பும் பெண்களை எப்படி அடைய வேண்டும் என்பது எனக்கு தெரியும், இத்தனை நாட்கள் வந்து போக வேண்டிய அவசியம் இல்லை” என்று சொல்லிவிட்டு திரும்பி காரை நோக்கி நடந்தான்.
சத்யா அவன் பேசியவற்றை ஜீரணிக்க முடியாமல் அதே இடத்திலேயே நின்று கொண்டிருந்தாள்.
நந்தன் மீண்டும் திரும்பி வந்தான். “இப்போ போறேன், திரும்ப வருவேன், உங்களுக்காக இல்லை, தருணுக்காக, ஏனோ என்னால் அவனை பார்க்காமல் இருக்க முடியவில்லை, sorry” என்று சொல்லிவிட்டு வேகமாக நடந்து காரில் ஏறி கிளம்பினான்.
Comments
Post a Comment