Sms ch 5 சேற்றில் முளைத்த செந்தாமரையோ

அத்தியாயம் 5


சத்தியமூர்த்தியும் கமலாவும் தோட்டத்தில் உட்கார்ந்து பேசி கொண்டிருந்தார்கள்.


“நேத்து நைட் கூட வீட்டுக்கு வரல போல?”


“வரல, அவனுக்கு சீக்கிரம் கல்யாணம் பண்ணி வச்சிடணும்னு தோணுது, ஆனா எப்படி அவன சம்மதிக்க வைக்கறதுன்னு தெரியல, இந்த பாழா போன வெளிநாட்டுக்கெல்லாம் அனுப்பாதீங்கன்னு சொன்னேன், கேட்டீங்களா? அங்க படிக்க போய்ட்டு வந்த பிறகு தான் இந்த மாதிரி வழி தவறி போக ஆரம்பிச்சிட்டான்”


“லண்டன் போய் தான் கெடணுமா?”


“பின்ன? அதுக்கு முன்னாடி இந்த மாதிரி பழக்கம் எல்லாம் அவனுக்கு இல்லையே, அவன் அம்மா அப்பா ஞாபகம் வரும் போது நம்ம பண்ணை வீட்டுக்கு போவான், அதோட சரி”


“சின்ன பையனா இருந்தப்போ பண்ணை வீட்டுக்கு போனான், பெரியவனா ஆனப்புறம் இந்த பழக்கம், இதுல வெளிநாட்ட ஏன் குறை சொல்வானேன்?”


“உங்க முடிவ குறை சொன்னா உங்களுக்கு பிடிக்காதே”


“சரி இதை எப்படி சரி பண்ணலான்னு யோசிப்போம், அவனை எப்படி கல்யாணத்துக்கு சம்மதிக்க வைக்கறது?”


“அவனுக்கு பிடிச்ச பொண்ணா இருந்தாலும் பரவால்லன்னு சொல்லியாச்சு, அதுக்கும் மசிய மாட்டேங்குறான்”


“சொல்ல மறந்துட்டேனே, ரெண்டு நாள் முன்னாடி ஒரு சின்ன பையன கார்ல கூட்டிட்டு போய் டிபன் எல்லாம் வாங்கி குடுத்து அவனை கொண்டு போய் வீட்டுல விட்டுட்டு அந்த பையனோட அம்மாவோட கொஞ்ச நேரம் நின்னு பேசிட்டு வந்தான், அதுக்கு முந்தின நாள் இரவு அந்த பையன் வீட்டுல தான் இருந்திருக்கான்”


“என்னங்க சொல்றீங்க? அந்த வீட்டுல அந்த பையனோட அப்பா? இல்ல வேற யாரும் இல்லையா? எப்படி பழக்கமாம்?”


“எப்படி பழக்கம்னு எல்லாம் தெரியல, ஆனா அந்த பொண்ணோட கணவர் இப்போ உயிரோட இல்ல போல, இவனுக்கும் அவங்கள ரொம்ப நாள் பழக்கம் எல்லாம் இல்ல பேசினது வச்சு பாத்தா, ஏதோ உதவி செஞ்சிருக்கான், ஆனா அந்த பையனுக்கு இவன் மேல ஏதோ அன்பு, இவனுக்கும் அந்த பையன் மேல அன்பு, ஒரு நாள் பழக்கத்துல அப்படி ஒரு இணக்கம் ஏற்படுமான்னு சந்தேகமா தான் இருக்கு”


“ஒருத்தருக்கு கஷ்டம்னா உதவி செய்ய யோசிக்க மாட்டான், ஆனா அவங்க வீட்டுல தங்குற அளவுக்கு.... ஒண்ணுமே புரியலைங்க, ஒரு பக்கம் கிரிஷ் கல்யாணம், இன்னொரு பக்கம் உங்க தங்கை மாலினி, இதுல இவனை நினச்சா என்ன பண்றதுன்னே புரியல”


“இங்க பாரு, ஒரே ஒரு வழி தான் இருக்கு, நீ அடிச்சு சொன்னா கல்யாணத்துக்கு சம்மதிச்சுடுவான், நீ ரொம்ப யோசிக்காம கொஞ்சம் அவனை சம்மதிக்க வை”


“எங்கேங்க? அம்மா இந்த ஒரு விஷயத்துல உங்க பேச்சை மீறுற மாதிரி வச்சிடாதீங்கன்னு பயமுறுத்துறான், தனியா ஒரு பிளாட் வாங்கி வச்சிருக்கான், நம்மள விட்டு தனியா போய்ட்டா என்னங்க பண்றது? என்னால அவனை பிரிஞ்சு இருக்க முடியாதுங்க”


“அதுக்காக அவன் கெட்டு சீரழிஞ்சா பரவால்லையா? நான் சொல்றத கேளு, நாளைக்கு நம்ம ஜோசியற வரை சொல்றேன், நம்ம நந்து ஜாதகத்தை காமிச்சு கேக்கலாம், அப்புறம் மத்தத பத்தி பேசலாம், என்ன சொல்ற?”


“சரிங்க வர சொல்லுங்க”


“சரி ரோஹித், ஸ்ரீஜா பிரச்சனை என்ன ஆச்சு?"


"கிரிஷ் கல்யாணத்த காரணம் காட்டி கூட்டிட்டு வந்து வச்சிருக்கேன், புருஷன் பொண்டாட்டி பக்கத்துலேயே இருந்தா பேசி சரி பண்ணிப்பாங்க”


“ஹ்ம்ம், சரி பாப்போம்”

நந்தன் ஸ்ரேயாவை அவள் ஆபீஸ் அருகே இறக்கி விட்டு கிளம்பினான்.


ஸ்ரேயாவின் தோழி “ஹேய் ஸ்ரேயா, என்ன மறுபடியும் அவனோட பாக்குறேன், கல்யாணம் பத்தி பேச வேண்டியது தானே?”


“ஹேய் சீ, கல்யாணமா? அவனையா?”


“ஏன் டி, ஆள் handsome ஆ இருக்கான், பணக்காரனா இருக்கான், அந்த மேட்டர்லயும் impressed தான நீ? அப்புறம் என்ன” கண் சிமிட்டினாள்.


“ஹ்ம்க்கும் 6 மாதமாக பழகுகிறேன் அவனோட, இதற்கு முன் பழகிய பெண்களிடம் இருந்து எச்சரிக்கை வந்த போது கூட நான் அதை பெரிதாக எடுத்து கொள்ளவில்லை, ஆனால் பார், பெரிய ஆள் தான் இவன்”


“ஏண்டி ஏதாவது தவறாக இம்சிக்கிறானா?” என்று பயந்து போய் கேட்டாள்.


“ச்ச ச்ச, அப்படி எல்லாம் இல்லடி, விருப்பம் இல்லை என்றால் சுண்டுவிரல் கூட படாது, பக்கா ஜென்டில்மேன், அதே மாதிரி அவனோட இருக்கும் போது ஒரு தூசி துரும்பு கூட உன்னை அண்டாது, அவ்வளவு பத்திரமாக பார்த்துக்கொள்வான்”


“அப்புறம் என்னடி? கல்யாணமே பண்ணிக்காம இப்படியே ஓட்டிடலான்னு பாக்குறியா? அது சரியா வருமா? நல்லா இருக்குமா? காற்றுள்ள போதே தூற்றி கொள் கேள்வி பட்டது இல்லையா?”


“அது இல்லடி, இவ்ளோ நாள் பழகுறேன், ஆனா அவன் ரொம்ப careful, I mean இது வரை அவனை பத்தி பெருசா பேசினதில்ல தெரியுமா? உடலுறவில் என்னை திருப்தி படுத்தலாம், ஆனால் அவன் ஒரு போதும் தன்னுடைய கவசத்தை கழற்றியதில்லை, அந்த கவசத்தை அவன் தெரிந்து போட்டிருக்கிறானா? இல்லை அவனே அறியாமல் போட்டிருக்கிறானா என்று எனக்கு தெரியாது, ஆனால் நம்மிடம் வெளிப்படையா இல்லாமல் இருக்கும் ஒருவனுடன் திருமணம் என்பது என்னை பொருத்த அளவு தலை மேல் மண்ணை வாரி கொட்டி கொள்வது போல், ஒரு திருமணத்தில் நான் ஏமாந்தது போதும், இந்த மாதிரி ஆண்கள் எப்படி வேண்டுமானால் மாறலாம், மிகவும் நல்லவனாக கூட இருக்கலாம், அல்லது அந்த வசீகரித்திற்கு பின்னால் ஒரு மிருகம் கூட ஒளிந்து இருக்கலாம், என்னோடு அவன் உணர்வுகளை வெளிப்படையாக பகிர்ந்து இருந்தால் நான் அவனை consider பண்ணி இருப்பேன், நானே கூட ப்ரொபோஸ் செய்திருப்பேன், ஆனால் ஒரு நாளும் sex தாண்டி அவன் உணர்வுகளை அவன் பகிர்ந்ததில்லை, ஹ்ம்ம் இத்தனைக்கும் sex என்பதே உணர்வுகளுடன் உடலை பகிர்ந்து கொள்வது தான், ஆனால் ஒரு limit வைத்து கொள்வான் எப்போதுமே, actuala நான் உணர்வாவது, மண்ணாவது என்று தான் வெறும் உடல் உறவுக்காக தான் நான் அவனுடன் பழக ஆரம்பித்தேன், ஆனால் என்னையே அவனுடைய உணர்வுகளை பகிர மாட்டானா என்று ஏங்க வைத்து விட்டான் ஒரு கட்டத்தில், அவ்வளவு charming and gentleman, anyhow I can’t even think about marrying a mystery man, வேற ஏதாவது ஏமாந்த பொண்ணு கிடைப்பா அவனுக்கு”


இருவரும் ஆஃபீசை அடைந்ததும் பேச்சை மாற்றினார்கள்.


சத்தியமூர்த்தி வீட்டில் ஜோசியர் உட்கார்ந்து கணக்கு போட்டு கொண்டிருந்தார். நந்தன் அங்கு இல்லை. அவனுக்கு இதில் விருப்பமோ, நம்பிக்கையோ இல்லை, அதனால் முடிந்த அளவு அவனுக்கு தெரியாமல் தான் ஜோசியரை வரவழைப்பது.


90 வயதிலும் ராமலிங்கம் அவர்களுக்கு wheel chair ல் இருந்தாலும் கண் காது புத்தி இயக்கங்களில் எந்த பிசகும் இல்லை. “உன் அப்பா தான் நம்ம குடும்பத்துல எல்லாத்துக்கும் ஜோசியம் பாத்து சொல்லுவான், வெறும் ஜோசியனா மட்டும் நான் அவனை பாக்கல, ஒரு சினேகிதனா தான் பாத்தேன், அவன் சொன்னது எதுவும் தவறினதில்லை, என் மனைவி போறத பத்தி கூட சொன்னான், ஆனா அப்போ அத நம்பல, குடும்பத்துல முன்னோர்கள் செஞ்ச பாவம் பின் தொடருது, துர்மரணங்கள் நிகழும்னு சொன்னான், அவன் மேல கோச்சிக்கிட்டு கொஞ்ச நாள் பேச கூட இல்லை, ஆனா அவன் சொன்ன மாதிரியே என் ரெண்டாவது பையன், மருமகள், என் கடைசி பொண்ணுன்னு எல்லாரையும் இழந்துட்டேன், 90 வயசாகியும் குத்து கல்லா நான் இருக்கேன், வாழ வேண்டிய சின்னஞ்சிருசுங்க எல்லாம் போய் சேந்துட்டாங்க, எல்லாம் என் விதி”


“அப்பா இப்போது ஏன் அதை எல்லாம் போட்டு குழப்பிக்கொண்டு உங்கள் உடல், மன நலனை கெடுத்து கொள்கிறீர்கள்?” என்றார் சத்தியமூர்த்தி.


“இல்லப்பா, முன்னோர்கள் பாவம் போக அப்பவே சேதுக்கரைல போய் திதி குடுத்து தலை முழுகிட்டு அப்டியே திருபுல்லாணி பெருமாளை தரிசிக்க சொல்லி இதோ இவன் அப்பா சொன்னான், தொழில் அது இதுன்னு நான் பண்ணாம விட்டுட்டேன், பாரு அதெல்லாம் பண்ணிட்டு கல்யாணம் பண்ணினா தான் நல்லா இருக்கும், நம்ம வீட்டுல ரோஹித் கல்யாணம் ஆகி அவனுக்கும் பிரச்சனை, சுவேதாவுக்கு கல்யாணம் ஆகி இன்னும் குழந்தை உண்டாகல, இப்போ கிரிஷ் லவ் பண்ரான்னு 24 வயசுலயே கல்யாணம் பண்றோம், சரி நம்ம குடும்பத்துல எல்லாருக்குமே சீக்கிரம் கல்யாணம் பண்றது தான், ஆனா நந்து கல்யாணத்துக்கு முன்னாடியாவது அந்த பரிகாரம் எல்லாம் செஞ்சிடுனும்”


“அப்பா ஜோசியர் என்ன சொல்றாருன்னு கேப்போம்”


“அய்யா சரியா தான் சொல்றாருங்க, இனிமேலாவது உங்க குடும்பத்துல துர்மரணம் நிகழாம இருக்கணும்னா, கல்யாணம் ஆகி உங்க புள்ளைங்க எல்லாம் நல்லா இருக்கணும் னு நினைச்சீங்கன்னா முதல்ல இந்த பரிகாரம் எல்லாம் பண்ணுங்க, குடும்பத்தோட போய் பண்ணுங்க, அப்போ தான் கல்யாணம் எல்லாம் நல்லா படியா நடக்கும், நடந்த கல்யாணத்துல சிக்கல் எதுவும் வராம இருக்கும்”


“சரிங்க ஜோசியரே, நந்தனுக்கு எப்படி இருக்கு?”


“சின்ன வயசுல ரொம்ப கஷ்டப்பற்றுப்பாரே, அதை தவிர அம்சமான ஜாதகம் தான், குரு திசை கூடி வருது, வர வைகாசி மாசத்துக்குள்ள கல்யாணம் பண்ணிடுறது நல்லது, இல்லனா அப்புறம் ரெண்டு வருஷத்துக்கு நினச்சு கூட பாக்க முடியாது”


“வைகாசினா இன்னும் 5, 6 மாசம் தானே இருக்கு” என்றார் கமலா வியப்பு கலந்த கவலையுடன்.


“அதனால என்னம்மா? அவருக்கு பொண்ணு குடுக்க வரிசைல வரணுமே”


“அதெல்லாம் வராங்க ஜோசியரே, ஆனா இவன் ஒத்துக்க மாட்டேங்குறானே”


“அதெல்லாம் நேரம் காலம் சேந்து வந்தா தானா ஒத்துக்க போறாரு, நீங்க பொண்ணு பாக்க ஆரம்பிச்சிடுங்க”


அனைவருக்கும் ஒரே மகிழ்ச்சி.


“சரி ஜோசியரே, அப்டியே எங்க பேரன் ரித்விக் ஜாதகத்தையும் பாருங்க, அவன் அம்மா அப்பாவுக்கு எப்படி இருக்குன்னு”


ரோஹித் ஸ்ரீஜாவை பார்த்தான், அவள் அவனை கவனியாதது போல் குழந்தையை கவனித்து கொண்டிருந்தாள்.


ஜோசியர் இன்னும் சில ஜாதகங்களை பார்த்து கணிப்புகளை சொன்ன பிறகு புறப்பட்டார்.


ராமலிங்கம் “சீக்கிரமா சேதுக்கரை போக ஏற்பாடு செய்யப்பா” என்று சொல்லிவிட்டு தன் அறைக்கு சென்றுவிட்டார்.


“இன்னும் இரண்டு வாரத்தில் கிரிஷ் கல்யாணம், இதில் எப்படி சேதுக்கரை செல்வது?” என்றார் சத்தியமூர்த்தி.


“ஆனா அவர் சொன்னதை கேட்டிங்க இல்ல, பரிகாரம் செஞ்சுட்டு கல்யாணம் பண்ணினா எந்த சிக்கலும் வராதுன்னு, கிரிஷ் வேற கல்யாணம் பண்ணினதும் அவன் மனைவியுடன் US சென்று படிக்க போகிறோம் என்கிறான், எல்லாம் நல்லபடியாக நடக்க வேண்டும், போயிட்டு வந்துடலாம்” கமலா.


“நந்தன் வர வேண்டுமா?” என்றார் சத்தியமூர்த்தி சந்தேகத்துடன்.


“கண்டிப்பா”


“வருவானா?”


“வருவான்” என்றார் கமலா அம்மா உறுதியாக.


“சகுந்தலா வா, இரண்டு நாட்களுக்கு பயணத்திற்கு தேவையான அனைத்தையும் எடுத்து வைத்து கிளம்பும் வழியை பார்ப்போம், ஸ்ரீஜா, நீ உனக்கு ரோஹித்துக்கு, குழந்தைக்கு தேவையானதை எடுத்து வைத்துக்கொள், மற்ற வேலைகளை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம்”


“அக்கா, மாலினியை அழைக்க வேண்டுமா?” 


“ஹ்ம்ம் அவளை வேறு ஞாபகப்படுத்தி விட்டாயா? சரி சொல்ல வேண்டிய முறைக்கு சொல்லிவிடுவோம், அப்புறம் அவள் இஷ்டம்”


வீட்டில் சேதுக்கரை போகும் திட்டம் வடிவம் பெற்றுகொண்டிருந்தது. முந்தைய நாள் மாலினி அத்தை பேசும் போது அலுவலகம் வந்தவன் இன்னும் வீடு திரும்பவில்லை. மாலினி அத்தை புதிதாக ஒன்றும் பேசிவிடவில்லை. அவள் பலமுறை நந்தனை குத்தி பேசி இருக்கிறாள், தன் சிறு வயது ஞாபகம், அம்மா, அப்பா நினைவு வந்தால் அவன் செயலிழிந்து விடுவான், அவன் அவற்றை மறக்க sex ஒரு வடிகாலாக இருந்தது, பொதுவாக மறுநாள் உற்சாகம் ஆகி விடுவான், எல்லா வேலைகளும் கடகடவென்று நடக்கும், ஆனால் இந்த முறை ஸ்ரேயாவிடம் அவனுக்கு அவ்வளவு ஈடுபாடில்லை, பதிலாக மனசோர்வு தான் ஏற்பட்டது. ஒருவேளை நமக்கு ஸ்ரேயா அலுத்து போய்விட்டாளா? வேறு ஒருத்தி வேண்டுமோ? என்று தன்னை தானே கேட்டுக்கொண்டான். “ச்ச ஸ்ரேயா பாவமில்லையா? அப்படி பார்த்தால் இதற்கு முன் இருந்த பெண்கள் எல்லாம் பாவம் இல்லையா? ஹ்ம்ம் உன் தேவைக்காக எத்தனை பெண்களை பயன்படுத்தி இருக்கிறாய்? நான் யாரையும் ஏமாற்றவில்லையே, அவர்கள் கூட அவர்கள் வெற்றிடத்தை நிரப்ப என்னை பயன்படுத்தி கொண்டார்கள் என்று சொல்லலாமே, இருந்தாலும் நீ mature ஆனவன் ஆயிற்றே, நீ ஒழுங்காக இருந்திருக்கலாமே” நந்தன் தன் மனசாட்சியுடன் வாதாடி கொண்டிருந்தான்.


“May I come in sir?”


“Yes”


“வாங்க மது, மணி 6 ஆச்சே, இன்னும் வீட்டுக்கு கிளம்பலையா?”


“Sir இந்த files ல உங்க sign வேணும், இதை முடிச்சுட்டா கிளம்ப வேண்டியது தான்”


“ம்ம் குடுங்க”


“thank you sir” என்று மது வெளியேறப்போனாள்.


“மது ஒரு நிமிஷம்”


“சொல்லுங்க sir”


“சரி விடுங்க, already out of hours, நீங்க கிளம்புங்க”


“it’s ok sir, சொல்லுங்க”


“ம்ம்ம்...நம்ம அம்பத்தூர் branch women employees list வேணுமே”


“sure sir, just name மட்டுமா? இல்ல வேற ஏதாவது details வேணுமா?”


“name, marital status, அட்ரஸ் கொண்டு வாங்க இப்போதைக்கு”


“Sure sir”


ஐந்து நிமிடங்களில் கையில் ஒரு பேப்பருடன் வந்தாள் மது.


அவளை அனுப்பிவிட்டு பேப்பரை பார்த்தான் நந்தன். S வரிசையில் கவனத்தை செலுத்தினான், சஞ்சீவனி, சங்கீதா, சத்யா, சத்யா வில் நின்றான், சத்யா, widow, 4/27 பிள்ளையார் கோயில் தெரு, அமைந்தகரை. நந்தன் ஏதோ யோசனையில் ஆழ்ந்தான்.


ஆஃபிஸில் இருந்து நேராக அமைந்தகரை நோக்கி புறப்பட்டான்.


“காரை பக்கத்து தெருவில் நிறுத்திவிட்டு சத்யா வீட்டிற்கு நடந்து சென்றான், மணி 7 இருக்கும், கதவை தட்டினான், சத்யா திறந்தாள்.


“நீங்களா?”


நந்தன் புன்னகைத்தான், “தருணை பார்க்கலாம் என்று”.


“அவன் வீட்டில் இல்லை” என்றாள் கோபமாக.


“எங்கே சென்றிருக்கிறான்?”


“உங்களிடம் சொல்வதற்கில்லை”


“சரி நான் காத்திருக்கிறேன்” என்று வாசல் படிகட்டில் அமர்ந்தான்.


“ப்ச்ச் இப்படி என் வீட்டு வாசலில் உட்கார்ந்தால் எல்லோரும் என்னை பற்றி என்ன நினைப்பார்கள்?”


நந்தன் எழுந்து அவளை பார்த்து சிரித்தான்.


“ஏன் சிரிக்கிறீர்கள்?”


“ஊர் வாய்க்கு பயப்படும் ஆள் போல் தெரியவில்லையே உங்களை பார்த்தால்? “ என்று குரலில் ஒரு கேலியுடன் சொன்னான்.


சத்யா கூனி குறுகினாள் ஒரு நிமிஷம். பிறகு சுதாரித்து கொண்டு “உங்களுடன் இணைத்து பேசப்படுவதை நான் விரும்பவில்லை” என்றாள் கொஞ்சம் திமிருடன்.


“துரைசாமி என்றால் பரவாயில்லை போல” என்றான் மீண்டும் நக்கலுடன்.


“இதோ பாருங்கள், நீங்கள் யார்? நீங்கள் பெரிய ஒழுக்க சீலனாக இருக்கலாம், இந்த பேர்க்கெட்டு போனவள் வீட்டிற்கு வந்து நீங்கள் ஏன் அசிங்கப்பட வேண்டும்? தயவு செய்து வராதீர்கள்” என்று கோபமாக பேசி கதவை மூடினாள்.


நந்தனுக்கு கொஞ்சம் கஷ்டமாகி விட்டது. கதவை தட்டினான். திறக்கவில்லை. மீண்டும் தட்டினான்.


“ப்ச்ச் உங்களுக்கு ஒரு முறை சொன்னால் புரியாதா?” என்றாள் கதவை திறந்து.


“sorry” என்றான்.


சத்யா அமைதியாக நின்றாள்.


“தருண்...” என்று இழுத்தான் நந்தன்.


சத்யா வெளியே வந்து கதவை மூடிவிட்டு “ஒரு நிமிஷம் வெயிட் பண்ணுங்க” என்று சொல்லிவிட்டு மூன்று வீடுகள் தள்ளி இருந்த ஒரு ஓட்டு வீட்டிற்குள் சென்று தருணை அழைத்து வந்தாள். உடன் இன்னொரு சிறுவனும் வந்தான். நந்தனை பார்த்ததும் தருண் வேகமாக ஓடி வர முயற்சி செய்து ஊன்றுகோல் தடுக்கி கீழே விழ இருந்தான், நந்தன் ஒரு புறமும் சத்யா ஒரு புறமும் அவனை தாங்கி பிடித்தனர்.


“பாத்து நடக்க மாட்டியா? அப்படி என்ன அவசரம்?” என்று சத்யா கடிந்தாள்.


அவள் சொன்னதை பொருட்படுத்தாமல் “வாங்க அங்கிள், எப்போ வந்தீங்க?” என்று நந்தனின் கையை பிடித்து கொண்டான்.


“இப்போ தான்” என்றான் நந்தன் தருண் அருகே முட்டி போட்டு.


“டேய் சின்னு, நான் சொன்னேன் இல்ல, இந்த அங்கிள் தான்”


“அங்கிள் உள்ள வாங்க”


நந்தன் சத்யாவை பார்த்தான். அவள் கவனிக்காதது போல் திரும்பி கொண்டாள். தருண் உள்ளே இழுத்து சென்று அவன் வரைந்த படங்கள், ஸ்கூலில் நடந்த விஷயங்கள் என்று எல்லாவற்றையும் சொல்லிகொண்டிருந்தான். நந்தனுக்கு அவனுடன் நேரம் செலவழிப்பது பிடித்து இருந்தது.


சத்யா வீட்டிற்குள் வரவில்லை.


“அம்மா எங்க தருண்?”


“சின்னு வீட்டுக்கு போய் பாட்டியோட பேசிட்டு இருப்பாங்க அங்கிள்”


நேரம் ஓடியதே தெரியவில்லை நந்தனுக்கு.


சத்யா திரும்பி வந்தாள். படுக்கை அறையில் நந்தனும் தருணும் பேசுவதை பார்த்துவிட்டு படுக்கை அறையின் வெளியே நின்றாள்.


நந்தன் அவளை பார்த்துவிட்டு “சரி தருண், அங்கிலுக்கு டைம் ஆகிடுச்சு, நான் வரேன்” என்று கிளம்பினான்.


“அப்புறம் எப்போ அங்கிள் வருவீங்க?”


நந்தன் படுக்கை அறையை விட்டு அடுப்படி வந்து நின்று சத்யாவை மீண்டும் பார்த்தான். “தெரியல தருண், ஆனா டைம் கிடைக்கும் போது கண்டிப்பா வரேன்” என்று சொல்லிவிட்டு விடை பெற்றான்.

Comments

Popular posts from this blog

Azhagu serial - Magesh - Poorna fan fiction - Episode 27 - 05/10/2018

Azhagu serial - Magesh - Poorna fan fiction - Episode 40 - 28/02/2019

Azhagu serial - Magesh - Poorna fan fiction - Episode 24 - 22/09/2018