Sms ch 11 சேற்றில் முளைத்த செந்தாமரையோ

 அத்தியாயம் 11

அம்மா ஏன்மா இங்கயே நிக்குற? உள்ள வாஎன்று தருண் அழைக்கும் வரை சத்யா வேறு ஏதோ உலகத்தில் நிற்பது போல் நின்று கொண்டிருந்தாள். நந்தன் திரும்பி வராமல் இருப்பதற்காக அவள் பேசிய பேச்சு எதுவுமே வேலை செய்யவில்லை, சொல்லப்போனால் அவன் விரும்பினால் அவளையே கூட எப்படி அடைவது என்று அவனுக்கு தெரியுமாம், ஆனால் அவன் அவளுக்காக வரவில்லையாம், தருணுக்காக தான் வருகிறானாம், இது அவளுக்கு அவமானமா? ஏமாற்றமா? என்று புரியாத அளவு அவன் பேச்சில் அவள் குழம்பி இருந்தாள். இனிமேல் அவனிடம் பேசும் போது கொஞ்சம் ஜாக்கிரதையாக தான் பேச வேண்டும், இதை பற்றி வேறு எதுவும் நினைக்க வேண்டாம், நினைத்தால் அவமானமும் குழப்பமும் தான் மிஞ்சும் என்று நந்தனின் நினைவை பிடிவாதமாக ஒதுக்கினாள்.

 

தருண் அவளிடம் கம்மலை கொடுத்தான். நந்தன் வாங்கி வந்த பொருட்களை பார்த்து கொண்டிருந்த சத்யா கம்மலையும் அவன் தான் வாங்கி வந்திருக்கிறான் என்று நினைத்து குழம்பினாள். “இதுவும் உன்னோட அந்த அங்கிள் வாங்கி குடுத்தாரா?” என்று தருணை மிரட்டும் தொனியில் கேட்க தருண் பயந்து போய் இல்லம்மா, நான் தான் வாங்கினேன், அந்த அங்கிள் 50 ரூபாய் தான் குடுத்தாருஎன்றான்.

 

என்ன சொல்ற? நீ வாங்கினியா? எங்க? எப்போ?”

 

தருண் நடந்த எல்லாவற்றையும் ஒப்பித்தான். “உன் அம்மாவுக்கு என்ன பிடிக்காதே, அதனால எல்லாமே பாட்டி குடுத்த காசுல வாங்கினதுன்னு சொல்லிடுன்னு அந்த அங்கிள் சொன்னாரும்மா, ஆனா நீ எல்லாமே அங்கிள் குடுத்த காசுல வாங்கினதுன்னு நினைச்சுகிட்ட, நான் தான் நெறைய காசு குடுத்து வாங்கினேன், நீ அழுதுட்டே இருந்தியா? உன்ன சந்தோஷப்படுத்த தான் வாங்கினேன்”. சத்யா தருணை அணைத்து கொண்டாள். “இந்த நந்தன் யார்? ஏன் அவனுக்கு தருண் மேல் இவ்வளவு அன்பு? ஒரு பக்கம் தருணுக்கு அவன் அன்பு கிடைத்தால் என்ன? நான் ஏன் தடுக்க வேண்டும்? எனக்கு ஏன் அவனை பார்த்தால் இவ்வளவு கோபம் வருகிறது? அவனை பார்த்தால் அப்படி ஒன்றும் தவறாக தெரியவில்லை, நான் தான் தவறாக நினைக்கிறேன், ஊர் தவறாக பேசினால் பேசிட்டு போகட்டும்? நாம் படும் கஷ்டம் ஊராருக்கு தெரியுமா? நான் மட்டும் நந்தனிடம் ஒரு எல்லையோடு இருந்தால் போதாதா?” இப்படி பல கேள்விகளுடன் சத்யாவின் இரவு கழிந்தது.

 

நந்தன் மறுபக்கம் குதூகலமாக இருந்தான். இரவு சாப்பிட்டு விட்டு தூங்கப்போனவனை கமலா அம்மா கேட்டார்கள். “நந்து என்னப்பா ஏதோ சந்தோஷமா இருக்க மாதிரி தெரியுது?”

 

இல்லையே அம்மா, எப்போதும் போல் தானே இருக்கிறேன்?”

 

இல்ல முகத்துல ஏதோ ஒரு சந்தோஷம் தெரியுது, பிசினஸ்ல ஏதாவது புது முன்னேற்றமா?”

 

அப்படி எல்லாம் ஒன்னும் இல்லையே

 

என்னமோ போ, சந்தோசமா இருந்தா சரி தான், நான் தூங்க போறேன், அடுத்த வாரம் முழுக்க கல்யாண வேலை தான் இருக்கும், உன் ஆஃபீசயே கட்டிக்கொண்டு இருக்காதே, கொஞ்சம் வீட்டில் இருந்து எல்லாவற்றிலும் பங்கெடுத்து கொள்

 

அம்ம்மா நான் என்ன செய்யப்போகிறேன், நான் எதற்கு ஆபீஸ் வேலையை விட்டுட்டு வீட்டில் இருக்க வேண்டும், எல்லாவற்றையும் தான் நீங்கள் எல்லாம் பார்த்து கொள்கிறீர்களே

 

வேலை பார்க்க இல்லை நந்து, சடங்கு, நலுங்கு என்று நெறைய விசேஷம் இருக்கும், சொந்த பந்தங்கள் எல்லாம் வருவார்கள், அவர்கள் உன்னை பார்ப்பார்கள், நீ அவர்களை பார்ப்பாய்...”

 

ஐயோ அம்மா போதும், எங்க சுத்தி எங்க வருவீங்கன்னு தெரியும், நான் தூங்கப்போறேன், good night”

 

அம்மா சொன்ன மாதிரி இன்னைக்கு ஏதோ இனம் புரியாத சந்தோசமா தான் இருக்கு, ஏன்?” நந்தன் படுத்துக்கொண்டே யோசித்தான். “தருணை பார்த்ததால் இருக்கும். சத்யா ஏன் இவ்வளவு லேட்டாக வருகிறாள். சுழற்சி முறையில் தான் spinning mill ல் வேலை செய்ய வேண்டும் என்று விதி முறை வைத்திருக்கிறேனே. குறிப்பிட்ட நேரத்திற்கு மேல் வேலை செய்தால் காட்டன் inhaling அதிகமாகும், நுரையீரல் பாதிக்கபடும், health and safety rules எல்லாம் ஒழுங்காக பின்பற்றுகிறார்களா? Site visit போய் பல மாதங்கள் ஆகி விட்டது. கோயில், கல்யாணம் என்று தள்ளிப்போகிறது. எல்லாம் ஒழுங்காக தான் நடக்கிறதா என்று சீக்கிரமே சென்று பார்க்க வேண்டும்.” இப்படியே நந்தனும் கம்பெனியை பற்றி யோசித்துக்கொண்டே தூங்கிவிட்டான்.

 

மறுநாள் சத்யா வேலைக்கு போகும் போது துரைசாமி காரை நிறுத்தி ஏற சொன்னான். சத்யாவும் ஏறிக்கொண்டாள். “என்ன அந்த வளந்தவன் அடிக்கடி வரான் போல, பாத்தா பெரிய பணக்கார வீட்டு பையன் மாதிரி தான் இருக்கான்?”

 

சத்யா அமைதியாக வந்தாள்.

 

நான் ஒரு முடிவுக்கு வந்துட்டேன், இனிமேல் உன்னை தொந்தரவு பண்ண மாட்டேன்

 

சத்யா அவனை நிமிர்ந்து பார்த்தாள்.

 

எவ்வளவு கேட்டாலும் நீ 5 பைசாவுக்கு தேற மாட்டேங்குற, நான் அந்த வளந்தவன் கிட்ட காச வாங்கிக்குறேன்

 

என்ன சொல்ற? அவருக்கும் எனக்கும் ஒரு சம்மந்தமும் இல்லை, அவர் ஏதோ தருண் மேல இருக்க அன்பால வந்து பாத்துட்டு போறாரு, அவர்கிட்ட போய் என் கதை எல்லாம் சொல்லி வைக்காத

 

பாருடா அவன்கிட்ட நல்லவ னு பேர் வாங்க ரொம்ப ஆர்வமா இருக்க போல?”

 

அப்படி இல்ல, அவர் என்னை கெட்டவளா கூட நினைச்சுக்கிட்டும், ஆனால் நம்ம பிரச்சனைல வீணா எதுக்கு அவர இழுக்கணும்?”

 

நீ தான் காசே கண்ணுல காட்ட மாட்டேங்குறீயே மா

 

அண்ணா ப்ளீஸ், அம்மா இருந்தா கண்டிப்பா நான் நீங்க கேக்குற காச வாங்கி குடுத்திருப்பேன் இல்ல

 

ஹேய் ச்சி, யாரு யாருக்கு அண்ணன்? அப்படி எல்லாம் கூப்பிடாத, எனக்கு தேவை காசு, உன் அம்மா கண்டிப்பா கோடி இல்லன்னாலும் லட்சக்கணக்கில விட்டுட்டு தான் போயிருப்பா, அதுல என்ன ஒரு 20 லட்சம் கேக்குறேன், நெறைய கூட இல்ல, 20 லட்சம் அதை குடுக்க மாட்டியா?”

 

அண்ணா அம்மாவை நீங்க தான கடைசியா பாத்தீங்க, அவங்க என்கிட்டே ஒப்படைக்க நினச்ச பொருட்கள், files எல்லாம் நீங்க தான் எடுத்துட்டு போனீங்களாம், அப்புறம் என்கிட்டே கேட்டா நான் எப்படி அவ்வளவு காசு ரெடி பண்ண முடியும்?”

 

பஞ்சாப் போய் வீட்டை வித்து குடு

 

என்கிட்ட எந்த documents உம் இல்லை, அதோட இல்லாம அந்த பாவி நான் எப்போ அங்க வருவேன்னு காத்துகிட்டு இருப்பான், என்னை உயிரோட விட மாட்டான், அப்புறம் உங்களுக்கு காசும் கிடைக்காது, ஒன்னும் கிடைக்காது, அதுவே அம்மா என்கிட்ட குடுக்க நினச்ச documents குடுங்க, நான் எப்படியாவது உங்களுக்கு அந்த 20 லட்சம் குடுத்துடுறேன், documents ஓட அந்த வீடியோவையும் குடுத்துடுங்க, ப்ளீஸ் அண்ணா

 

தோ பாருடா, அந்த வீடியோ தான் என் துருப்பு சீட்டு, அத கொடுத்துட்டா எனக்கு 5 பைசா கிடைக்காது

 

சரி documents ஆவது குடுங்க, உங்களுக்கு நான் பணம் ரெடி பண்றேன், அத விட்டுட்டு எவன் கூடயாவது படுத்து சம்பாரிச்சு குடுன்னு ஏன் torture பண்றீங்க?”

 

அய்யடா எனக்கென்ன ஆசையா? நான் ஒன்னும் கெட்டவன் இல்ல, ஏற்கனவே red light arrest ஆனவ தான நீ, அதனால அப்படி சம்பாரிச்சு குடுன்னு சொன்னேன், ஆனால் நீ பத்தினி வேஷம் போட்டு நடிக்கிற

 

சத்யா கண் கலங்கினாள். “அண்ணா அந்த வீட்டுல நீங்க டிரைவரா இருந்தப்போ உங்களுக்கு என்னை பத்தி தெரியும் இல்ல, தெரிஞ்சவங்களே என்னை பத்தி இப்படி தப்பா பேசினா நான் எங்க போறது?”

 

உன்ன நல்லவ ன்னு தான் மா நானும் நினச்சேன், ஆனால் அந்த விடியோவை பாத்தாலே தெரியுது நீ எவ்வளவு பெரிய கேடின்னு, சரி தோ பாரு, இதை பத்தி எல்லாம் பேச எனக்கு பிடிக்கல, உண்மை தான் நான் அந்த வீட்டுல டிரைவரா இருக்கும் போது என்னை மதிச்சு சோறு போட்ருக்க, குடும்பத்துல ஒருத்தன் மாதிரி என்னை நடத்தி இருக்க, இல்லன்னு சொல்லல, அதனால தான் உன்ன இவ்வளவு நாள் அந்த பொறம்போக்குகிட்ட காமிச்சு குடுக்காம இருக்கேன், 50 லட்சத்துல இருந்து 20 லட்சம் வரைக்கும் இறங்கி வந்துட்டேன், எனக்கும் உயிர் மேல ஆசை இருக்காதா? 20 லட்சம் கிடைச்சா அவன் கண்டுபிடிக்காத ஊருக்கு போய் ஏதாவது தொழில் செஞ்சு பொழச்சிப்பேன்

 

நான் தரேன் அண்ணா, எனக்கு documents குடுங்க, கண்டிப்பா எங்க அம்மா எனக்கு access குடுத்து இருப்பாங்க, அதுல இருந்து எடுத்து நான் தரேன்

 

அட ஏன் மா, நீ வேற, என்கிட்ட எந்த documents உம் இல்ல, சரி விடு, புதுசா உன் வீட்டுக்கு வரானே அந்த வளந்து கெட்டவன், காரை பாத்தியா? நல்ல பணக்காரன், அவன்கிட்ட கேட்டு வாங்கி குடு, ஒன்னு நீ வாங்கி குடு, இல்ல நானே அவன்கிட்ட பேசி வாங்கிக்கிறேன்

 

ஐயோ அண்ணா, ப்ளீஸ் வேண்டாம் நானே எப்படியாவது arrange பண்றேன், எனக்கு கொஞ்சம் டைம் குடுங்க

 

பாதி வழியில் சத்யாவை துரைசாமி இறக்கி விட்டுட்டு காரை ஓட்டிக்கொண்டு சென்றான். சத்யாவிற்கு தலை வலி அதிகமாகியது. கண்கள் இருட்டிக்கொண்டு வந்தது. சமாளித்துக்கொண்டு வேலைக்கு சென்றாள்.

 

dyeing பிரிவில் வேலை செய்யும் போது மணிமாறன் உதவி செய்கிறேன் பேர்வழி என்று சத்யாவின் கையை தொடுவதும், உரசுவதுமாக இருந்தார். சத்யா கவனிக்காதது போல் அவரிடமிருந்து விலகி இருக்க முயற்சி செய்தாள். மணிமாறன் மேலும் மேலும் வேலைகளை கொடுத்துக்கொண்டே இருந்தார். “இன்னைக்கு இதெல்லாம் முடிச்சுட்டு தான் நீ கிளம்பனும் சத்யா, இந்த section வந்து ஒரு வாரத்திற்கு மேல் ஆகப்போகிறது, ஆனால் இன்னும் வேலை செய்ய தெரியவில்லை, ரொம்பவே மெதுவாக வேலை செய்கிறாய், இன்னைக்கு எவ்வளவு நேரம் ஆனாலும் முடித்து விட்டு தான் செல்லவேண்டும்”.

 

சார் ஏற்கனவே ஒரு வாரமா எனக்கு நெறைய வேலை கொடுத்து லேட்டா தான் வீட்டுக்கு போறேன், வீட்டுல பையன் தனியா இருப்பான், என்னை மறுபடியும் spinning mill section லேயே மாற்றி விடுங்கள் சார்

 

அங்கே நீ வேலை செய்ய விருப்பம் இல்லை என்பது போல் பேசினியாமே, அதனால் தானே இங்கே மாற்றினார்கள்

 

பரவால்ல சார், நான் இனி அங்கே எந்த குறையும் சொல்லமாட்டேன், என்னை அங்கேயே மாற்றி விடுங்கள்

 

மணிமாறன் சத்யாவின் அருகில் வந்து மெதுவாக சொன்னார்.

 

கொஞ்சம் வெளியே வா, உன்னிடம் ஒன்று பேச வேண்டும்

 

இல்ல இங்கயே சொல்லுங்க

 

இங்க பாரு, நீ யாருன்னு எனக்கு தெரியும், கொஞ்சம் adjust பண்ணிக்கோ, இங்கயே உனக்கு எல்லா வசதியும் செய்து தருகிறேன், வேலையே நீ செய்ய வேண்டியதில்லை”.

 

 சத்யா திகைத்தாள். “உங்களுக்கு என்னை பற்றி என்ன தெரியும்?”

 

மும்பைல நான் உன்ன பாத்திருக்கேன்

 

சத்யாவிற்கு வேர்த்தது.

 

பயப்படாத நான் யார்கிட்டயும் சொல்ல மாட்டேன், இப்போவாவது வெளில வரியா? அங்க போய் தெளிவா பேசிக்கலாம்

 

நந்தன் காலையிலேயே அம்பத்தூர் கிளையை பார்ப்பதற்காக நேராக அம்பத்தூர் தொழிற்சாலையை நோக்கி காரை செலுத்தினான். காரை நிறுத்தும் போது கொஞ்ச தூரத்தில் மணிமாறனும் சத்யாவும் பேசிக்கொண்டிருப்பதை பார்த்தான்.

 

சத்யா நீங்க என்னை ஏதோ தப்பா புரிஞ்சுகிட்டு இருக்கீங்கஎன்றாள்.

 

மணிமாறன் தப்பா எல்லாம் புரிஞ்சுக்கல, மும்பைல எல்லாரையும் கைது செய்யும் போது நானும் அங்க தான் இருந்தேன், அது மட்டுமில்ல, உன் விஷயம் மட்டும் பெருசாகி பெரிய கேஸ் ஆச்சே, அது எல்லாமே எனக்கு தெரியும், நான் சொல்ற மாதிரி நடந்துகிட்டா இந்த விஷயத்தை வேற யார்கிட்டயும் சொல்ல மாட்டேன், உனக்கு வேலையும் அதிகம் இல்லாம பாத்துக்கிறேன்

 

ப்ளீஸ் சார், இந்த வேலை இல்லைன்னா நானும் என் பையனும் பிச்சை தான் எடுக்கணும், தயவு செஞ்சு இதை யார்கிட்டயும் சொல்லாதீங்ககைக்கூப்பி வேண்டினாள்.

 

சொல்ல மாட்டேன், அப்டின்னா நான் சொல்ற மாதிரி நடந்துப்பியா?”

 

நான் அந்த மாதிரி பொண்ணு இல்ல சார், தெரியாம நான் அந்த red light area வுல மாட்டிகிட்டேன், தயவு செஞ்சு என்னை விட்டுடுங்க

 

நந்தன் இறங்கலாமா? வேண்டாமா? ஏன் சத்யா மணிமாறனிடம் கைக்கூப்பி வேண்டி அழுகிறாள்?” என்று யோசித்து கொண்டே பார்த்து கொண்டிருந்தான்.

 

இங்க பாரு, உடனே எல்லாம் நீ பதில் சொல்ல தேவை இல்லை, மெதுவா சொன்னா போதும், நான் கெட்டவன் எல்லாம் இல்ல, என் மனைவியால எனக்கு சந்தோஷம் இல்ல, அதான் கேக்குறேன், இப்போ யாராவது பாக்கறதுக்கு முன்னாடி போய் வேலைய பாக்கலாம், உள்ள வாஎன்று சொல்லிவிட்டு மணிமாறன் உள்ளே சென்றான்.

 

சத்யா நிற்க முடியாமல் தடுமாறி பக்கத்தில் இருந்த சுவரை பிடித்து கொண்டாள். மீண்டும் இருட்டிக்கொண்டு வந்தது. தலையை சுற்றியது. உலகமே சுழல்வது போல் தோன்றியது. தலையை பிடித்துக்கொண்டு கீழே விழப்போனாள், நந்தன் அவள் விழாமல் தாங்கி பிடித்தான். “நீங்களா....” என்று சொல்லிக்கொண்டே மயங்கி சரிந்தாள் சத்யா.

Comments

Popular posts from this blog

Azhagu serial - Magesh - Poorna fan fiction - Episode 27 - 05/10/2018

Azhagu serial - Magesh - Poorna fan fiction - Episode 40 - 28/02/2019

Azhagu serial - Magesh - Poorna fan fiction - Episode 24 - 22/09/2018