Sms ch 6 சேற்றில் முளைத்த செந்தாமரையோ

த்தியாயம் 6

நந்தன் வீட்டிற்கு சென்று refresh செய்து கொண்டு படுக்கையில் விழுந்தான். டக் டக் என்று கதவை தட்டும் சத்தம்.

 

உள்ள வாங்க

 

கமலா அம்மா உள்ளே வந்தார்கள்.

 

அம்மா நீங்களா? Intercom ல் அழைத்து இருக்கலாமே, நானே கீழே வந்திருப்பேனே?”

 

பரவால்லை பா, நீ சாப்பிட வருவாயோ மாட்டாயோ என்று நானே இங்கு கொண்டு வந்துவிட்டேன், இந்த தோசையை சாப்பிடு முதலில்என்று தட்டை நந்தனிடம் கொடுத்து விட்டு அறையை சுற்றி பார்த்தாள்.

 

ஒரு பக்கம் லேப்டாப், மொபைல், ipad என்று இருக்க, இன்னொரு பக்கம் files, பேப்பர்கள் பரவி இருக்க, இன்னொரு பக்கம் கொஞ்சம் துணிகள் பரவி கிடந்தன.

 

என்னப்பா இது? எப்பவும் அறையை சுத்தமாக ஒழுங்கு படுத்தி வைத்திருப்பாயே? இப்போது என்ன இப்படி கிடக்கிறது? அமுதா கூட சின்ன அய்யா அறை தான் சுத்தமாக இருக்கும், எனக்கு வேலை குறைவாக இருக்கும் என்று அங்கலாய்த்து கொள்வாள், நாளை காலை அமுதாவை சுத்தம் செய்ய சொல்கிறேன்

 

நந்தன் மெலிதாக புன்னகைத்தான்.

 

இன்னைக்கு ஜோசியரை வர வச்சிருந்தோம்

 

நிஜமாகவா? என்ன விசேஷம்? கிரிஷ்க்கு கூட பொருத்தம் நாள் எல்லாம் பார்த்துவிட்டீர்களே?” என்று வியப்புடன் கேட்டான் தோசையை சாப்பிட்டு கொண்டே.

 

உனக்காக தான் பா

 

எனக்காகவா? ஏன்?”

 

உன் திருமணத்திற்கு கேட்க தான் அழைத்தோம்

 

அம்மா ப்ளீஸ்...”

 

இருப்பா சொல்லி விடுகிறேன், உனக்கு இன்னும் 5, 6 மாதங்களில் திருமணம் செய்து விட வேண்டுமாம், தவறினால் இரண்டு வருஷத்துக்கு திருமணம் பற்றி பேசவே கூடாதாம்

 

அப்படியானால் நான் இன்னும் 5, 6 மாதங்களுக்கு உங்களை சமாளிக்க வேண்டும், அப்புறம் ரெண்டு வருஷம் free” என்றான் சிரித்து கொண்டே.

 

விளையாடாதே நந்து, சரி இப்போது உன்னோடு அதை பற்றி தர்க்கம் செய்ய விரும்பவில்லை, நம் குடும்ப நலனுக்காக முன்னோர்கள் பாவம் சாபம் எல்லாம் நீங்க நாம் சேதுக்கரை சென்று முன்னோர்களுக்கு திதி கொடுக்க வேண்டுமாம், நீயும் வர வேண்டும், இந்த சனி ஞாயிறு சென்று வந்து விடலாம், வருவாய் அல்லவா?”

 

நந்தன் முகத்தில் ஒரு வருத்தம் தெரிந்தது. “வருகிறேன்என்றான்.

 

கமலா அம்மா அவன் முகத்தில் நிழலாடிய வருத்தத்தை கவனிக்க தவறவில்லை.

 

உடனே சம்மதித்து விட்டாயே, இதில் எல்லாம் நம்பிக்கை இல்லை என்று ஏதாவது வாதாடுவாயோ என்று நினைத்தேன்என்று புன்னகையுடன் கேட்டார்கள்.

 

அம்மா, அப்பா ஆத்மா சாந்தி அடையும் இல்லையா மா?” என்றான் எங்கோ பார்த்தபடி.

 

கமலா அம்மா பெருமூச்சு விட்டார்கள்.

 

நிச்சயமாக நந்து, இப்போதும் கூட உன்னை பெருமையோடு பார்த்து கொண்டிருப்பார்கள்

 

பெருமையோடா?” என்று விரக்தியுடன் சிரித்தான்.

 

இல்லையா பின்ன? நல்லா படிச்சு, வெளிநாட்டுக்கு போய் மேற்படிப்பு எல்லாம் படிச்சு, நலிந்து போய் இருந்த நம் தொழிலை தூக்கி நிறுத்தி இந்த குடும்பத்தில் இன்று எல்லோரும் வசதியாக இருக்க உழைத்து, எல்லா நல்லா குணங்களுடன் நீ வளர்ந்திருப்பதை பார்த்து அவர்கள் பெருமை கொள்வார்கள் நந்து

 

அதற்கெல்லாம் நீங்களும் அப்பாவும் தானே அம்மா காரணம், ஆனால் நான் ஒரு சில விஷயங்களில் உங்களை கஷ்டப்படுத்துகிறேன் என்று அறிவேன், அதை நினைத்தால் என்னை பெற்ற தாய், தந்தை என்னை பார்த்து பெருமைப்படமாட்டார்கள்

 

அதெல்லாம் விடு, முதலில் சேதுக்கரை சென்று நம் முன்னோர்களுக்கு திதி கொடுப்போம், அப்படியே திருபுல்லாணி பெருமாளை தரிசிக்க வேண்டும், அங்கே வந்து கோயில் வர மாட்டேன் என்று சொல்ல கூடாதுஎன்று செல்லமான கண்டிப்புடன் கமலா அம்மா சொன்னார்கள்.

 

அம்மா நான் என்று கோயிலுக்கு வர மறுத்துள்ளேன்? நீங்கள் நினைப்பது போல நான் நாத்திகன் இல்லை, எனக்கும் ஆன்மீக எண்ணங்கள் உள்ளன, நெறைய முறை நான் கோயில்களுக்கு சென்றுள்ளேன்என்றான் புன்னகையுடன்.

 

நிஜமாவா? நாங்கள் அழைத்தால் மட்டும் 1008 சாக்கு போக்கு சொல்வாயே?”

 

நீங்கள் எனக்கு திருமணம் ஆக வேண்டும், அதை செய்யவேண்டும், இதை செய்யவேண்டும் என்று சொல்வீர்கள், அதனால் மறுத்திருப்பேன், மற்றபடி எனக்கு கோயிலுக்கு போக பிடிக்கும்

 

எப்படியோ அப்பப்போ கோயிலுக்கு போனா சந்தோஷம் தான் பா எனக்கு, அப்புறம் என்ன? நாளைக்கு உனக்கு பயணத்திற்கு தேவையானவற்றை எடுத்து வைத்து விடுகிறேன்

 

அம்மா அதெல்லாம் நான் பார்த்துக்கொள்கிறேன், நீங்கள் உடம்பை போட்டு அலட்டிக்கொள்ள வேண்டாம்

 

இதில் எனக்கு ஒரு கஷ்டமும் இல்லை, உனக்கு செய்யாமல் வேறு யாருக்கு செய்ய போகிறேன், ஹ்ம்ம் கவிதா பெரியவளாகும் வரை அவளை பேணி வளர்ப்பதிலேயே என் காலம் மகிழ்ச்சியாக சென்றுவிட்டது. அவள் சென்றதும் நான் உடைந்து உட்கார்ந்து விட்டேன், அப்போது தான் 7 வயது பையனாக நீ இந்த வீட்டிற்கு வந்தாய், என் தாய்மைக்கு மீண்டும் ஒரு அர்த்தம் கொடுத்தாய், நந்தா நீயாவது என் கடைசி மூச்சு வரை என்னுடன் இருப்பாய் அல்லவா?” என்று நந்தனின் கைகளை பற்றி கலக்கத்துடன் கேட்டார்கள் கமலா அம்மா.

 

அம்மா உங்களுக்கு இப்படி ஒரு சந்தேகம் வரலாமா? உங்களை விட்டு நான் எங்கும் செல்லமாட்டேன், தாய் தந்தையை இழந்து கேட்பாரற்று கிடந்த போது அப்பா என்னை கண்டுபிடித்து அழைத்து வந்தார். எனக்கு அம்மா இல்லாத குறையை போக்கினீர்கள், நீங்களும் அப்பாவும் இல்லாத வாழ்க்கையை என்னால் கற்பனை கூட செய்ய இயலாது.”

 

கமலா அம்மா சேலை தலைப்பால் கண்களை துடைத்து கொண்டு, நந்தனின் தலை முடியை கோதி விட்டு எழுந்தார்கள்.

 

சரி நந்து, நீ தூங்கு, கலைத்து போய் இருக்கிறாய்

 

ம்ம் சரிம்மா

 

கமலா அம்மா சென்றதும் நந்தனின் நினைவுகள் தருண், சத்யாவிடம் சென்றன. “ச்ச சத்யாவிடம் சில முறை குற்றம் கண்டுபிடிப்பவனாக நடந்து கொள்கிறேன், அவள் என்ன தவறு செய்தாள்? தருணை அன்றிறவு தனியாக விட்டுவிட்டாள் என்ற கோபமா? தன் கணவன் அல்லாத ஒருவனுடன் பின்னிரவில் காரில் சென்று வந்தாள் என்ற கோபமா? இல்லை அவள் மீது லேசாக மது வாடை வந்ததே அந்த கோபமா? அவளை யாரென்றே எனக்கு தெரியாதே, தெரியாத ஒருத்தியை பற்றி தரக்குறைவாக நினைப்பது தவறில்லையா? நான் எங்கே அவளை தரக்குறைவாக நினைத்தேன்? இல்லை, இல்லை உதவி செய்தவனிடம் கொஞ்சம் மதியாதது போல் பேசினாளே? அது தான் என்னை கொஞ்சம் கோபப்படுத்தி இருக்க வேண்டும், பார்க்க சின்ன பெண்ணாக இருக்கிறாள், அவளுடன் சரிக்கு சரி பேசாமல் நான் தான் கொஞ்சம் அமைதியாக இருக்க கற்றுக்கொள்ள வேண்டும், பாவம் இந்த சிறு வயதிலேயே கணவனை இழந்து ஏதோ சூழ்நிலையால் என்ன தவறு செய்தாளோ தெரியவில்லை, பேர்க்கெட்டு நிற்கிறாள், நான் ஏன் அவளுக்காக இதெல்லாம் யோசிக்க வேண்டும், என்னிடம் மரியாதையாக பேசினால் நானும் மரியாதையாக நடத்த போகிறேன், குறைந்த பட்சம் அந்த துரைசாமியால் தருணுக்கு ஏதும் பிரச்சனை வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும், அந்த துரைசாமி யார்? அவளுக்கும் அவனுக்கும் சுமூகமான உறவு இருப்பது போல் தெரியவில்லையே, நடுத்தர வயதுக்காரனாக வேறு இருக்கிறான், ஏதோ மிரட்டுகிறான், இவள் ஏன் அவனுடன் செல்ல வேண்டும்?” நந்தன் புரண்டு படுத்தான். சத்யாவிற்கு பெற்றோர்கள் எங்கே இருப்பார்கள்? உடன் பிறந்தவர்கள்? சொந்தக்காரர்கள்? மீண்டும் புரண்டான். எழுந்து உட்கார்ந்தான். “ச்ச நான் ஏன் இவளை பற்றி சிந்தித்து குழம்புகிறேன், தருணை பிடித்து இருந்தால் அவ்வப்போது போய் பார்த்து பேசிக்கொள்ள வேண்டியது தான், அவள் அனுமதித்தால் தருணுக்கு ஏதேனும் உதவி செய்யலாம். வீணாக இப்படி போட்டு குழப்பி ஏன் தூக்கத்தை கெடுத்து கொள்ளவேண்டும்? ஒரு வழியாக நந்தன் தூங்கினான்.

 

அமைந்தகரையில் சத்யாவும் தூங்க முயன்று கொண்டிருந்தாள். தருண் அமைதியாக உறங்கி கொண்டிருந்தான். “யார் இந்த நந்தன்? எங்கிருந்து வந்தான்? அவன் ஆளாக இருப்பானோ என்று யோசித்தால் அப்படியும் தெரியவில்லை, தருண் மீது அப்படி என்ன பாசமும் பரிவும்? இது தருண் மீதான பாசமா? இல்லை எனக்கு விரித்த வலையா? நடை, உடை, கார் எல்லாம் பார்த்தால் பணக்கார வீட்டு பையனாக தெரிகிறான், அவன் இவன் என்று சொல்லலாமா? கண்டிப்பாக 30 வயதாவது இருக்கும் என்று நினைக்கிறேன், இருந்துட்டு போகட்டும், அதற்காக மரியாதை கொடுக்க வேண்டுமா என்ன? வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் என்னை மட்டம் தட்டுகிறானே, அவனுக்கு நான் ஏன் மரியாதை தர வேண்டும், என் ஒழுக்கத்தை பற்றி இவனுக்கு என்ன கவலை? தருணை அன்றிறவு பாதுகாப்பாக அழைத்து வந்தான், சரி, அதற்காக நான் நன்றி சொல்லலாம், ஆனால் அளவுக்கு அதிகமாக அவன் ஏன் என் வாழ்க்கையில் மூக்கை நுழைக்க வேண்டும்? தருண் சின்ன பையன், அவன் கேட்டான் என்று முன்பின் தெரியாத ஒரு பெண் இருக்கும் அறையில் இவன் தூங்கலாமா? கண்டிப்பாக இவனுக்கு நல்ல எண்ணம் ஏதும் இருப்பதாக தெரியவில்லை, இதற்கு முன் நான் சந்தித்த ஆண்களை போல் என் உடம்பிற்கு ஆசைப்பட்டு வருபவனாக தான் இவன் இருக்க வேண்டும், ஆனால் இவன் கில்லாடி தான், தருண் மூலம் என்னை அடைய நினைக்கிறான், கேவலமானவன் தான் இவனும், ஏனோ தெரியவில்லை அவனை பற்றி தெரிந்திருந்தும் இன்னும் கடுமையாக நடந்துகொள்ள முடியவில்லை, தருணுக்கு அவனை பிடித்திருக்கிறதே என்று கொஞ்சம் இடம் கொடுத்துவிட்டேன், அடுத்த முறை அவனை பார்க்கும் போது கடுமையாக எச்சரித்து துரத்தி விட வேண்டும், இவனுக்கு மனைவி இருந்தால் பாவம் அவள்சத்யா புரண்டு படுத்து பிடிவாதமாக நந்தனின் நினைவுகளை தவிர்த்து தூங்க முயன்றாள்.

 

சத்தியமூர்த்தி குடும்பம் ஒரு வேனில் சேதுக்கரை நோக்கி புறப்பட்டார்கள். மாலினியும் குடும்பத்துடன் வந்துவிட்டாள். நந்தன், கிரிஷ், ப்ரீத்தி, பிரவீன் எல்லோரும் வேனின் கடைசி சீட்டில் உட்கார்ந்து பேசிக்கொண்டு வந்தார்கள். ராமலிங்கத்தை 90 வயதில் அழைத்து செல்ல எல்லோருமே தயங்கினார்கள். ஆனால் அவர் பிடிவாதமாக சேதுக்கரை, ராமேஸ்வரம் எல்லாவற்றையும் பார்த்து விட வேண்டும், போற உயிர் அங்கே போனால் சந்தோஷம் தான் என்று சொல்லிவிட்டார். ரோஹித்தும் கடைசி சீட்டிற்கு வந்தான்.

 

நந்தன் அவனை தடுத்துதம்பி இது bachelor members க்கு மட்டும் தான், நீ உன் மனைவியோடு போய் உட்கார்என்று சொல்லவும் அனைவரும் சிரித்தனர். ஸ்ரீஜா எதையும் காதில் வாங்காதது போல் வெளியே வேடிக்கை பார்ப்பது போல் பாவலா செய்து கொண்டு வந்தாள்.

 

ரோஹித் அவளை பார்த்துவிட்டு நந்தனை பார்த்துஹேய் நான் பாவம் டா, மனைவியால் கைவிடப்பட்ட அப்பாவி, என்னை நீங்களாவது அரவணைத்து கொள்ளுங்கள்என்று சொல்லி நந்தனுக்கும் கிரிஷ்க்கும் நடுவில் அமர்ந்தான்.

 

ப்ரீத்தி நீ இங்க அம்மா பக்கத்துல வந்து உட்காருஎன்று மாலினி ப்ரீத்தியை கடுகடு என்று அழைத்தாள்.

 

போ மா, நான் இங்கயே ஜன்னல் ஓரமா உக்காந்துக்கிறேன்என்று விட்டாள்.

 

பிரீத்தி, பிரவீன், கிரிஷ், ரோஹித், நந்தன் என்ற வரிசையில் உட்கார்ந்து இளைஞர் பட்டாளம் பேசிக்கொண்டு வந்தார்கள்.

 

நடுவில் ராமலிங்கம் தாத்தாவும், சத்தியமூர்த்தி, கணேஷ் அவர்களும் ஒன்றாக அமர்ந்திருக்க அவர்களுக்கு முன்னால் மாலினியும், கணவரும் உட்கார்ந்து இருந்தார்கள். இன்னொரு பக்கம் கமலா அம்மா, சகுந்தலாவும், அவர்களுக்கு பின்னால் ஸ்ரீஜாவும், அவள் குழந்தை ரித்விக்கும் உட்கார்ந்து இருந்தார்கள். இவர்கள் போக ராமலிங்கம் அவர்களை எப்போதும் பேணி பாதுகாக்கும் கண்ணப்பனும், சத்தியமூர்த்தி வீட்டில் வேலை செய்யும் அமுதாவும் வந்திருந்தார்கள்.

 

திருபுல்லாணி பெருமாள் கோயிலுக்கு அருகில் இருக்கும் ஜீயர் மடத்தில் அவ்வளவு எளிதாக அறைகள் வாடகைக்கு தருவதில்லை. ஆனால் நந்தன் குடும்பத்தாருக்கு அறைகளை கொடுத்து விட்டார்கள். மறுநாள் காலை சூரியன் உதிக்கும் முன்பே நந்தன் எழுந்துவிட்டான். அப்படியே மடத்தை சுற்றி பார்க்கலாம் என்று உலவினான். முதல் தளத்தில் இருந்த அறைகளில் தான் அவர்கள் தங்கி இருந்தார்கள். நந்தன் கீழ் வானம் சிவந்து இருக்கும் அழகை ரசித்து கொண்டே மடத்தின் முன்புறத்துக்கு வந்தான். எதிரே இருந்த பெரிய குளத்தில் தண்ணீர் நிரம்பி இருந்தது. கோயிலையும், மடத்தையும் சுற்றி குடிசை வீடுகளும், ஓட்டு வீடுகளும், தென்னை மரங்களும் தான் தெரிந்தன. நகரங்களில் இருந்து விலகி இருந்த அந்த ஊரும் அதன் அழகும் நந்தனை வெகுவாக கவர்ந்தன. மடத்தின் பக்கத்தில் 108 திவ்ய தேசங்களில் ஒன்றான ஆதி ஜெகன்னாத பெருமாள் கோயில் இருந்தது. அங்கே நெய்வேத்யத்திற்கு தேவையான பிரசாதங்கள் செய்யப்பட்டு பெரிய வாலிகளில் எடுத்து செல்லப்பட்டன. குளத்தை சுற்றி மயில்களும், ஆடுகளும் எந்த அச்சமும் இன்றி உலவியதை பார்க்கும் போது அங்கே வாகனங்களின் போக்குவரத்து குறைவு தான் என்பதை காட்டியது. நந்தன் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் திதி கொடுக்கும் நோக்கத்துடன் மட்டுமே தான் இந்த இடத்திற்கு வந்தான். ஆனால் இப்படி ஒரு அழகான இடம் என்றால் அடிக்கடி வரவேண்டும் என்று தோன்றியது அவனுக்கு.

 

அப்படியே மாடி படிக்கட்டுகளில் ஏறி மொட்டை மாடிக்கு சென்றான். அங்கே இருந்து பெருமாள் கோயில் நன்றாகவே தெரிந்தது. இப்போது சூரியனும் நன்றாகவே தன் செங்கதிர்களை நீட்டி திருப்புல்லாணியை அணைத்து கொண்டது. நந்தனின் மனம் இலகுவானது. கொஞ்ச நேரம் அந்த ஊரின் அழகில் அப்படியே ஸ்தம்பித்து நின்றது. சிறுவயதில் இருந்து ஓடிக்கொண்டே இருக்கிறான். ஒவ்வொருவர் பார்வைக்கு ஒவ்வொரு விதமாக தெரிந்தது அவன் ஓட்டம், குற்றத்திலிருந்து தப்பிக்க ஓடுகிறான், கவலைகளில் இருந்து தப்பிக்க ஓடுகிறான், படிப்பில் ஜெயிக்க ஓடுகிறான், தொழிலில் ஜெயிக்க ஓடுகிறான், பெண்களை சரசமாட ஓடுகிறான், அவர்களின் பிடியிலிருந்து ஓடுகிறான், திருமணத்திற்கு பயந்து ஓடுகிறான் என்று. அவனும் ஓடிக்கொண்டு தான் இருக்கிறான், மற்றவர்கள் நினைப்பது போல் ஓடுகிறானா என்று தெரியவில்லை, ஆனால் ஓடுவதை நிறுத்திவிட்டால் அவன் தேங்கிவிடுவான் என்று அவனுக்குள் தோன்றியது, என்ன காரணமாக இருந்தாலும் தேங்கி விட கூடாது, அது வலி மிகுந்தது, ஓடிக்கொண்டே இருந்தால் வலி தெரியாது என்பது தான் அவன் கொள்கை. ஆனால் இந்த ஊரின் அழகு அவனை நிறுத்தியது, குறுக்கும் மறுக்குமாக ஓடிக்கொண்டிருக்கும் அவன் எண்ண ஓட்டங்களை நிறுத்தியது, அவன் மனம் இலகுவானது, இது வரை அறியாத ஒரு ஆனந்தம் அவனை சூழ்ந்தது, தன்னையும் அறியாமல் கீழே முழங்காலிட்டு அமர்ந்து கண்களை மூடினான், இளம் தென்றல் அவன் கேசத்தையும், சூரியனின் இளம் கதிர்கள் அவன் கன்னத்தையும் வருடின. அதே சமயத்தில் சேலை கட்டிய தேவதை போன்ற ஒரு பெண் அவன் எதிரே குனிந்து அவளது இடது கையால் அவன் கேசத்தையும், அவளது வலது கையால் அவன் கன்னத்தையும் தழுவி விட்டு சென்றாள், அவன் பார்த்தபோது அவள் திரும்பி நடந்து கொண்டிருந்தாள், யார் இவள் என்று எண்ணமிட்டு கொண்டிருந்த போது ஹலோ அத்தான், என்ன காலைலயே கனவா?” என்ற ப்ரீத்தியின் குரல் கேட்டு கண் விழித்தான், அம்மா, ப்ரீத்தி, ரோஹித் என்று அனைவரும் அவன் எதிரே நின்று சிரித்து கொண்டிருந்தார்கள். “எல்லாம் கனவா?” என்று ஒரு நிமிடம் நந்தன் குழம்பினான். “இதென்ன போஸ் நந்தா? ஏதோ காதல் காட்சிகளில் வரும் ஹீரோ போல் முட்டி போட்டு கண்களை மூடி கனவு காண்கிறாய்?” என்று ரோஹித் கிண்டல் செய்தான். நந்தன் ஒரு புன்னகையுடன் எழுந்து நின்றான். “இங்கே சேலை கட்டிய பெண் யாராவது வந்து செல்வதை பார்த்தீர்களா?” என்று நந்தன் கேட்க மீண்டும் அனைவரும் சிரித்தனர். “நந்தா நாங்கள் தான் இங்கே இருக்கிறோம், வேறு யாரும் வரவில்லைஎன்று ரோஹித் சொல்ல, நந்தன் மனதிற்குள் கனவு தான், ச்ச ஆனால் அந்த பிஞ்சு போன்ற விரல்களின் வருடல் எத்தனையோ பெண்களிடம் பழகி இருந்தும் இது போன்ற ஒரு சுகமான தீண்டல், ம்ம்ம் அவள் யாராக இருக்க கூடும், முகத்தை காட்டி இருக்க கூடாதா?” என்று ஏதேதோ எண்ணங்கள் ஓடின.

Comments

Popular posts from this blog

Azhagu serial - Magesh - Poorna fan fiction - Episode 27 - 05/10/2018

Azhagu serial - Magesh - Poorna fan fiction - Episode 40 - 28/02/2019

Azhagu serial - Magesh - Poorna fan fiction - Episode 24 - 22/09/2018