Azhagu Serial - Mahesh Poorna Fan Fiction - Episode 1 - 16/07/2018
இடம்: பழனிசாமி வீடு
பொழுது: மாலை 6 மணி
ஹாலில் ரவி சுதாவின் குழந்தையை மடியில் வைத்து கொண்டு விளையாடி கொண்டு இருக்கிறான். அதை அழகம்மை பார்த்து ரசித்து கொண்டு இருக்கிறாள். சுதா அடுப்படியில் ஏதோ வேலை செய்து கொண்டிருக்கிறாள். பூர்ணாவும், பழனிசாமியும் ஹாஸ்பிடலில் வசந்தாவை பார்த்து விட்டு, அவளின் உடல் நிலை முன்னேற்றம் அடைந்துள்ளதையும்,அவள் சுய நினைவுக்கு வந்து விட்டதையும் நினைத்து மகிழ்ச்சியுடன் வீடு திரும்புகின்றனர். பூர்ணா வீட்டிற்குள் வந்ததும் அழகம்மை பூர்ணாவை பார்த்து "பூர்ணா கொஞ்சம் நில்லு, எதுக்காக ஹோட்டலில் மகேஷ் காலுல விழுந்து மன்னிப்பு கேட்டு அவனை அசிங்கபடுத்தின? அவன் உன் கோவத்தை குறைச்சுக்கோ, சந்தோஷமா வாழலான்னு தான சொல்லிருக்கான். அதுக்கு எதுக்கு அவன் ஏதோ உன்னை கொடுமை படுத்தி மன்னிப்பு கேக்க சொன்ன மாதிரி நீ காலுல விழுந்து மன்னிப்பு கேட்ட?" மகேஷ் படிக்கட்டில் அழகம்மை பேசுவதை கேட்டு வேகமாக பதட்டத்துடன் ஓடி வருகிறான். பூர்ணா அவனை கோவமாக பார்க்கிறாள். மகேஷ் தயங்கி நிற்கிறான். "அவனை ஏன் முறைக்கிற பூர்ணா? தைரியம் இருந்தா என்கிட்டே பேசு, நீ தப்பு மேல தப்பு பண்ணிட்டு போய்கிட்டே இருப்ப, அதை நான் பாத்து சும்மா இருப்பேன்னு நினைச்சியா?" என்றாள் அழகம்மை.
உடனே பழனிசாமி வாத்தியார் "நிறுத்து அழகு, எதுக்கு வந்ததும், வராததுமா பூர்ணாவை நிக்க வச்சு கேள்வி கேட்டுட்டு இருக்க?, டேய் மகேஷ், இங்க வா, பூர்ணாகிட்ட எங்க அம்மாவை நான் எதிர்த்து பேசினதே இல்ல, இன்னைக்கு பேசிட்டேனு, ஏதோ அதுக்கு காரணம் பூர்ணாதாங்குற மாதிரி பேசினியா? நீ அப்டி பேசினா அவ உன்கிட்ட மன்னிப்பு கேக்காம என்ன பண்ணணுன்னு எதிர் பாக்குற? தப்பு அழகு மேல, நீ அதை கேள்வி கேட்ட, இதுக்கு எதுக்கு நீ வருத்தப்படணும்? நானே தப்பு பண்ணினாலும் நீ என்கிட்டே கேக்கலாம். இப்போ பூர்ணாவுக்கு தேவை உன் புரிதலும், அன்பும், துணையும் தானே தவிர, நீ கோவப்பட்டதுக்கெல்லாம் அவ பழி சுமக்கணும் னு நினைக்காத. பூர்ணா இங்க வா, இனிமேல் உனக்கு எல்லாமே மகேஷ் தான், அவன் மனசு வருத்தப்படுற மாதிரி நடந்துக்கிட்டா அவன்கிட்ட சொல்லி புரிய வை. இல்லை மாமா நான் எதுக்கு இருக்கேன், என்கிட்டே சொல்லு. அதைவிட்டுட்டு அவன் உன்ன ஒன்னு சொன்னா நீ உடனே பதிலுக்கு அவனை கஷ்ட படுத்தனுனு நினைக்காத. நீயும் அவனும் ஒத்துமையா இருக்கணும், அதுக்கு முயற்சி பண்ணுவீங்களா ரெண்டு பேரும்? என்று பழனிசாமி கேட்க, பூர்ணாவும் மகேஷும் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டு நின்றனர். "உங்க ரெண்டு பேரை தான் கேக்குறேன்?", இருவரும் தலையை குனிந்து கொண்டு "சரி" என்று தலை ஆட்டினர் . "சரி போங்க". உடனே அழகம்மை "என்னங்க நீங்க, அப்டினா பூர்ணா ஹோட்டலில் நடந்ததை கண்டிக்க மாட்டிங்களா?" "அழகு இந்த பேச்சை இதோட விடு, அவங்கவங்க பண்ணின தப்புக்கு கண்டிக்கணும், தண்டிக்கனுன்னு உனக்கு உண்மையா தோணுச்சுனா யாரு இதுக்கெல்லாம் முதல் காரணனுனு யோசிச்சு அங்க இருந்து ஆரம்பி உன் கண்டிப்பை, எனக்கு இப்போ தூக்கம் வருது" என்று சொல்லிவிட்டு பழனி சாமி வாத்தியார் தூங்க சென்றார்.
மகேஷ்-பூர்ணா படுக்கை அறை : "பூர்ணா, ரெண்டு பேருமே வீட்டுக்கு வந்துடீங்களே, அத்தைய யார் பாத்துப்பா? அத்தை எப்படி இருக்காங்க?" என்று வினவினான் மகேஷ். பூர்ணா அவனை ஒரு பார்வை பார்த்துவிட்டு "அப்பாடா உங்களுக்காவது விசாரிக்கனுன்னு தோணுச்சே, இப்போ பரவால்ல, கண்ணை முழிச்சு பாத்தாங்க, பேசினாங்க, இனிமேல் பயப்பட வேண்டான்னு டாக்டர் சொல்லிட்டாரு. அம்மா-வோட friend கௌரி aunty தான் பாத்துக்குறாங்க. நானும் இருக்கேனு தான் சொன்னேன். அம்மா தான் கட்டாய படுத்தி அனுப்பி விட்டுட்டாங்க." என்றாள் பூர்ணா. "ஓ பரவால்ல பூர்ணா, கேக்கவே ரொம்ப சந்தோஷமா இருக்கு, நாளைக்கு காலைல நாம அத்தைய பொய் பாக்கலாம்." என்றான் மகேஷ். "ம்ம் சரி" என்று சொல்லிவிட்டு refresh செய்து கொண்டு பூர்ணா தூங்க சென்றாள்.
Comments
Post a Comment